SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

தொகுதி மறுவரையறையில் பாஜகவுக்கு திமுக ஆதரவா? வெளிப்படையாக சொன்ன ஸ்டாலின்!

DMK MK Stalin On Delimitation Bill: நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதாவை பாஜக நிறைவேற்றப்பட உள்ள நிலையில், இதற்கு திமுக ஆதரவாக அளிக்க உள்ளதாக தகவல்கள் கசிந்த வண்ணம் இருந்த நிலையில், தற்போது ஸ்டாலின் தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக கூறியுள்ளார்.

Written By Umabarkavi K
Published: Nov 27, 2026, 12:49 IST | Updated: Nov 27, 2026, 13:28 IST
Join

Delimitation Bill: நாடாளுமன்றத்தில் மீண்டும் கொண்டுவரப்பட உள்ள தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு அளிக்குமா? இல்லையா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தனது நிலைப்பாட்டை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

தொகுதி மறுவரையறையில் பாஜகவுக்கு ஆதரவா?

திமுக தலைவர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது, "தொகுதி மறுவரையறையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து இந்தியாவிலேயே முதன் முதலில் குரல் எழுப்பியது தி.மு.க.தான். நியாயமான மறுவரையறை என்ற கோரிக்கையுடன் அகில இந்தியத் தலைவர்களை ஒன்றிணைத்து முதன் முதலில் கூட்டம் நடத்தப்பட்டதும், சென்னையில்தான். தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தின்படியும், நியாயமான தொகுதி மறுவரையறைக்கான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களின்படியும், நாம் முன்வைத்த உறுதியான கோரிக்கைகள்.

எடுத்த இந்த இரண்டு நிலைப்பாட்டிலும் தி.மு.க. இன்றும் என்றும் உறுதியாக இருக்கிறது. இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை, சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஊடகங்களில் பரப்பப்படும் ஊகங்களும், முதுகுகுத்திகளின் முணுமுணுப்புகளும் எங்களது இந்த நிலைப்பாட்டை எந்த விதத்திலும் அசைத்துப் பார்க்காது. பதவிக்காகக் கொள்கையை உதறிவிட்டுச் செல்லும் மானமற்ற, நன்றிகெட்ட கூட்டத்தினர் இதனை உணர வேண்டும். தமிழ்நாட்டின் நலனைக் கழகம் ஒருபோதும் விட்டுக்கொடுக்காது. கொண்ட கொள்கையில் இருந்து தடம் மாறாது" என கூறியுள்ளார்.

நாளை திமுக எம்.பிக்கள் கூட்டம்

நாடாளுமன்றச் சிறப்பு கூட்டத்தொடர் நவம்பர் 30ஆம் தேதி துவங்கப்பட உள்ள நிலையில், திமுக எம்.பிக்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் நவம்பர் 28ஆம் தேதியான நாளை காலை 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது. இதனால், திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என திமுக தலைமை அறிவித்துள்ளது.

 

நவம்பர் 30 முதல் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்

நாடாளுமன்ற மழைக்கால சிறப்பு கூட்டத்தொடர் நவம்பர் 30ஆம் தேதி துவங்கப்பட உள்ளது. மக்களவை நவம்பர் 30ஆம் தேதியும், டிசம்பர் 2ஆம் தேதி மாநிலங்களவை கூட்டத்தொடர் கூடவுள்ளன. இந்த சிறப்பு கூட்டத்தொடரில் மக்களவை தொகுதி எண்ணிக்கையை 850 ஆக உயர்த்துவது, நாடாளுமன்ற இரு அவைகளிலும் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதை உடனடியாக அமல்படுத்துவது தொடர்பான முக்கிய மசோதாக்களை நிறைவேற்றப்பட உள்ளன. 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

ZEENEWS TRENDING STORIES