SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

சேலம் விமான நிலையம் மூடப்படுகிறதா? ஷாக்கில் மக்கள்... காரணம் என்ன?

Salem Airport: சேலம் விமான நிலையத்திற்காக, 2024-25 நிதியாண்டில் 106 கோடி ரூபாயும், 2025-26 நிதியாண்டில் 110 கோடி ரூபாயும் 'உடான்' திட்ட ஆதரவுக்காகத் தமிழக அரசு ஒதுக்கியிருந்தது. ஆனால், மூன்றாண்டு கால மானிய ஒப்பந்தம் முடிவுக்கு வந்த பிறகு, நடப்பு ஆண்டிற்கு எவ்வித நிதியும் ஒதுக்கப்படவில்லை என்று அறியப்படுகிறது.

Written By Sripriya Sambathkumar
Published: Nov 26, 2026, 12:02 IST | Updated: Nov 26, 2026, 12:08 IST
Image Credit: Salem Airport to close operations?
Join

Salem Airport: சேலம் மக்களுக்கு முக்கிய செய்தி உள்ளது. சேலம் விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் இரண்டு தினசரி விமான சேவைகளும் அடுத்த மாதத்திற்குப் பிறகு நிறுத்தப்படலாம் என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. சேலத்திலிருந்து தற்போது சென்னைக்கு தினமும் 2 விமானங்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், இந்த விமான நிலையத்தை மூடுவது பற்றி பேசப்பட்டு வருவதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முடிவுக்கு வரும் UDAN திட்ட மானிய ஒப்பந்தம்

மத்திய அரசின் சாமானிய மக்களுக்கான விமான பயணத்திட்டமான 'பிராந்திய இணைப்புத் திட்டத்தின்' (UDAN) கீழ் வழங்கப்பட்டு வந்த மூன்றாண்டு கால மானிய ஒப்பந்தம் முடிவுக்கு வருவதால், இந்தச் சேவைகள் நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாக ஊடக செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

சென்னைக்கு தினமும் 2 விமானங்கள்

தற்போது சேலத்திலிருந்து சென்னைக்கு தினமும் இரண்டு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்தச் சேவைகள் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக 112 பயணிகள் பயணம் செய்வதாக கூறப்படுகிறது. முன்னதாக சேலத்திலிருந்து ஹைதராபாத், கொச்சி மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு இருந்த விமான சேவைகள் ஏற்கனவே நிறுத்தப்பட்டுவிட்டன; தற்போது சென்னைக்கு மட்டுமே விமான சேவை உள்ளது. சேலம் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்து, மீண்டும் நாட்டின் முக்கிய நகரங்களுக்கு இங்கிருந்து விமான சேவைகளை தோடங்க வெண்டும் என கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன. எனினும், விமான நிலையமே மூடப்படக்கூடும் என்ற அதிர்ச்சி செய்தி தற்போது வலம் வருகிறது.

விமான நிலையம் மூடப்பட என்ன காரணம்?

சென்னைக்கான விமான சேவைகள் நிறுத்தப்பட்டால் அதற்கு பின்வரும் இரண்டு அம்சங்கள் முக்கிய காரணங்களாக இருக்கலாம்:

இருப்பினும், சேவைகள் நிறுத்தப்படுவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

மேலும் படிக்க | டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஜாக்பாட்: டிசம்பர் 1 முதல் 8 மணி நேர வேலை, வார விடுமுறை Explained

மத்திய அரசின் உடான் திட்டம்

'உடான்' (UDAN) திட்டத்தின் கீழ், மலிவு விலையில் பிராந்திய விமான இணைப்புகளை மேம்படுத்தும் நோக்கில், மத்திய அரசு 'சாத்தியக்கூறு இடைவெளி மானியத்தை' (viability-gap subsidy) வழங்குகிறது. இந்தத் திட்டத்தின்படி, மானியத் தொகையில் 80 சதவீதத்தை மத்திய அரசும், மீதமுள்ள 20 சதவீதத்தை மாநில அரசும் வழங்குகின்றன.

சேலம் விமான நிலையத்திற்காக, 2024-25 நிதியாண்டில் 106 கோடி ரூபாயும், 2025-26 நிதியாண்டில் 110 கோடி ரூபாயும் 'உடான்' திட்ட ஆதரவுக்காகத் தமிழக அரசு ஒதுக்கியிருந்தது. ஆனால், மூன்றாண்டு கால மானிய ஒப்பந்தம் முடிவுக்கு வந்த பிறகு, நடப்பு ஆண்டிற்கு எவ்வித நிதியும் ஒதுக்கப்படவில்லை என்று அறியப்படுகிறது.

