• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்.. யாருக்கு எவ்வளவு? முதல்வர் விஜய் அறிவிப்பு

அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்.. யாருக்கு எவ்வளவு? முதல்வர் விஜய் அறிவிப்பு

TN Govt Diwali Bonus: தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில, முதல்வர் விஜய் அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவித்துள்ளார். குரூப் சி, டி பிரிவு தொழிலாளர்கள், பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் விஜய் அறிவித்துள்ளார்.

Written ByUmabarkavi K
Published: Oct 27, 2026, 03:24 PM IST|Updated: Oct 27, 2026, 03:50 PM IST
joinshare
அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்.. யாருக்கு எவ்வளவு? முதல்வர் விஜய் அறிவிப்பு
Image Credit: Image Source: Chatgpt

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
ரூ.500க்கு மேல் மதுபானம் வாங்குவோருக்கு கட்டுப்பாடு.. நவம்பர் 1 முதல் டாஸ்மாக்கில் புதிய நடைமுறை!

ரூ.500க்கு மேல் மதுபானம் வாங்குவோருக்கு கட்டுப்பாடு.. நவம்பர் 1 முதல் டாஸ்மாக்கில் புதிய நடைமுறை!

2

இங்கிலீஷ் தெரியாத ஹோட்டல் ஊழியர்..கடுப்பில் கன்னத்தில் அறைந்த கஸ்டமர்! கடைசியில் என்னாச்சு?

3

அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்.. யாருக்கு எவ்வளவு? முதல்வர் விஜய் அறிவிப்பு

4

அன்பில் மகேஷ் மனைவியும் கைதா? விசாரணையில் ஏற்பட்ட திருப்பம்!

5

இஸ்ரேல் தேர்தல் 2026: நெதன்யாகுவை வீழ்த்த களம் இறங்கிய நபர்! யார் இந்த கடி ஐசன்கோட்? -Explained

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

TN Govt Diwali Bonus: தமிழக பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸை முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். நாடு முமுவதும் தீபாவளி பண்டிகை நவம்பர் 8ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், அரசு ஊழியர்கள் போனஸ் எப்போது அறிவிக்கப்படும் என எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில், தமிழக அரசு ஊழியர்களுக்கு முதல்வர் விஜய் தீபாவளி போனஸ் அறிவித்துள்ளார். குரூப் C மற்றும் D பிரிவு தொழிலாளர்களுக்கு 20% வரை போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் C மற்றும் D பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 2025-26 ஆம் ஆண்டிற்கான மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கி அரசு ஆணை வெளியிட்டுள்ளது. ஊதியச் சட்டத் தொகுப்பு 2019 (முன்பு திருத்தப்பட்ட போனஸ் சட்டம் 2015) இன் படி, மிகை ஊதியம் பெற தகுதியான சம்பள உச்சவரம்பு ரூ.21,000 எனவும், மிகை ஊதியம் கணக்கிட மாதாந்திர சம்பள உச்சவரம்பு ரூ.7,000 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: அன்பில் மகேஷ் மனைவியும் கைதா? விசாரணையில் ஏற்பட்ட திருப்பம்!

யார் யாருக்கு எவ்வளவு போனஸ்?

  • இலாபம் ஈட்டியுள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 'C' மற்றும் 'D' பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அந்தந்த நிறுவனங்களின் ஒதுக்கக்கூடிய உபரித் தொகையை கணக்கில் கொண்டு 8.33 விழுக்காடு மிகை ஊதியம் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத் தொகை என மொத்தம் 20 விழுக்காடு வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.
  • தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தில் பணிபுரியும் தகுதியுடைய 'C' மற்றும் 'D' பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு மிகை ஊதியம் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத் தொகை  என மொத்தம் 20 விழுக்காடு மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.
  • ஒதுக்கக்கூடிய உபரித் தொகை இல்லாத பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் "C" மற்றும் 'D' பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு குறைந்தபட்ச மிகை ஊதியம் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகை என மொத்தம் 10 விழுக்காடு மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.
  • தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் ஆகியவற்றில் பணிபுரியும் தகுதியுடைய 'C' மற்றும் 'D' பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு மிகை ஊதியம் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகை வழங்கப்படும்.
  • தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் தகுதியுடைய 'C' மற்றும் 'D' பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு மிகை ஊதியம் வழங்கப்படும்.
  • தமிழ்நாடு நுகர்பொருள் வாணியக் கழகத்தில் தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ரூ.3,000 கருணைத் தொகையாக வழங்கப்படும்.

அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ‘C’ மற்றும் ‘D’ பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 20 விழுக்காடு வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு. #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan |

— TN DIPR (@TNDIPRNEWS) October 27, 2026

இதனால், மிகை ஊதியம் பெறத் தகுதியுள்ள நிரந்தரத் தொழிலாளர்கள் குறைந்தபட்சம் ரூ.8,400  மற்றும் அதிகபட்சம் ரூ.16,800 வரை பெறுவர். மொத்தத்தில், தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 2 லட்சத்து 60 ஆயிரத்து 497 தொழிலாளர்களுக்கு 367 கோடியே 20 லட்சம் ரூபாய் மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகையாக வழங்கப்படும். 

இது தவிர, பல்வேறு கூட்டுறவு அமைப்புகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கான ஆணைகள் தனியே வெளியிடப்படும். அரசின் இந்த நடவடிக்கை, பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மேலும் ஊக்கத்துடன் செயல்படவும், எதிர்வரும் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடவும் வழிவகை செய்யும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: திருப்பதி கோவிலுக்கு காசுமாலை அணிந்து வந்த விவகாரம்..அமைச்சர் கீர்த்தனா அதிரடி பதில்!
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Vijay Thalapathy