• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /CM விஜய்யின் 7 முக்கிய அறிவிப்புகள்... பால் கொள்முதல் விலை உயர்வு டூ செமிகண்டக்டர் பார்க் வரை

CM விஜய்யின் 7 முக்கிய அறிவிப்புகள்... பால் கொள்முதல் விலை உயர்வு டூ செமிகண்டக்டர் பார்க் வரை

CM Vijay Announcements: பால் கொள்முதல் விலை உயர்வு முதல் செமிகண்டக்டர் & எலக்ட்ரானிக்ஸ் பார்க் வரை, முதலமைச்சர் விஜய் இன்று சட்டப்பேரவையில் 110 விதியின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகளை இங்கு காணலாம்.

Written BySudharsan G
Published: Aug 31, 2026, 12:20 IST|Updated: Aug 31, 2026, 12:24 IST
joinshare
CM விஜய்யின் 7 முக்கிய அறிவிப்புகள்... பால் கொள்முதல் விலை உயர்வு டூ செமிகண்டக்டர் பார்க் வரை
Image Credit: CM Vijay Announcements in TN Assembly | Image Source : X/@TNDIPR, Screengrab : Youtube/@TamilnaduAssembly

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
டிசம்பர் 2-ல் புதன் பெயர்ச்சி.. பண மழையில் நனையப்போகும் 3 அதிர்ஷ்ட ராசிகள்!

டிசம்பர் 2-ல் புதன் பெயர்ச்சி.. பண மழையில் நனையப்போகும் 3 அதிர்ஷ்ட ராசிகள்!

2

WhatsApp Web பயன்படுத்துபவர்களா நீங்கள்? அப்போ உங்களுக்குத்தான் இந்த எச்சரிக்கை!

3

வள்ளல் சி.கந்தசாமி நாயுடு வாழ்க்கை வரலாறு படத்தின் ஷூட்டிங் தொடக்கம்! கல்விக்காக சொத்தை எழுதி வைத்தவர்..

4

Explained | பெயர் மாறும் “மேற்கு வங்கம்” ஒரு மாநிலத்தின் பெயர் எவ்வாறு மாற்றப்படுகிறது..?

5

WTC Final: கனவு நனவாகுமா? இந்தியாவுக்கு சாதகமாக அமைய வேண்டிய 5 முக்கிய டெஸ்ட் முடிவுகள்! Explained

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

CM Vijay Announcements Today : தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இன்று அவையில் முதலமைச்சர் விஜய் 110 விதியின் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

வழக்கமாக அனைத்து திங்கட்கிழமைகளிலும் முதலமைச்சர் விஜய் 110 விதி அறிவிப்பு வெளியிட்டு வருகிறார். கடந்த வாரம் மகளிருக்கு தமிழ்நாடு முழுவதும் இலவச பேருந்து பயணம், ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர் உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார்.

முதலமைச்சர் விஜய்யின் 7 அறிவிப்புகள்

அந்த வகையில், முதலமைச்சரின் இன்றைய அறிவிப்புகளும் முக்கியத்துவம் பெற்றுள்ளன. அவற்றை வரிசையாக இங்கு காணலாம்.

1. பால் கொள்முதல் விலை மேலும் உயர்வு

  • கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி அன்று பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 38 ரூபாயில் இருந்து 41 ரூபாயாக உயர்த்தி முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் இதே 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டார்.
  • தொடர்ந்து, கறவை மாடுகளுக்கான இதர இடுபொருட்களின் விலை உயர்வால் பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்த பால் உற்பத்தியாளர்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்தாதக முதல்வர் விஜய் அவரது உரையில் குறிப்பிட்டார்.
  • இந்நிலையில், அக்கோரிக்கையினை பரிசீலனை செய்து லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாய் அளவில் உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டார். இதனால் பால் லிட்டர் ஒன்றுக்கு கொள்முதல் விலை ரூ.44 ஆக உயர்ந்தப்பட்டுள்ளது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (31.8.2026) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், விதி எண் 110-ன் கீழ், பால் உற்பத்தியாளர்கள் பயனடையும் வகையில் பால் கொள்முதல் விலையை 44 ரூபாயாக உயர்த்தியும், எரிசக்தித் துறை சார்பில் புதிய மின்கட்டமைப்புகள் அமைப்பது… pic.twitter.com/gmKBcR771B