மூன்று ஆண்டு மானிய ஒப்பந்த காலம் நிறைவடைந்த காரணத்தால், ஏற்கனவே பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கானச் சேவைகள் நிறுத்தப்பட்டு தற்போது சென்னைக்கு மட்டும் 2 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 'உடான்' ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததால், வணிக ரீதியான காரணங்களுக்காக விமான சேவைகள் குறைக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க | பாலியல் தொல்லை புகார்: தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ராஜினாமா செய்கிறாரா? பரபரப்பு தகவல்

சேலத்திற்கான விமான வழித்தடங்கள், வருங்காலத்தில் நடைபெறும் 'உடான்' திட்ட ஏலச் சுற்றுகளில் மீண்டும் சேர்க்கப்படலாம் என்றும், டிசம்பர் மாதத்திற்குப் பிறகும் சேவைகளைத் தொடர மாநில அரசின் நிதி ஆதரவு அவசியமென்றும் கூறப்படுகின்றது.

தற்போது இயக்கத்தில் இருக்கும் சென்னைக்கான விமான சேவைகள் நிறுத்தப்பட்டால், சேலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த பயணிகள் விமானப் பயண வாய்ப்புகளை இழக்க நேரிடும். இதனால், அவர்கள் மற்ற பெரிய விமான நிலையங்களைச் சென்றடைய, நீண்ட தூர சாலை அல்லது ரயில் பயணங்களையே அதிகம் சார்ந்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும்.

இந்த பாதிப்பின் அளவு, எதிர்காலத்தில் 'உடான்' திட்டத்தின் கீழ் இந்த வழித்தடங்கள் மீண்டும் சேர்க்கப்படுகிறதா அல்லது வேறு ஏதேனும் ஏற்பாட்டின் மூலம் ஆதரவு கிடைக்கிறதா என்பதைப் பொறுத்தே அமையும்.

சேலத்திலிருந்து சென்னைக்கான இரண்டு விமான சேவைகளும் நிறுத்தப்படக்கூடும் என்று கூறப்படும் நிலையில், விமான நிறுவனம், விமான நிலைய நிர்வாகம், தமிழ்நாடு அரசு அல்லது சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மூலம் இந்த செய்தி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. ஆகையால், இந்தச் சேவைகள் நிறுத்தப்படுவது அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வந்தபிறகுதான், இது குறித்த தெளிவு கிடைக்கும்.

எனினும், விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு, விமான நிலையம் மூடப்பட்டால், அது சேலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு பெரும் அதிருப்தியை அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

மேலும் படிக்க | கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ, த.வெ.க அரசுக்கு அதிகரிக்கும் சிக்கல்: இன்று ஆளுநரை சந்திக்கும் உதயநிதி

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

ஸ்ரீப்ரியா சம்பத், 6 ஆண்டுகளுக்கும் மேல் மீடியாவில் பணியாற்றி வருகிறார். இவர், வணிகம் மற்றும் தனிநபர் நிதி (Personal Finance) சார்ந்த கட்டுரைகளை எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர். மத்திய பட்ஜெட்டுகள், வங்கித் துறை, வருமான வரி, பங்குச் சந்தைகள் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரம், மத்திய அரசு ஊழியர்கள், ஊதியக் குழுக்கள் (Pay Commissions), ஓய்வூதியத் திட்டங்கள், ஓய்வூதியதாரர்கள், அரசின் முக்கியக் கொள்கைகள் மற்றும் சர்வதேச விவகாரங்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.எழுத்தை வாசகர்களோடு இணைவதற்கான ஒரு சிறந்த பாலமாகக் கருதும் இவர், அவர்களின் தேவைகளுக்கும் ஆர்வங்களுக்கும் முன்னுரிமை அளிக்கிறார். வாசகர்களுடன் இயல்பான, உண்மையான மற்றும் நேர்மையான தொடர்பைக் கொண்டிருப்பதே இவரின் முதன்மை இலக்காகும். பணி நேரத்தைத் தாண்டி, புத்தகங்கள் வாசிப்பது, புதிய இடங்களுக்குப் பயணம் செய்வது மற்றும் அறிவுசார் விவாதங்களில் பங்கேற்பது இவருக்கு மிகவும் பிடித்தமானவை.
Read More

ZEENEWS TRENDING STORIES