• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /சென்னைக்கு கிழக்கே அக்வான் புயல்.. எங்கு, எப்போது கரையை கடக்கும்? வானிலை மையம் அப்டேட்

சென்னைக்கு கிழக்கே அக்வான் புயல்.. எங்கு, எப்போது கரையை கடக்கும்? வானிலை மையம் அப்டேட்

Akvan Cyclone Update: அக்வான் புயல் நவம்பர் 17-ஆம் தேதி மாலைக்குள் தீவிர சூறாவளியாகவும், நவம்பர் 19-ஆம் தேதி காலை வாக்கில் மிகத் தீவிர சூறாவளியாகவும் வலுவடையக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது.

Written ByUmabarkavi K
Published: Nov 17, 2026, 08:42 IST|Updated: Nov 17, 2026, 08:53 IST
joinshare
சென்னைக்கு கிழக்கே அக்வான் புயல்.. எங்கு, எப்போது கரையை கடக்கும்? வானிலை மையம் அப்டேட்

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
சருமம் ஜொலி ஜொலிக்க வாங்கிய கிரீம்... 17 வயது சிறுமியின் நோய்க்கு முக்கிய காரணம் - ஷாக் சம்பவம்

சருமம் ஜொலி ஜொலிக்க வாங்கிய கிரீம்... 17 வயது சிறுமியின் நோய்க்கு முக்கிய காரணம் - ஷாக் சம்பவம்

2

எல்.கே. சுதீஷ் – பூர்ணஜோதி சுதீஷ் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் யார்?

3

Explained : குழந்தைகளிடம் வாசிப்பு ஆர்வம் குறைவு..எதிர்காலத்தை பாதிக்கும்! எச்சரிக்கை

4

இதுவும் பாலியல் துன்புறுத்தலே... கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம் - பொதுவெளியில் பெண் நீதிபதி பகீர்

5

Gold Price: அதிரடியாக குறையும் தங்கம் விலை.. மோடி மேஜிக் தான் காரணமா?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Akvan Cyclone Update: நவம்பர் 15ஆம் தேதி தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று இரவு 11.30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று காலை (16-11-2026) 08.30 மணி அளவில் அதே பகுதியில் நிலவுகிறது. இது மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று மாலை புயலாக (Cyclonic Storm) வலுப்பெறக்கூடும்.

அக்வான் புயல் தற்போது எங்கே இருக்கிறது?

இது மேலும் வலுப்பெற்று மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதியில் நவம்பர் 17 மாலை தீவிர புயலாக (Severe Cyclonic Storm) நிலவக்கூடும். இது மேலும் வலுவடைந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 20ம் தேதி நண்பகல் நெல்லூர் மற்றும் துனி இடையே ஆந்திரப் பிரதேச கடற்கரையை மிகத் தீவிரப் புயலாக (Very Severe Cyclonic Storm) கடக்க வாய்ப்புள்ளது. அப்போது மணிக்கு 120 முதல் 130 கி.மீ வேகத்திலும், இடையிடையே மணிக்கு 145 கி.மீ வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.

வங்கக்கடலில் உருவான அக்வான் புயல் தற்போது எங்கு இருக்கிறது என்பது குறித்து இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் கூறுகையில்,  நவம்பர் 17-ஆம் தேதி மாலைக்குள் தீவிர சூறாவளியாகவும், நவம்பர் 19-ஆம் தேதி காலை வாக்கில் மிகத் தீவிர சூறாவளியாகவும் வலுவடையக்கூடும். நவம்பர் 20-ஆம் தேதி நண்பகல் வாக்கில், நெல்லூருக்கும் துனிக்கும் இடையே ஆந்திரப் பிரதேசம் மற்றும் யானம் பகுதிகளில் இது கரையை கடக்க வாய்ப்புள்ளது; அப்போது காற்றின் வேகம் மணிக்கு 120-130 கி.மீ வேகத்திலும், அவ்வப்போது 145 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.

அக்வான் புயல் நவம்பர் 16ஆம் தேதி சென்னையின் கிழக்கு 610  கி.மீட்டர் தொலைவிலும், திருகோணமலையின் 630 கிலோ மீட்டர் தொலைவிலும், மச்சிலிப்பட்டினத்தின் 660  கி.மீட்டர் தொலைவிலும், 670 கி.மீ, விசாகப்பட்டினம் & கோபால் 790 கி.மீட்டர் தொலைவிலும் என்ற இடத்தில் நிலையாக இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: சார்பதிவாளர் அலுவலகத்திற்கு அலைய வேண்டாம்! இனி 48 மணி நேரத்தில் வீடு தேடி வரும் பத்திரம்

CS Akvan over central parts of South & adjoining Westcentral BoB remained practically stationary at 2330 IST 16 Nov, 610 km E of Chennai, 630 km NE of Trincomalee, 660 km SE of Machilipatnam, 670 km SSE of Visakhapatnam & 790 km S of Gopalpur. https://t.co/kpej4pHwC0

— India Meteorological Department (@Indiametdept) November 16, 2026

எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்?

நவம்பர் 17ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

நவம்பர் 18,19ஆம் தேதி சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் ஏனைய வட கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: கன்னியாகுமரி: டிசம்பர் 3ம் தேதி அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Weather