• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /அன்பில் மகேஷ் மனைவியும் கைதா? விசாரணையில் ஏற்பட்ட திருப்பம்!

அன்பில் மகேஷ் மனைவியும் கைதா? விசாரணையில் ஏற்பட்ட திருப்பம்!

தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்று தருவதாக கூறி ரூ.100 கோடிக்கு மேல் பணம் வசூலித்த புகாரில், முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது மனைவி ஜனனியும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Written ByR Balaji
Published: Oct 27, 2026, 02:06 PM IST|Updated: Oct 27, 2026, 02:08 PM IST
joinshare
அன்பில் மகேஷ் மனைவியும் கைதா? விசாரணையில் ஏற்பட்ட திருப்பம்!

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
அன்பில் மகேஷ் மனைவியும் கைதா? விசாரணையில் ஏற்பட்ட திருப்பம்!

அன்பில் மகேஷ் மனைவியும் கைதா? விசாரணையில் ஏற்பட்ட திருப்பம்!

2

இஸ்ரேல் தேர்தல் 2026: நெதன்யாகுவை வீழ்த்த களம் இறங்கிய நபர்! யார் இந்த கடி ஐசன்கோட்? -Explained

3

இந்திய ரயில்வேயில் ஸ்டேஷன் மாஸ்டர் வேலை: டிகிரி பொதும்.... எப்படி விண்ணப்பிப்பது?

4

விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா சைபர் க்ரைமில் புகார்! தாெடர் சர்ச்சையால் திடீர் முடிவு

5

Aavin பால் பொருட்களின் விலை உயர்வு ஏன்? ஆவின் நிர்வாகம் விளக்கம்!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

தமிழ்நாடு முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் மற்றும் பல்வேறு அனுமதிகளை பெற்று தருவதாக கூறி பணம் வசூலித்ததாக எழுந்துள்ள புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.ரூ. 100 கோடிக்கும் அதிகமான பணம் வசூலிக்கப்பட்டதாக கூறப்படும் இந்த வழக்கில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது நவம்பர் 6 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

தனியார் பள்ளிகளிடம் பணம் வசூலித்ததாக புகார்

தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் பெற்று தருவது பள்ளிகளை தரம் உயர்த்துவது, கட்டிட அனுமதிகள் உள்ளிட்ட அரசு ஒப்புதல்களை பெற்று தருவது போன்ற வாக்குறுதிகளை கூறி பணம் வசூலிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக, தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் நிர்வாகி டி.சி. இளங்கோவன் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.

பி.டி. அரசகுமார் தலைமையில் செயல்பட்டதாக கூறப்படும் பதிவு செய்யப்படாத தனியார் பள்ளிகள் அமைப்பின் மூலம் இந்த பணம் வசூலிக்கப்பட்டதாக விசாரணை அமைப்புகள் குற்றம்சாட்டி உள்ளன. இதுவரை 177க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளின் நிர்வாகங்கள் தொடர்பான விவரங்கள் விசாரணையில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றன. மொத்தமாக ரூ.100 கோடியை தாண்டியிருக்கலாம் என கூறப்படுகிறது.

விசாரணையில் அன்பில் மகேஷின் பெயர் இடம்பெற்றது எப்படி?

இந்த வழக்கில் பி.டி. அரசகுமார் உள்ளிட்டோர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துக்குமாரும் இந்த அமைப்பின் நிர்வாக பொறுப்பில் இருந்ததாகவும், அன்பில் மகேஷுக்கு நெருக்கமானவர் என்றும் கூறப்படுகிறது. முத்துக்குமார் தலைமறைவாக இருப்பதாகவும், அவரை கண்டுபிடிக்க காவல்துறை நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனியார் பள்ளிகளிடம் வசூலிக்கப்பட்டதாக கூறப்படும் பணம் எவ்வாறு கையாளப்பட்டது, அதில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பதை கண்டறியும் நோக்கில் விசாரணை விரிவுபடுத்தப்பட்டது. இந்த சூழலில் அன்பில் மகேஷின் பெயரும் வழக்கில் இடம்பெற்றது.

வீடுகளில் சோதனை மற்றும் பல மணி நேரம் விசாரணை

சென்னை மற்றும் திருச்சி உள்ளிட்ட இடங்களில் அன்பில் மகேஷுடன் தொடர்புடையதாக கூறப்படும் இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனைகளின்போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, விசாரணைக்கு ஆஜரான அன்பில் மகேஷிடம் அதிகாரிகள் பல மணி நேரம் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். விசாரணையின்போது 240 கேள்விகள் கேட்கப்பட்டதாக அவரே தெரிவித்திருந்தார். பள்ளி நிர்வாகங்களிடமிருந்து வசூலிக்கப்பட்டதாக கூறப்படும் தொகை, பணப்பரிவர்த்தனைகள் மற்றும் இந்த விவகாரத்தில் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

முன்ஜாமீன் மனு தள்ளுபடி.. அன்பில் மகேஷ் கைது

இந்த வழக்கில் கைது செய்யப்படுவதை தவிர்க்கும் நோக்கில் அன்பில் மகேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், வழக்கின் விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும், பணப்பரிவர்த்தனைகளை விரிவாக ஆய்வு செய்ய வேண்டியிருப்பதாகவும் காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டது.

மேலும், விசாரணையை பாதிக்கும் வகையில் சாட்சிகளை கலைக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அக்டோபர் 26ஆம் தேதி அன்பில் மகேஷின் முன்ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதன் பிறகு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவரைக் கைது செய்தனர்.

நவம்பர் 6 வரை நீதிமன்றக் காவல்

கைது செய்யப்பட்ட அன்பில் மகேஷ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து, அவருக்கு நவம்பர் 6ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

அன்பில் மகேஷின் மனைவியிடமும் விசாரணை நடைபெறுமா?

இந்த வழக்கில் வசூலிக்கப்பட்டதாக கூறப்படும் பணத்தில் ஒரு பகுதி அன்பில் மகேஷின் மனைவி ஜனனியிடம் வழங்கப்பட்டதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் அடிப்படையில் அவரிடமும் விசாரணை நடத்தப்படலாம் எனக் கூறப்படுகிறது. 
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu