• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /நவம்பர் 13ம் தேதி மாணவர்களுக்கு கேக்.. பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு.. CM விஜய் அறிவிப்பு

நவம்பர் 13ம் தேதி மாணவர்களுக்கு கேக்.. பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு.. CM விஜய் அறிவிப்பு

Children Day Cake: குழந்தைகள் தினத்தன்று பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்கப்பட உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள மாவட்ட வாரியாக கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக முதல்வர் விஜய் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Written ByUmabarkavi K
Published: Nov 11, 2026, 05:02 PM IST|Updated: Nov 11, 2026, 05:10 PM IST
joinshare
நவம்பர் 13ம் தேதி மாணவர்களுக்கு கேக்.. பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு.. CM விஜய் அறிவிப்பு

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
ரூ.600 கோடி மதிப்பிலான பங்குகள்... திரும்பப் பெற Zee Entertainment நிறுவனம் முடிவு

ரூ.600 கோடி மதிப்பிலான பங்குகள்... திரும்பப் பெற Zee Entertainment நிறுவனம் முடிவு

2

Explained : தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் வரப்போகுதா? மழை பொய்த்தால் இதுதான் நிலை..

3

CM விஜய்யின் சிறப்பு வட்டி தள்ளுபடி... வீடு, மனை ஒதுக்கீடுதாரர்களுக்கு ஜாக்பாட்

4

செஞ்சியில் மீண்டும் அதிர்ச்சி! 7 வயது சிறுமியை கடத்த முயற்சி.. தப்பித்தது எப்படி? இருவர் கைது

5

என்விடியா CEO விவகாரத்தில் கிளம்பும் பூதம்: இரண்டாவது கள்ள உறவு, மகன்-மகளின் சம்பளம்... பறிபோகும் பதவி?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Children Day Cake: தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலை பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள் என மொத்தம் 61,84,566 பேருக்கு கேக் (Cake) வழங்க ரூ.9.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஆணை வழங்கப்பட்டுள்ளது. அதாவது, 61 லட்சத்து 84 ஆயிரத்து 566 பேருக்கு குழந்தைகள் தினத்தன்று இலவச கேக் வழங்கப்பட உள்ளது. நவம்பர் 13ஆம் தேதி  கேக் உடன் வாழ்த்து அட்டைகளும் தமிழக அரசு வழங்க உள்ளது. இந்த நிலையில், தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

இந்த திட்டம் முறையாக, திறமையாக, சிறப்பாக நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்க பள்ளிக்கல்வி இயக்குனர், இணை இயக்குனர்கள், துணை இயக்குனர்கள் நிலையிலான 29 சீனியர் அதிகாரிகள் மாவட்ட வாரியாக கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே கூகுள் மீட் மூலம் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் இயக்குனரால் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை / செங்கல்பட்டு மாவட்டத்தில் இயக்குனர் லதா கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.  மதுரை மாவட்டத்தில் தனியார் பள்ளி இயக்குநர் மார்ஸ்,  திருநெல்வேலி / தென்காசி மாவட்த்தில் கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் இணை இயக்குநர் சுவாதினி, கோயம்புத்தூர் / நீலகிரி மாவட்டத்திற்கு உமா, திருவள்ளூர், சேலம், திருவாரூர், தருமபுரி, கன்னியாகுமரி என அனைத்து மாவட்டங்களுக்கும் தனித்தனி அதிகாரிகள் நவம்பர் 12 மற்றும் நவம்பர் 13 ஆகிய இரு நாட்களும் களத்தில் இருந்து பணியை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: பள்ளி ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்: தொடக்கக் கல்வித்துறையின் புதிய சுற்றறிக்கை!

பள்ளிக்கு வராத மாணவர்களுக்கும் கேக்

அண்மையில்  தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு கேட் வழங்கப்படுவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை  வெளியிட்டது. உரிய நாளன்று வருகை புரியாத மாணவர்களுக்கான கேக்குகளைப் பாதுகாப்பாக வைத்து, அவர்கள் பள்ளி வரும் நாளில் வழங்க வேண்டும். அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்து அட்டை கிடைத்துள்ளதை உறுதி செய்ய வேண்டும். விநியோகம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களைப் பள்ளியில் பராமரிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

உணவு ஒவ்வாமை அல்லது உணவுக் கட்டுப்பாடு உள்ள மாணவர்களை முன்கூட்டியே கண்டறிந்து தகுந்த ஏற்பாடுகள் செய்ய வேண்டும். மாணவர்கள் கைகளைக் கழுவிய பின்னர் பெற வேண்டும்; விநியோகம் ஒழுங்காகவும் சமமாகவும் நடைபெற வேண்டும்; எந்த மாணவரும் விடுபடக்கூடாது.  கேக் உறைகளைக் குப்பைத் தொட்டிகளில் சேகரித்து, வளாகத்தைத் தூய்மையாக வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: ரூ.1.57 லட்சம் மானியத்தில் நாட்டுக்கோழிப் பண்ணை: எப்படி விண்ணப்பிப்பது?

எந்த மாவட்டத்தில் எந்த கேக்?

மயிலாடுதுறை, சேலம், தஞ்சாவூர், மதுரை, திருவண்ணாமலை, மற்றும் திருச்சி ஆகிய 6 மாவட்டங்களில் ஒரு மாணவருக்கு ட்ரீம் கேக்ஸ்/விங்கீஸ் தயாரிப்பு 25 கிராம் உள்ள 2 மினி ஸ்விஸ் ரோல் பாக்கெட்டுகள் வழங்கப்படும்.

கோயம்புத்தூர், திருப்பூர். நீலகிரி, ஈரோடு, நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய 6 மாவட்டங்களில் ஒரு மாணவருக்கு ஐடிசி தயாரிப்பு 21.6 கிராம் உள்ள 2 மினி கேக் பாக்கெட்டுகள் வழங்கப்படும்.

மற்ற மாவட்டங்களில் ஒரு மாணவருக்கு ட்ரீம் கேக்ஸ்/விங்கீஸ், பிரிட்டானியா, எலைட் தயாரிப்பு 45 கிராம் உள்ள ஒரு பாக்கெட் வழங்கப்படும் என தமிழக அரசு ஏற்கனவே தெரிவித்து இருந்தது.

மேலும் படிக்க: கள்ளக்குறிச்சி மக்களே ! கல்விக்கடன் மற்றும் தொழில் கடன் முகாம் தேதிகள் அறிவிப்பு!
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu