SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ஆயுஷ் டிப்ளமோ படிப்பில் சேர... கடைசி நாள் நீட்டிப்பு - விண்ணப்பிப்பது எப்படி?

ஆயுஷ் டிப்ளமோ (DIP/DNT) பட்டயப்படிப்புகளுக்கான இணையவழி விண்ணப்பப் பதிவுக்கு அக்டோபர் 29ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. தற்போது கடைசி நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Written By Sudharsan G
Published: Oct 30, 2026, 01:16 PM IST | Updated: Oct 30, 2026, 01:23 PM IST
Join

2026-2027ஆம் கல்வியாண்டிற்கான ஆயுஷ் டிப்ளமோ (DIP/DNT) பட்டயப்படிப்புகளுக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு செய்யும் கடைசி தேதியை நீட்டித்து இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

2026-2027ஆம் கல்வியாண்டிற்கு, சென்னை மற்றும் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள அரசு ஆயுஷ் துணை மருத்துவ படிப்புப் பள்ளிகளில் உள்ள இடங்களுக்கான (DIP/DNT) பட்டயப்படிப்புகள் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பங்கள் (Online Applications) தகுதியுள்ளவர்களிடம் இருந்து பெறப்பட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | '5,000 இலவச வீடுகள்' தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்! யார் யாருக்கு கிடைக்கும்? முழு விவரம்

ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்

DIP-மருந்தாளுநர், DNT-நர்சிங் தெரபி பட்டயப்படிப்புகளுக்கான தகவல் தொகுப்பேட்டினை www.tnayushselection.org இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இணையவழியில் மட்டுமே விண்ணப்பப் படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வேறு எந்த வழிகளிலும் விண்ணப்பங்கள் சமர்பிக்கப்பட்டாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவரங்களை அறிய...

மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள், விண்ணப்பக் கட்டணம் மற்றும் பிற கட்டண விவரங்கள், கலந்தாய்விற்கான அட்டவணை மற்றும் பிற தகவல்களினை www.tnayushselection.org என்கின்ற வலைதளத்தில் உள்ள உரிய தகவல் தொகுப்பேட்டில் அறியலாம்.

விண்ணப்பிக்கும் முன் தகவல் தொகுப்பேட்டினை முழுமையாகப் படித்து சரியான தகவல்களைப் பதிவேற்றவும் மற்றும் தேவையான இடங்களில் அனைத்து அசல் சான்றிதழ்களின் PDF/JPEG வடிவில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம், இணையவழி கலந்தாய்வுக் கட்டணம், கல்விக் கட்டண முன்பணம் இவை அனைத்தும் இணையவழி மூலமாக மட்டுமே செலுத்தவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

படிப்புப் பிரிவு : ஆயுஷ் பட்டயப்படிப்புகள் (DIP/DNT)
படிப்பிற்கான காலம் : 2 ஆண்டுகள்
படிப்பிற்கான கல்வித்தகுதி : 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு

அரசு ஆயுஷ் துணை மருத்துவ படிப்புப் பள்ளிகள் இரண்டு உள்ளன. சென்னையில் ஒன்றும், பாளையங்கோட்டையில் ஒன்றும் உள்ளன.

அறிவிக்கை நாள், இணையவழி விண்ணப்பம் பதிவு செய்ய தொடங்கிய தேதிஅக்டோபர் 15
இணையவழி விண்ணப்பப் பதிவுக்கான இறுதி நாளாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதிஅக்டோபர் 29, மாலை 5 மணிவரை
இணையவழி விண்ணப்பம் பதிவு செய்ய நீட்டிக்கப்பட்ட கடைசி நாள்நவம்பர் 12, மாலை 5 மணிவரை
அரசு சிறப்பு ஒதுக்கீட்டின்கீழ் விண்ணப்பிக்க இணையவழி விண்ணப்பத்துடன் அனைத்து சுய சான்றொப்பமிட்ட சான்றிதழ்களுடன் தபால் / கூரியர் சேவை வாயிலாக சமர்ப்பிக்கவோ அல்லது நேரில் சமர்ப்பிக்கவோ நீட்டிக்கப்பட்ட கடைசி நாள்நவம்பர் 12, மாலை 5 மணிவரை

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி

அரசு சிறப்பு ஒதுக்கீட்டின்கீழ் விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் மட்டும், இணையவழியில் விண்ணப்பித்த பிறகு அந்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, கோரப்பட்டுள்ள அனைத்துச் சான்றிதழ்களின் சுய சான்றொப்பமிட்ட நகல்களையும் இணைத்து செயலாளர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை இயக்குநர் அலுவலகம், அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை-600 106 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மேலும் படிக்க | சட்டவிரோத ரம்மி, பெட்டிங் ஆப்-களுக்கு ஆப்பு! தமிழ்நாடு அரசு முக்கிய அப்டேட்

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

ZEENEWS TRENDING STORIES