• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /தீபாவளிக்கு மேலும் 6 சிறப்பு ரயில்கள்.. எந்தெந்த ஊர்களுக்கு? தெற்கு ரயில் அறிவிப்பு

தீபாவளிக்கு மேலும் 6 சிறப்பு ரயில்கள்.. எந்தெந்த ஊர்களுக்கு? தெற்கு ரயில் அறிவிப்பு

Diwali Special Trains Latest: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தெற்கு ரயில்வே மேலும் 6 சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. ராமேஸ்வரம், சென்னை, திருவனந்தபுரத்திற்கு சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. இதுகுறித்து முழுமையாக இந்த தொகுப்பில் பார்ப்போம்.

Written ByUmabarkavi K
Published: Nov 03, 2026, 09:41 AM IST|Updated: Nov 03, 2026, 09:50 AM IST
joinshare
தீபாவளிக்கு மேலும் 6 சிறப்பு ரயில்கள்.. எந்தெந்த ஊர்களுக்கு? தெற்கு ரயில் அறிவிப்பு
Image Credit: Image Source: Chatgpt

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
138 நாட்கள் பின்.. வக்ர நிவர்த்தியில் சனி!  ராஜவாழ்க்கையை  அனுபவிக்கும் 3 ராசிகள்.. பண கஷ்டம் தீரும்

138 நாட்கள் பின்.. வக்ர நிவர்த்தியில் சனி! ராஜவாழ்க்கையை அனுபவிக்கும் 3 ராசிகள்.. பண கஷ்டம் தீரும்

2

தீபாவளிக்கு மேலும் 6 சிறப்பு ரயில்கள்.. எந்தெந்த ஊர்களுக்கு? தெற்கு ரயில் அறிவிப்பு

3

Explainer: 3% அகவிலைப்படி உயர்வால் அரசு ஊழியர்களின் பணிக்கொடை ரூ.50,000 அதிகரிக்கும்.. கணக்கீடு இதோ

4

கந்துவட்டி, மீட்டர் வட்டிக்கு முற்றுப்புள்ளி! அதிக வட்டி கேட்டு மிரட்டினால் 3 ஆண்டு சிறை

5

100 கி.மீ வேகத்தில் கரையை கடந்த முரசு புயல்.. எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? வெதர்மேன் அலர்ட்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Diwali Special Trains Latest: தீபாவளி பண்டிகை நவம்பர் 8ஆம் தேதி  ஞாயிற்றுகிழமை கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் நவம்பர் 9ஆம் தேதியும் தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இதனால், சொந்த ஊர்களுக்கு மக்கள் வியாழன், வெள்ளிக்கிழமை முதலே படையெடுக்க தொடங்குவார்கள். இதனால், ரயில்கள், பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அலைமோதும். இதனை கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. ஏற்கனவே பல  வழித்தடங்களில் தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்த நிலையில், மேலும் 6 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, ராமேஸ்வரம், திருவனந்தபுரம் (கேரளா) ஆகிய பகுதிகளுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் - எழும்பூர் சிறப்பு ரயில்

ரயில் எண் 06104 என்ற எண் கொண்ட சிறப்பு ரயில், ராமேஸ்வரம் - எழும்பூர் இடையே இயக்கப்படுகிறது. இந்த ரயில் ராமேஸ்வரத்தில் இருந்து நவம்பர் 5ஆம் தேதி இரவு 8.15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் (நவம்பர் 6) காலை 11 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடைகிறது.  மறுமார்க்கத்தில் நவம்பர் 7ஆம் தேதி சனிக்கிழமை எழும்பூரில் இருந்து இரவு 12.30 மணிக்கு புறப்பட்டு, அதே  நாளில் மாலை 3.50 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடைகிறது.  இந்த ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று துவங்குகிறது.