— TN DIPR (@TNDIPRNEWS) August 31, 2026

2. மின்சார கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்

  • தமிழ்நாடு மின் தொடரமைப்பு கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் 33 ஆயிரத்து 66 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது.
  • இதன்மூலம், 196 புதிய துணை மின்நிலையங்கள் அமைக்கப்படும்.
  • 15 ஆயிரம் கிலோ மீட்டர் நீளமுடைய புதிய மின்பாதைகள் அமைக்கப்படும்.
  • ஏற்கெனவே உள்ள மின்பாதைகள் வலுப்படுத்தப்படும்.

3. தூத்துக்குடிக்கு முக்கிய அறிவிப்பு

  • தூத்துக்குடி புதிய சூப்பர் கிரிடிக்கல் அனல் மின் நிலையம் (New Supercritical Thermal Power Station) அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • 800 மெகாவாட் திறன்கொண்ட 2 அலகுகளுடன் மொத்தமாக, 1600 மெகாவாட் திறன்கொண்ட புதிய சூப்பர் கிரிடிக்கல் அனல் மின் நிலையம் 20 ஆயிரத்து 800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும்.

4. மின் பகிர்மான பணிகள்

  • மின் பகிர்மான கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளில் 36 புதிய 33/11 கிலோ வோல்ட் துணை நிலையங்கள் அமைக்கப்படும்.
  • புதிய மின் பகிர்மான மின்மாற்றிகள் நிறுவப்படும்.
  • சேதமடைந்த மற்றும் பயன்பாட்டுக் காலம் நிறைவடைந்த கேபிள்கள், மின்கடத்திகள், Pillar Box, Circuit Breakers உள்ளிட்ட உபகரணங்கள் மாற்றப்படும்.

5. காஞ்சிபுரத்திற்கு செமிகண்டக்டர் பார்க்

  • காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலத்தில் குறைகடத்தி மற்றும் எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்பு பூங்கா (Semiconductor & Electronics Park) 175 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிப்காட் நிறுவனம் மூலம் அமைக்கப்படும்.
  • உலகத்தரம் வாய்ந்த R&D, அதாவது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வசதிகள் ஏற்படுத்தப்படும்.
  • இத்திட்டத்தின் மூலம் இத்துறையில் சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் வரை முதலீடுகள் ஈர்க்கப்படும்.
  • மேலும் 5 ஆயிரம் நபர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகள் உருவாகும்.

6. கோவையில் Fintech Hub

  • தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO) மூலம் கோயம்புத்தூரில் டிஜிட்டல் நிதி மையம் (Coimbatore FinTech Hub) 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.
  • இதில் உலகத் தரத்திலான வசதிகள், அலுவலக இடங்கள், புத்தொழில் நிறுவனங்கள், நவீன ஆய்வகங்கள், பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு போன்ற அதிநவீன வசதிகள் இம்மையத்தில் இடம்பெறும்.
  • உலகளாவிய முதலீடுகளை ஈர்க்கவும், நவீன தொழில்நுட்பங்களை ஊக்குவிக்கவும், உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இத்திட்டத்தில் வழிவகை செய்யப்படும்.

7. திருச்சிக்கு முக்கிய அறிவிப்பு

  • தமிழ்நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மண்டலத்தில் பல்முனை சரக்கு போக்குவரத்து மையம் (Multi-Model Logistics Hub) அமைக்கப்படும்.
  • தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO) மூலம் ஆய்வு மேற்கொண்டு திட்ட அறிக்கை தயார் செய்யப்படும்.
Add Zee News as a Preferred Source
TAGS:
Vijay Thalapathy