• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /பழைய கட்டிடத்தை இடித்து புது வீடு கட்டுறீங்களா? இனி பழைய மீட்டர் செல்லாது

பழைய கட்டிடத்தை இடித்து புது வீடு கட்டுறீங்களா? இனி பழைய மீட்டர் செல்லாது

TANGEDCO New Rules: பழைய கட்டிடத்தை இடித்து புது வீடு கட்டுறீங்களா? இனி பழைய மீட்டர் செல்லாது என மின்சார வாரியத்தின் அதிரடி உத்தரவு குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.

Written ByKarthikeyan Sekar
Published: Oct 25, 2026, 02:49 PM IST|Updated: Oct 25, 2026, 03:00 PM IST
joinshare
பழைய கட்டிடத்தை இடித்து புது வீடு கட்டுறீங்களா? இனி பழைய மீட்டர் செல்லாது
Image Credit: TANGEDCO New Rules

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
IIT மெட்ராசில் வேலை: மொத்தம் 8 காலியிடங்கள், யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

IIT மெட்ராசில் வேலை: மொத்தம் 8 காலியிடங்கள், யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

2

தமிழகத்தை நெருங்கும் புயல்? 5 மாவட்டங்களுக்கு அதி கனமழை அலர்ட்! சென்னைக்கும் எச்சரிக்கை

3

தமிழக அரசு ஊழியர்களுக்கு கிடுக்கிப்பிடி: களஞ்சியத்தில் சொத்து விவரங்கள் கட்டாயம்!

4

பழைய கட்டிடத்தை இடித்து புது வீடு கட்டுறீங்களா? இனி பழைய மீட்டர் செல்லாது

5

Explained: தீபாவளிக்குள் Gen Z-க்கு 3 திட்டங்கள், தனிச் சலுகைகள்!! PSU வங்கிகளின் மாஸ்டர் பிளான்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

தமிழகத்தில் பழைய கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய வீடுகள் அல்லது வணிக வளாகங்கள் கட்டும்போது மின் இணைப்புகளை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க மின்சார வாரியம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. பழைய கட்டிடங்களில் இருந்த மின் இணைப்புகளை தற்காலிகமாக துண்டித்துவிட்டு, புதிய கட்டுமானம் முடிந்ததும் புதிய இணைப்புக்கான நடைமுறைகளைப் பின்பற்றாமல் அதே பழைய சர்வீஸ் எண்ணிலேயே மீட்டரை மீண்டும் பொருத்தும் முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுந்தன. இது தமிழ்நாடு மின் விநியோக விதிகளுக்கு (TNE Supply Code Regulation) எதிரானது என்பதால், இதனைத் தடுக்க மின்வாரியம் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்து.

1 ஆண்டு கடந்தால் கணக்கு நிரந்தரமாக முடிக்கப்படும்:

மறுசீரமைப்பு அல்லது புதுப்பித்தல் பணிகளுக்காக தற்காலிகமாக துண்டிக்கப்பட்ட தாழ்வழுத்த மின் இணைப்புகள், ஓராண்டுக்கு மேலாக மீண்டும் பெறப்படாமல் இருந்தால், அவை தானாகவே நிரந்தரமாக துண்டிக்கப்பட்டதாகக் கருதப்படும். உரிய அதிகாரியின் அனுமதி பெற்று அந்த மின் கணக்கு நிரந்தரமாக முடிக்கப்பட்டு, நுகர்வோருக்கு தகவல் தெரிவிக்கப்படும். அதன்பின்னர் அப்பகுதிக்கு மின்சாரம் தேவைப்பட்டால், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிகளின்படி புதிய மின் இணைப்பாக மட்டுமே விண்ணப்பித்துப் பெற முடியும்.  

பல இணைப்புகள் உள்ள கட்டிடங்களுக்கு புதிய நடைமுறை:

இடிக்கப்படும் பழைய கட்டிடத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் இருந்தால், நுகர்வோரின் ஒப்புதலுடன் ஒரே ஒரு இணைப்பு மட்டுமே கட்டுமானப் பணிகளுக்கான தற்காலிக விநியோகக் கட்டணத்திற்கு மாற்றப்படும். கட்டுமானம் முழுமையாக முடிந்த பின்னர், அது உரிய நிரந்தரப் பிரிவுக்கு மாற்றப்பட்டு அதற்கான சட்டப்பூர்வ கட்டணங்கள் வசூலிக்கப்படும்.  

அதே நேரத்தில், அந்த கட்டிடத்தில் இருந்த மற்ற அனைத்து பழைய இணைப்புகளின் மீட்டர்களும் உடனடியாக அகற்றப்பட்டு, கணக்குகள் நிரந்தரமாக முடிக்கப்படும். புதிதாக கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகள் அல்லது வீடுகளுக்கு தேவையான மற்ற இணைப்புகளுக்கு, புதிய விண்ணப்ப நடைமுறையைப் பின்பற்றி மட்டுமே புதிய இணைப்புகள் வழங்கப்படும்.  

விதிமீறும் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை:

இந்த வழிகாட்டுதல்களை எவ்வித விதிவிலக்கும் இன்றி அனைத்து பொறியாளர்களும் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் குறைபாடுகளோ அல்லது முறைகேடுகளோ கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை பாயும் என தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் சுற்றறிக்கையில் மிகக் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu