• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /விளையாட்டு
  • /TNPL Final: கோவை கிங்ஸ் சாம்பியன்... 3வது முறையாக கப் அடித்தார் ஷாருக்கான்

TNPL Final: கோவை கிங்ஸ் சாம்பியன்... 3வது முறையாக கப் அடித்தார் ஷாருக்கான்

TNPL Final 2026: டிஎன்பிஎல் 2026 தொடரின் இறுதிப்போட்டியில் மதுரை பேந்தர்ஸ் அணியை 84 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, VIDA கோவை கிங்ஸ் அணி 3வது முறையாக கோப்பையை வென்றுள்ளது.

Written BySudharsan G
Published: Aug 28, 2026, 22:38 IST|Updated: Aug 28, 2026, 23:17 IST
joinshare
TNPL Final: கோவை கிங்ஸ் சாம்பியன்... 3வது முறையாக கப் அடித்தார் ஷாருக்கான்
Image Credit: TNPL Finals 2026 MP vs VKK | Image Source : X/@TNPremierLeague

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
தவெக எம்எல்ஏ வீட்டைச் சுற்றி வளைத்த சிறப்புப் படை: கள்ளக்குறிச்சியில் உச்சக்கட்ட பரபரப்பு!

தவெக எம்எல்ஏ வீட்டைச் சுற்றி வளைத்த சிறப்புப் படை: கள்ளக்குறிச்சியில் உச்சக்கட்ட பரபரப்பு!

2

Explainer: LPG விலை முதல் கிரெடிட் கார்ட், ஆயுள் சான்றிதழ் வரை.... டிசம்பர் 1 முதல் முக்கிய மாற்றங்கள்

3

பவுலர் ஸ்டம்பை குறிவைத்து வீசலாம்.. பேட்டர் இல்லாமலேயே விக்கெட்! என்ன இந்த Free Ball Rule?

4

நவம்பர் 26.. அரசியல் சாசனத்தை எரித்த பெரியார்.. காரணம் என்ன? நாட்டையே உலுக்கிய வரலாறு

5

TVK Education Awards: தவெக கல்வி விருது விழாவில் CM விஜய் உரையின் 10 முக்கிய அம்சங்கள்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

தமிழ்நாடு பிரீமியர் லீக் 2026 தொடரின் இறுதிப்போட்டியில் மதுரை பேந்தர்ஸ் - VIDA கோவை கிங்ஸ் அணிகள் இன்று மோதின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்கிய இறுதிப்போட்டியை காண 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகை புரிந்தனர்.

பரபரப்பான இறுதிப்போட்டியில் கோவை கிங்ஸ் அணி கேப்டன் ஷாருக்கான் பேட்டிங்கை தேர்வு செய்தார். 2.5 ஓவரிலேயே 34 ரன்கள் அடித்த கோவைக்கு நல்ல தொடக்கம் கிடைத்தாலும், அடுத்தடுத்த பந்துகளில் ஓபனர்கள் ஆட்டமிழந்தனர்.

ஆன்ட்ரே சித்தார்த் மிரட்டலடி

2வது ஓவரின் கடைசி பந்தில் சரவணன் பந்துவீச்சில் சுரேஷ் லோகேஷ்வர் 11 ரன்களுக்கும், அடுத்து 3வது ஓவரின் முதல் பந்தில் ராதாகிருஷ்ணன் 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

Andre Siddarth brought the fireworks to the final! 💥

📺 Watch the Shriram Capital TNPL 2026 Final LIVE on Sony Sports Ten 4 Tamil & the TNPL YouTube Channel.#TNPL10 #TNPL2026 #NammaOoruNammaGethu #Season10SemmaGethu #DecadeOfKondattam pic.twitter.com/rrShslXEkG

— TNPL (@TNPremierLeague) August 28, 2026

அடுத்து 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சச்சின் - ஆன்ட்ரே சித்தார்த் ஜோடி கோவைக்கு பெரும் நம்பிக்கையை அளித்தது. இந்த ஜோடி 12 ஓவர்களுக்கு மேல் பேட்டிங் செய்து 117 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தது.

சரவணன் இருக்க பயமேன்...

16வது ஓவரில் சரவணன் மீண்டும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். சிறப்பாக விளையாடி வந்த ஆன்ட்ரே சித்தார்த்தை 3வது பந்திலும், கேப்டன் ஷாருக்கானை கடைசி பந்திலும் ஆட்டமிழக்கச் செய்தார். ஆன்ட்ரே சித்தார்த் 47 பந்துகளில் 7 பவுண்டரி, 5 சிக்ஸர் என 82 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். ஷாருக்கான் 1 ரன்னில் அவுட்டானார்.

தொடரின் அதிக ரன்கள் - சச்சின் முதலிடம்

அதேபோல், 18வது ஓவரிலும் சரவணன் சச்சினின் விக்கெட்டை எடுத்தார். அவர் இன்று நிதான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார், 33 பந்துகளில் 3 பவுண்டரி, 1 சிக்ஸரை அடித்து 39 ரன்களை எடுத்தார். இதன்மூலம், நடப்பு சீசனில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்தார், சச்சின்.

கடைசியில் சொதப்பிய கோவை

அடுத்த ஓவரில் அம்ப்ரிஷ் 6 ரன்னிலும், 19வது ஓவரில் தீபன் லிங்கேஷ் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசி கட்டத்தில் கோவை அணிக்கு ரன்களே வரவில்லை. அதாவது 16 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்களை அடித்த கோவை அணி, கடைசி 4 ஓவர்களில் வெறும் 29 ரன்களை மட்டும் அடித்து 3 விக்கெட்டை இழந்தது.

183 ரன்கள் இலக்கு

மதுரை பேந்தர்ஸ் அணி 2வது முறையாக டிஎன்பிஎல் கோப்பையை வெல்ல 183 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. குவாலிபயர் 2 போட்டியில் கோல்டன் ஹாட்ரிக்கை எடுத்த தீபன் லிங்கேஷ் இன்றும் முதல் ஓவரின் முதல் பந்திலேயே விக்கெட் எடுத்து மிரட்டினார். ஓபனர் ராம் குமார் டக்அவுட்டானார்.

பவர்பிளேவில் வீழ்ந்த 3 விக்கெட்

மணிமாறன் சித்தார்த் வீசிய 2வது ஓவரில் மற்றொரு ஓபனர் சித்தார்த் மகாதேவன் டக்அவுட்டானார். 6வது ஓவரில் ஹரி ராகவேந்திரா 24 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால், மதுரைக்கு தொடக்கம் சுமாராக அமைந்தது. பவர்பிளே முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 51 ரன்களை மதுரை அணி அடித்தது.

என்.எஸ். சதுர்வேத் ஆறுதல்

சிறப்பாக விளையாடி வந்த என்.எஸ். சதுர்வேத் 28 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 40 ரன்களை அடித்து 9வது ஓவரின் கடைசி பந்தில் ஜாதவேத் சுப்ரமணியன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரில் சோயப் முகமது கான் 1 ரன்னில் தீபன் லிங்கேஷ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அப்போது மதுரை அணி 9.4 ஓவரில் 79 ரன்களை அடித்து 5 விக்கெட்டை இழந்திருந்தது.

A crucial moment as Jhathavedh picks up the wicket of Chaturved! 💥

📺 Watch the Shriram Capital TNPL 2026 Final LIVE on Sony Sports Ten 4 Tamil & the TNPL YouTube Channel.#TNPL10 #TNPL2026 #NammaOoruNammaGethu #Season10SemmaGethu #DecadeOfKondattam pic.twitter.com/Ogcy0h5AWl

— TNPL (@TNPremierLeague) August 28, 2026

அடுத்தடுத்து சரிந்த மதுரை அணி

இதற்கு பின் வந்தவர்கள் வரிசையாக பெவிலியன் திரும்பினர். கேப்டன் ஷாருக்கான் இன்று பேட்டிங்கில் சொதப்பினாலும் பந்துவீச்சில் தனது மொத்த வித்தையையும் காட்டினார். 11வது ஓவரை வீசிய அவர் அதிக் உர் ரஹ்மானை செட் செய்து விக்கெட் எடுத்தார். ஷாருக்கான் வீசிய 13வது ஓவரின் முதல் பந்தில் குர்ஜப்னீத் சிங் 2 ரன்களில் ஆட்டமிழந்தார்.

முடித்துவைத்த ஷாருக்கான்

அடுத்த 14வது ஓவரின் கடைசி 2 பந்துகளில் மணிமாறன் சித்தார்த் அடுத்தடுத்து விக்கெட்டை வீழ்த்தினார். ஷாருக்கான் வீசிய 15வது ஓவரின், 2வது பந்தில் பி. விக்னேஷ் மணிமாறன் சித்தார்த்திற்கு கேட்ச் கொடுக்க, கோவை கிங்ஸ் அணிக்கு 3வது கோப்பையை உறுதியானது. 84 ரன்கள் வித்தியாசத்தில் கோவை கிங்ஸ் அணி கோப்பையை வென்றது.

ஷாருக்கானின் 3வது கப்

2022, 2023 ஆகிய தொடர்களை தொடர்ந்து ஷாருக்கான் வெல்லும் 3வது கோப்பை இது. கடந்த 5 ஆண்டுகளில் 2025ஆம் ஆண்டை தவிர அனைத்து சீசன்களிலும் கோவை கிங்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றதும் குறிப்பிடத்தக்கது.

They call him King Khan for a reason! 🤫#TNPL10 #TNPL2026 #NammaOoruNammaGethu #Season10SemmaGethu #DecadeOfKondattam pic.twitter.com/YmvbhUx6pF

— TNPL (@TNPremierLeague) August 28, 2026

ஆட்டநாயகன் ஆன்ட்ரே சித்தார்த்

கேப்டன் அனிருத் மட்டும் 24 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். கோவை கிங்ஸ் பந்துவீச்சில் மணிமாறன் சித்தார்த், ஷாருக்கான் தலா 3 விக்கெட்டை கைப்பற்றினார். தீபன் லிங்கேஷ் 2 விக்கெட்டை கைப்பற்றினார். ஆட்டநாயகன் விருதை ஆன்ட்ரே சித்தார்த் வென்றார்.

Add Zee News as a Preferred Source
TAGS:
Cricket