• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /ஆபாசம், வன்மம், வக்கிரம்.. சத்யபாமாவை உருவக்கேலி செய்த ஸ்டாலினை விளாசிய CM விஜய்

ஆபாசம், வன்மம், வக்கிரம்.. சத்யபாமாவை உருவக்கேலி செய்த ஸ்டாலினை விளாசிய CM விஜய்

MK Stalin Controversy: தாராபுரம் தவெக வேட்பாளர் சத்தியபாமா குறித்து உருவக்கேலி செய்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பெண்களை ஆபாசமாகப் பேசி வரும் தீய சக்தி தி.மு.க.விற்கு கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறினார்.

Written ByUmabarkavi K
Published: Oct 03, 2026, 02:16 PM IST|Updated: Oct 03, 2026, 03:07 PM IST
joinshare
ஆபாசம், வன்மம், வக்கிரம்.. சத்யபாமாவை உருவக்கேலி செய்த ஸ்டாலினை விளாசிய CM விஜய்

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
இந்துசமய அறநிலையத்துறை பெண் ஊழியர்களுக்கும் 12 மாத கால மகப்பேறு விடுப்பு

இந்துசமய அறநிலையத்துறை பெண் ஊழியர்களுக்கும் 12 மாத கால மகப்பேறு விடுப்பு

2

ஆபாசம், வன்மம், வக்கிரம்.. சத்யபாமாவை உருவக்கேலி செய்த ஸ்டாலினை விளாசிய CM விஜய்

3

ஆன்லைன் பத்திரப் பதிவுத்துறையில் நடந்த மாற்றம்! தமிழ்நாடு அரசின் அப்டேட்

4

Asian Games 2026: கிரிக்கெட்டில் 2வது தங்கம்; இந்திய ஆடவர் அணி மிரட்டல் - பாகிஸ்தான் படுதோல்வி

5

பக்தர்களே அலர்ட்! கோவை பெருமாள் முடி, மேல் முடி கோயில்களுக்கு செல்ல கட்டுப்பாடு.. முக்கிய அறிவிப்பு

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

MK Stalin Controversy:  தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரம் தொதிகளுக்கான  இடைத்தேர்தல் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. அக்டோபர் 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்த இடைத்தேர்தலில் தவெக, திமுக, அதிமுக, நாதக, கம்யூனிஸ்ட் என ஐந்து முனைப்போட்டி நிலவுகிறது. இடைத்தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. மதுராந்தகத்தில் நேற்று (அக்டோபர் 2) முதல்வர் விஜய் ரோடு ஷோ மேற்கொண்டார். 

ஸ்டாலின் சர்ச்சை பேச்சு

மேலும், திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான ஸ்டாலின் தாராபுரம் தொகுதியில் தீவிரமாக பரப்புரை மேற்கொண்டார்.  தொடர்ந்து, தாராபுரம் பொதுக் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், தாராபுரம் தவெக வேட்பாளர் சத்தியாபாமாக உருவக்கேலி செய்தது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், "மக்களே இப்போது பெட்டி பாமா, பல்டி பாமா. எப்படி அந்த உருவத்தை வைத்துக் கொண்டு பல்டி அடிக்கிறாரே தெரியவில்லை" என பேசியிருந்தார். ஸ்டாலின் இவ்வாறு பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதற்கு தவெகவினர் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

 

தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் இன்று பரப்புரையில் ஈடுபட்ட திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான ஸ்டாலின்... நமது தமிழக வெற்றி கழக வேட்பாளர் அன்புச் சகோதரி திருமதி சத்தியபாமா அவர்களைப் பற்றி தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தியதோடு, உருவ கேலியும் செய்திருக்கிறார். இதை வன்மையாக… pic.twitter.com/iV1UACy7DN

— Arunraaj TVK (@arunraajkg) October 2, 2026

முதல்வர் விஜய் கண்டனம்

அந்த வகையில், முதல்வர் விஜய் ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் விஜய், "தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் என்ற பெயரில், தீய சக்தியான தி.மு.க. சார்பில் ஓர் அவதூறு மற்றும் அநாகரிகக் கூட்டத்தை நடத்தியுள்ளார், அதன் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்.

மேலும் படிக்க: இந்துசமய அறநிலையத்துறை பெண் ஊழியர்களுக்கும் 12 மாத கால மகப்பேறு விடுப்பு

நமது தாராபுரம் தொகுதி வேட்பாளரான சகோதரி திருமதி சத்தியபாமா அவர்கள் குறித்து, உருவ கேலி செய்து, மிகவும் அநாகரிகமாகப் பேசிப் புளகாங்கிதம் அடைந்துள்ளார். தி.மு.க. சார்பாக வளர்க்கப்பட்டு வரும் ஆபாசநதியை, வன்மநதியை, வக்கிரநதியை உருவாக்கியதே முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய தான்தான் என்பதைப் பெருமையுடன் மார்தட்டி மகிழ்வுடன் ஒப்புக்கொண்டிருக்கிறார். 

ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். ஜனநாயகத்திற்கு விரோதமானவர்கள் தி.மு.க.வினர். ஆபாசமும் வன்மமும் வக்கிரமும் தி.மு.க.வின் மூலக்கூறிலும் மூளைக்கூறிலும் கலந்திருப்பதைத் தமிழக மக்கள் அனைவரும் காலகாலமாக உணர்ந்தே வைத்திருக்கின்றனர்.

பெண்களைப் பற்றி ஆபாசமாகப் பேசுவதில், அதிலும் பெண்களை அருகில் வைத்துக்கொண்டே, அவர்கள் அருவருப்பாக உணர்வதைக்கூட கண்டுகொள்ளாமல் பேசுவதில் வல்லவர்களான இந்தத் தீய சக்திக் கூட்டத்திற்குத் தமிழக மக்களும் தாராபுரம் தொகுதி மக்களும் தக்க பதிலடியைக் கொடுக்கத்தான் போகின்றனர். தொடர்ந்து பெண்களை ஆபாசமாகப் பேசி வரும் தீய சக்தி தி.மு.க.விற்குத் தமிழகப் பெண்களின் மகனாக, அண்ணனாக, தம்பியாக எனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் படிக்க: பள்ளிக் கல்வித்துறை ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு! விரைவில் பணி மாறுதல் Explained

ஸ்டாலின் மீது புகார்

தாராபுரம் தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவக்கேலி செய்து பேசியதாக திமுக தலைவர் ஸ்டாலின் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா புகார் அளித்துள்ளார்.  பெண்களுக்கு எதிராக அவதூறான கருத்துகளைத் தெரிவிப்பதை திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலினும் நிறுத்தவில்லை என்றால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். 

மேலும், தவெக வழக்கறிஞர் அணியும் தலைமை  தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளனர்.  தேர்தல் நடத்தை விதிகள் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1991, தமிழ்நாடு பெண்களைத் துன்புறுத்தல் தடைச்சட்டம், 1998 மற்றும் பாரதி நியாய சன்ஹிதா, 2023 ஆகியவற்றின்படி  ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க கோரி தவெக வழக்கறிஞர் அணி புகார்  அளித்துள்ளது

மேலும் படிக்க: வெற்றி பயண திட்டம்: எந்தெந்த பேருந்துகளில் கட்டணம் செலுத்த வேண்டும்? வேண்டாம்? - Explained
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Vijay Thalapathy