மாஃபியா கும்பல்களுக்கான தவெக ஆட்சி... வேட்பாளரை துரத்தி அடியுங்கள் - ஸ்டாலின் போட்ட வீடியோ
தாராபுரம் இடைத்தேர்தலை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் தவெகவும் அதன் வேட்பாளர்களையும் கடுமையாக விமர்சித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
தாராபுரம் இடைத்தேர்தலை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் தவெகவும் அதன் வேட்பாளர்களையும் கடுமையாக விமர்சித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
தன்மானமிக்க தாராபுரம் தொகுதி வாக்காளப் பெருமக்களே என குறிப்பிட்டு முன்னாள் முதலமைச்சர் மற்றும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் அவரது X பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், ஆளும் தவெக அரசை கடுமையாக சாடியும், குற்றச்சாட்டுகளை முன்வைத்தும் மு.க. ஸ்டாலின் பேசி உள்ளார். மேலும் வாக்காளர்களை நோக்கியும் சில கேள்விகளை எழுப்பி உள்ளார்.
"தேர்தல் முடிந்து நான்கு மாதம் ஆகிறது. அதற்குள் உங்களின் தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்திருக்கிறது. இந்த இடைத்தேர்தலுக்கான அவசியம் என்னவென்று ஒரு நிமிஷம் சிந்தித்து பார்க்க வேண்டும். இந்நேரம் எல்லா தொகுதிகளிலும் எம்எல்ஏக்கள் தங்களுடைய தொகுதிக்கான பணிகளைச் செய்துகொண்டு இருக்கிறார்கள்" என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க | முதல்வர் விஜய்யின் தாராபுரம் ரோடு ஷோ... எந்த வழித்தடத்தில்? - முழு விவரம் இதோ
ஸ்டாலின் எழுப்பிய கேள்விகள்
- ஆனால், உங்களுக்கு உண்மையாக இருப்பார்கள் என நினைத்து, நீங்கள் தேர்ந்தெடுத்த வேட்பாளர் என்ன பண்ணி இருக்கிறார்கள்?
- உங்களிடமே மீண்டும் வாக்கு கேட்டு வந்து நிற்கிறார்கள். அவர்களின் இந்த செயலில் ஏதாவது நியாயம் இருக்கிறதா?
- கொள்கை நேர்மை இருக்கிறதா? ஒரு துளியாவது உங்களுடைய நலன் இருக்கிறதா?
- வாக்களித்த உங்களுடைய தன்மானத்தை விலை பேசி, ஆளுங்கட்சியோட குதிரை பேரத்துக்கு துணை போனவர்களுக்கு நீங்க என்ன பதிலடி தரப்போகிறீர்கள்...?
- வாக்குக்காக உங்களை மீண்டும் ஏமாற்றுவதற்காக அவர்கள் சொல்லும் கட்டுக்கதைகளையும், பொய்களையும் நம்பப் போகிறீர்களா...?
எதிர்க்கட்சி எம்எல்ஏக்களால் நல்லது செய்ய முடியாதா...?
உங்க தொகுதியில் ஆளுங்கட்சி வேட்பாளராக போட்டியிடுபவர்கள் பொட்டி வாங்கிக்கொண்டு, அவர்களிடம் நடிக்க என்ன காரணம் சொல்கிறார்கள்? ஆளுங்கட்சியில் சேர்ந்தால் மக்களுக்கு நன்மை செய்ய முடியும் என்று நடிக்கிறார்கள். அதுவா உண்மை?
ஆளுங்கட்சியில இருந்தால்தான் மக்களுக்கு நன்மை செய்ய முடியும் என்றால் எல்லா ஆட்சியிலும் எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் அத்தனை எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா செய்து ஆளுங்கட்சிக்கு ஓடி இருக்கணுமே?
எதிர்க்கட்சி தொகுதியில் வேலை செய்யாமல் ஒரு அரசால் புறக்கணிக்க முடியாது என்பதுகூட உங்களுக்கு தெரியாது என்று நினைத்து ஏமாற்றுகிறார்களா?
மேலும் படிக்க | படித்த பெண்களே! சொந்த தொழில் தொடங்க ஆசையா? அரசின் 5 முக்கிய திட்டங்கள்
தவெக வேட்பாளர்களின் துரோகம்
திமுக, அதிமுக கூட்டணி அமைக்கப் பார்த்தார்கள் என்று இல்லாத ஒரு கதையைச் சொல்லி ஏமாற்றப் பார்க்கிறார்கள். உண்மையில் அவர்களை வளர்த்து ஆளாக்கிய கட்சியை (அதிமுகவை) ஒழிக்க தற்போதைய ஆளுங்கட்சி வேட்பாளர் செய்திருக்கும் துரோகம்தான் இந்த இடைத்தேர்தல்.
இந்த பிரச்சாரத்திற்கு வந்த முதலமைச்சர் முதல் அமைச்சர்கள் வரைக்கும் யாராவது அவர்கள் சொன்ன மகளிருக்கான 2,500 ரூபாயைக் கொடுத்துவிட்டோம், ஆறு சிலிண்டர் கொடுத்துவிட்டோம் என சொல்லி வாக்கு கேட்கிறார்களா... இல்லையே...
மாஃபியா கும்பலுக்கான ஆட்சி
ஏனென்றால் தவெக ஆட்சி என்பது மக்களுக்கான, உங்களுக்கு நன்மை செய்ய அமைந்த ஆட்சி அல்ல. மாஃபியா கும்பல்கள் தமிழ்நாட்டைக் கொள்ளையடிக்க அமைந்திருக்கும் ஆட்சி. தமிழ்நாட்டை பின்னோக்கி இழுக்கிறார்கள்.
விலைவாசியைக் கட்டுப்படுத்த சொன்னால், முதலமைச்சர் ஜோசியரின் அட்வைஸ் கேட்டு 1,200 கோடியில தலைமைச் செயலகம் கட்டுகிறார். விவசாயிகள், மீனவர்கள், அரசு ஊழியர்கள் போராடினால், அதை பற்றி கவலைப்படாமல் லண்டன் போய் கார் ரேஸ் பார்ப்பார். கொத்துக் கொத்தாக கொலைகள் நடந்தால், அதைப் பற்றிக் கவலையில்லாம சிங்கப் பெண்கள் படை என்று ரீல்ஸ் போடுவார்.
வேட்பாளர்களை துரத்தி அடிக்க வேண்டும்
இப்போதைக்கு அவர்கள் கவனம் எல்லாம் எப்படி ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க வேண்டும் என்பதுதான். அதனால் நான் உங்களிடம் கேட்பது, பிரச்சாரத்திற்கு வந்த ஆளுங்கட்சி வேட்பாளர்களை ஊருக்குள்ளேயே அனுமதிக்காமல் எப்படி விரட்டுனீர்களோ, அதேபோல் தொடர்ந்து அக்டோபர் 6ஆம் தேதி உங்கள் வாக்கை தோல்வியைக் கொடுத்து துரத்தி அடிக்க வேண்டும்" என பேசி உள்ளார்.