• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /'5,000 இலவச வீடுகள்' தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்! யார் யாருக்கு கிடைக்கும்? முழு விவரம்

'5,000 இலவச வீடுகள்' தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்! யார் யாருக்கு கிடைக்கும்? முழு விவரம்

Tamil Nadu Iniya Illam scheme : தமிழ்நாடு அரசின் ‘இனிய இல்லம்’ திட்டம் மூலம் ஆதிதிராவிடர்களுக்கு 5,000 இலவச வீடுகள் வழங்குவது தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Written ByKarthikeyan Sekar
Published: Oct 30, 2026, 11:52 AM IST|Updated: Oct 30, 2026, 11:59 AM IST
joinshare
'5,000 இலவச வீடுகள்' தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்! யார் யாருக்கு கிடைக்கும்? முழு விவரம்
Image Credit: Tamil Nadu Iniya Illam scheme

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
20 ஆண்டு தடை... நள்ளிரவு கைது நடவடிக்கை! ஜாமியா பல்கலைக்கழகத்தில் என்ன நடந்தது தெரியுமா?

20 ஆண்டு தடை... நள்ளிரவு கைது நடவடிக்கை! ஜாமியா பல்கலைக்கழகத்தில் என்ன நடந்தது தெரியுமா?

2

'5,000 இலவச வீடுகள்' தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்! யார் யாருக்கு கிடைக்கும்? முழு விவரம்

3

ஈரோடு மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? சம்பளம் எவ்வளவு?

4

OG வீரர்களை களமிறக்கிய மும்பை இந்தியன்ஸ்... பொல்லார்ட் படை ரெடி - முழு லிஸ்ட் இதோ

5

தமிழகத்தில் நவம்பர் 1 முதல் மீண்டும் மழை, படிப்படியாக மழைப்பொழிவு அதிகரிக்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Tamil Nadu Iniya Illam scheme : தமிழகத்தில் வீடற்ற ஆதிதிராவிட மக்களுக்குப் பாதுகாப்பான வாழ்விடத்தை உருவாக்கித் தரும் வகையில், ‘இனிய இல்லம் - ஆதிதிராவிடர் குடியிருப்புத் திட்டம்’ என்ற புதிய திட்டத்திற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுத் தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. சமூக நீதித் துறை மானியக் கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்ட இத்திட்டம், ஆதிதிராவிடர் மக்களின் சமூகப் பாதுகாப்பை உயர்த்தி, கண்ணியமான வாழ்வை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள், தகுதிகள் மற்றும் செயலாக்க முறைகள் குறித்த முழுமையான விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன  

மேலும் படிக்க | தமிழக மக்களுக்கு குட் நியூஸ்! முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் மெகா மாற்றம்

திட்டத்தின் முக்கிய நோக்கம் : சமூக நீதித் துறையின் மூலம் வீட்டு மனைப் பட்டா இல்லாத ஏழை ஆதிதிராவிட மக்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், அவ்வாறு பட்டா பெற்ற பல பயனாளிகள் போதிய நிதி ஆதாரம் இல்லாத காரணத்தால் சொந்தமாக வீடுகள் கட்ட முடியாமல் குடிசைகளிலோ அல்லது வாடகை வீடுகளிலோ வசித்து வருகின்றனர்.  

இதனைத் தவிர்க்கும் பொருட்டு, சமூக நீதித் துறையானது ஊரக வளர்ச்சித் துறை மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துடன் இணைந்து, தகுதி வாய்ந்த ஆதிதிராவிடப் பயனாளிகளுக்குப் பாதுகாப்பான கான்கிரீட் வீடுகளைக் கட்டித் தருவதையும், குடியிருப்புகளுக்கு முழுமையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதையும் இத்திட்டம் முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.  

2026-2027 நிதியாண்டில் 5,000 வீடுகள்

2026-2027 ஆம் நிதியாண்டில், தகுதி வாய்ந்த 5,000 ஆதிதிராவிட மக்களுக்குக் கான்கிரீட் வீடுகள் கட்டி முடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கிராமப்புறப் பகுதிகளில் ஊரக வளர்ச்சித் துறை மூலமும், நகர்ப்புறப் பகுதிகளில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலமும் வீடுகள் கட்டப்படும்.  

ஏற்கனவே இலவச வீட்டு மனைப் பட்டா பெற்று வீடு கட்ட இயலாமல் உள்ள பயனாளிகளுக்கும், புதிதாக இலவச வீட்டு மனைப் பட்டா கோரி விண்ணப்பிக்கும் தகுதி வாய்ந்த ஆதிதிராவிட மக்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டு பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர். மேலும், வரும் ஆண்டுகளிலும் பெறப்படும் கோரிக்கைகளின் அடிப்படையில் ஆண்டுதோறும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு வீடுகள் கட்டப்படும்.  

குடும்ப ஆண்டு வருமான வரம்பு மற்றும் தகுதிகள்

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற பயனாளிகளுக்கு இரண்டு வகையான வருமான வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன:  

1. இலவச வீட்டு மனைப் பட்டா பெற: குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.1.00 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.  

இலவசக் கான்கிரீட் வீடு பெற: ஊரக வளர்ச்சித் துறையின் வீட்டு வசதித் திட்ட விதிகளின்படி, குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.  

மேற்கண்ட வருமான உச்ச வரம்புகளுக்கு உட்பட்டு, சொந்தமாகப் பட்டா அல்லது வீடற்ற ஆதிதிராவிடக் குடும்பங்கள் ‘இனிய இல்லம்’ திட்டப் பயனாளிகளாகத் தேர்வு செய்யப்படுவார்கள்.  

2. புதிய இணையதளம்: 'Iniya Illam' Web Portal

திட்டப் பணிகளை வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுத்தவும், இடைத்தரகர்களின் தலையீட்டைத் தவிர்க்கவும் தனியான நவீன இணைய முகப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் நல இயக்குநரகத்தின் கீழ் நில எடுப்புப் பணிகளுக்காகச் செயல்பட்டு வந்த ‘Land Acquisition Survey Portal’ என்ற இணையதளமானது, தற்போது விரிவுபடுத்தப்பட்டு ‘Iniya Illam - Adi Dravidar Habitation Scheme’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் இலவச வீட்டு மனைப் பட்டா கோருவதற்கும், கான்கிரீட் வீடு கோருவதற்கும் நேரடியாக இணையவழியில் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.  

Digital Housing ID, Geo-Tagged புகைப்படக் கண்காணிப்பு

இத்திட்டத்தில் பயனாளிகள் தேர்வு முதல் வீடு கட்டி முடிப்பது வரை டிஜிட்டல் கண்காணிப்பு உறுதி செய்யப்படுகிறது:

டிஜிட்டல் அடையாள அட்டை: விண்ணப்பம் அங்கீகரிக்கப்படும் ஒவ்வொரு தகுதியான பயனாளிக்கும் தனித்துவமான ‘Iniya Illam Housing ID’ வழங்கப்படும்.

கட்டுமானப் படிநிலைக் கண்காணிப்பு: வீட்டின் தளம் அமைத்தல், அஸ்திவாரம், சுவர்கள் எழுப்புதல், கூரை அமைத்தல், பூச்சு வேலைகள் மற்றும் தரைத்தளம் என ஒவ்வொரு கட்டப் பணியின்போதும் புவிசார் குறியீட்டுடன் கூடிய புகைப்படங்கள் கள அலுவலர்களால் சிறப்பு மொபைல் செயலி மூலம் பதிவேற்றம் செய்யப்படும்.

ஆன்லைன் டேஷ்போர்டு: மாநில மற்றும் மாவட்ட அளவில் மொத்த விண்ணப்பங்கள், கள ஆய்வு செய்யப்பட்டவை, பட்டா வழங்கப்பட்ட விவரங்கள் மற்றும் கட்டுமான முன்னேற்றம் ஆகியவற்றை நிகழ்நேரத்தில்  கண்காணிக்கத் தனி டேஷ்போர்டு அமைக்கப்படுகிறது.

காலக்கெடு மற்றும் மாவட்ட அளவிலான குழு

வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்ட பயனாளிகளுக்கு, அடுத்த 6 முதல் 9 மாத காலத்திற்குள் அனைத்துக் கட்டுமானப் பணிகளையும் தரக் கட்டுப்பாடுகளுடன் முடித்துக் கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாவட்ட அளவில் இத்திட்டப் பணிகளைத் துரிதப்படுத்தவும், வழிகாட்டு நெறிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்யவும் அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தலைமையில் சிறப்பு கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு, ஆதிதிராவிடர் நல இயக்குநர் மூலம் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.

Add Zee News as a Preferred Source
TAGS:
TN Govt Schemes