தீபாவளிக்கு ஊருக்கு போக டிக்கெட் போடலையா... இதோ Unreserved ரயில்கள் அறிவிப்பு
Southern Railway: தீபாவளி பண்டிகை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்வோருக்கும், சொந்த ஊரில் இருந்து சென்னை திரும்புவோருக்கும் பயனளிக்கும் வகையில், முன்பதிவு இல்லாத MEMU சிறப்பு ரயில்களின் சேவையை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அவற்றின் விவரம் இதோ
Southern Railway, Unreserved MEMU Special Trains: தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 8 (ஞாயிறு) கொண்டாடப்படுகிறது. தீபாவளிக்கு அடுத்த நாள் (நவம்பர் 9 - திங்கள்) அன்றும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்று மாலையில் (நவ. 5) இருந்தே பலரும் சென்னையில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு பயணிக்க தொடங்குவார்கள்.
அதேபோல், நவம்பர் 9, 10 ஆகிய தேதிகளிலும் சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு திரும்புவார்கள். இதனால், அதிக மக்கள் கூட்டம் ஒவ்வொரு ரயில் நிலையங்களிலும், பேருந்து நிலையங்களிலும் காணப்படும்.
முன்பதிவு இல்லாத MEMU சிறப்பு ரயில்கள்
இந்நிலையில், மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையிலும், கடைசி நேரத்தில் திட்டமிடும் பயணிகளுக்கு உதவும் வகையில், முன்பதிவு இல்லாத MEMU சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அவற்றை இங்கு காணலாம்.
1. சென்னை எழும்பூர் - திருச்சி இருவழித்தட MEMU ரயில்
- சென்னை எழும்பூர் - திருச்சி இடையிலான முன்பதிவு இல்லாத MEMU சிறப்பு ரயில் (எண்: 06193), சென்னை எழும்பூரில் இருந்து வரும் நவம்பர் 7ஆம் தேதி (சனி) இரவு 7 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் (நவ. 8 - ஞாயிறு) அதிகாலை 4.45 மணிக்கு திருச்சி சென்றடையும்.
- அதேபோல், திருச்சியில் இருந்து நவ. 9ஆம் தேதி (திங்கள்) இரவு 10.45 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில் (எண்: 06194), அடுத்த நாள் (செவ்வாய்) அதிகாலை 6.50 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். இரு வழித்தட ரயிலில் 12 MEMU பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இதற்கு முழுமையாகவே முன்பதிவு கிடையாது.
நிற்கும் ரயில் நிலையங்கள்: தாம்பரம் - திருச்சி இடையே செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், பண்ருட்டி, திருப்பாதிரிபுலியூர், பரங்கிபேட்டை, சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், திருவெறும்பூர் இடையே இந்த ரயில் நின்று செல்லும்.
2. சென்னை எழும்பூர் - திருச்சி ஒற்றை வழித்தட MEMU ரயில்
சென்னை எழும்பூர் - திருச்சி ஒற்றை வழித்தட முன்பதிவு இல்லாத சிறப்பு MEMU ரயில் (எண்: 06191), சென்னை எழும்பூரில் இருந்து நவம்பர் 6ஆம் தேதி (வெள்ளி) மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் (நவ. 7 - சனி) அதிகாலை 4.45 மணிக்கு திருச்சி சென்றடையும். இதிலும் 12 MEMU பெட்டிகள் இருக்கும்.
நிற்கும் ரயில் நிலையங்கள்: சென்னை எழும்பூர் - திருச்சி இடையே தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், பண்ருட்டி, திருப்பாதிரிபுலியூர், பரங்கிபேட்டை, சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், திருவெறும்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லும்.
மேலும் படிக்க | தீபாவளிக்கு மேலும் 6 சிறப்பு ரயில்கள்.. எந்தெந்த ஊர்களுக்கு? தெற்கு ரயில் அறிவிப்பு
3. திருச்சி - தாம்பரம் MEMU ரயில்
திருச்சி - தாம்பரம் ஒற்றை வழித்தட முன்பதிவு இல்லாத MEMU சிறப்பு ரயில் (06192) வரும் நவம்பர் 7ஆம் தேதி (சனி) அன்று திருச்சியில் இருந்து அதிகாலை 5.50 மணிக்கு புறப்பட்டு, அன்று பகல் 11.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இந்த ரயிலும் 12 MEMU பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
நிற்கும் ரயில் நிலையங்கள்: திருச்சி - தாம்பரம் இடையே ஸ்ரீரங்கம், அரியலூர், விருதாச்சலம், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு இடையே இந்த ரயில் இயக்கப்படுகிறது. இதற்கும் முன்பதிவு கிடையாது.
4. தாம்பரம் - மானாமதுரை இரு வழித்தட MEMU ரயில்கள்
- தாம்பரம் - மானாமதுரை இடையேயான முன்பதிவு இல்லாத MEMU ரயில் (எண்: 06161), நாளை (நவ. 6 - வெள்ளி) மாலை 5 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, அடுத்த நாள் (நவ. 7 - சனி) அதிகாலை 3.45 மணிக்கு மானாமதுரை சென்றடையும்.
- மானாமதுரை - தாம்பரம் இடையேயான முன்பதிவு இல்லாத MEMU ரயில் (எண்: 06162), வரும் நவ. 7ஆம் தேதி (சனி) அதிகாலை 6.30 மணிக்கு மானாமதுரையில் இருந்து புறப்பட்டு, அன்றைய தினம் மதியம் 3.45 மணிக்கு தாம்பரம் சென்றைடையும்.
- தாம்பரம் - மானாமதுரை இடையேயான முன்பதிவு இல்லாத MEMU ரயில் (எண்: 06159) வரும் நவம்பர் 7ஆம் தேதி (சனி) அன்று மாலை 4.35 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு அடுத்த நாள் (நவ. 8 - ஞாயிறு) அதிகாலை 1.45 மமணிக்கு மானாமதுரை சென்றடையும்.
- மானாமதுரை - தாம்பரம் இடையேயான முன்பதிவு இல்லாத MEMU ரயில் (எண்: 06160), வரும் நவம்பர் 9ஆம் தேதி (திங்கள்) அன்று இரவு 10 மணிக்கு மானாமதுரையில் இருந்து புறப்பட்டு, அடுத்த நாள் (நவ. 10 - செவ்வாய்) காலை 8.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
நிற்கும் ரயில் நிலையங்கள்: இவற்றில் 12 MEMU பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். தாம்பரம் - மானாமதுரை இடையே செங்கல்பட்டு, மேல்மருவத்தூர். விழுப்புரம், விருதாச்சலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், சோழவந்தான், மதுரை, திருப்புவனம் ஆகிய ரயில் நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லும்.