இந்த ரயில் எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், பண்ருட்டி, சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன்கோயில், மயிலாடுதுறை, பேரளம், காரைக்கால், நாககூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, அதிராம்பட்டினம், புதுக்கோட்டை, அவன்தாங்கி, காரைக்குடி, தேவக்கோட்டை, சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், மண்டபம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று ராமேஸ்வரம் சென்றடைகிறது.

Southern Railway is operating Express Special trains connecting Rameswaram, Chennai Egmore, Tambaram, Thiruvananthapuram North and Sengottai. Passengers can plan their journeys with these additional services. #SouthernRailway #IndianRailways #Rameswaram #Chennai https://t.co/VLwnc6zBjA

— DRM MADURAI (@drmmadurai) November 2, 2026

ராமேஸ்வரம் - தாம்பரம் சிறப்பு ரயில்

ரயில் எண் 06108 எண் கொண்ட ரயில், ராமேஸ்வரம் - தாம்பரம் இடையே இயக்கப்படுகிறது. நவம்பர் 9ஆம் தேதி திங்கள்கிழமை ராமேஸ்வரத்தில் இருந்து மாலை 4.55 மணிக்கு புறப்பட்டு, மறநாள் காலை 10 மணிக்கு தாம்பரம் வந்தடைகிறது. இந்த ரயில் ஒருவழி சிறப்பு ரயிலாக இயக்கப்படுகிறது. இந்த ரயில் ராமநாதபுரம், மானாமதுரை, காரைக்குடி, பட்டுக்கோட்டை, திருவாரூர், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று, தாம்பரம் சென்றடைகிறது.

மேலும் படிக்க: 100 கி.மீ வேகத்தில் கரையை கடந்த முரசு புயல்.. எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? வெதர்மேன் அலர்ட்

திருவனந்தபுரம் வடக்கு - தாம்பரம் சிறப்பு ரயில்

06164 எண் ரயில் ரயில், திருவனந்தபுரம் வடக்கு - தாம்பரம்  இடையே இயக்கப்படுகிறது. நவம்பர் 10ஆம் தேதி இரவு 8 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 11.00 மணிக்கு தாம்பரம் சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் நவம்பர் 11ஆம் தேதி புதன்கிழமை மதியம் 2 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு சென்றடையும். இந்த சிறப்பு ரயில் குழித்துறை, நாகர்கோவில், வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி (திருச்சி), விருத்தாசலம், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய முக்கிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழும்பூர் - ராமேஸ்வரம் சிறப்பு ரயில்

ரயில் எண் 06037 எழும்பூர் - ராமேஸ்வரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த ரயில்  நவம்பர் 10ஆம் தேதி செவ்வாய்கிழமை இரவு 12.30 மணிக்கு புறப்பட்டு, அதே நாளில் மாலை 5.30 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் நவம்பர் 10ஆம் தேதி இரவு 8.15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 11 மணிக்கு எழும்பூர் சென்றடைகிறது.

மேலும் படிக்க: ரயில் பயணிகள் கவனத்திற்கு... மதுரை கோட்டத்தில் வழித்தடம் மாற்றம் - முழு விவரம்

திருவனந்தபுரம் வடக்கு - எழும்பூர் சிறப்பு ரயில்

ரயில் எண் 06158 திருவனந்தபுரம் வடக்கு - எழும்பூர் இடையே சசிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் நவம்பர் 10ஆம் தேதி இரவு 7.40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம் 1 மணிக்கு எழும்பூர் சென்றடைகிறது.  மறுமார்க்கத்தில் நவம்பர் 11ஆம் தேதி மதியம் 3.15 மணிக்கு புறப்படும் இந்த ரயில், மறுநாள் காலை 7.15 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடைகிறது. இந்த ரயில் ஈரோடு சேலம் வழியாக கொல்லம், எர்ணாகுளம், திருச்சூர, பாலக்காடு, போத்தனூர, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது.

பெங்களூரு - தூத்துக்குடி சிறப்பு ரயில்

Celebrate Diwali with added convenience!🪔✨ Southern Railway operates Bengaluru Cantt – Thoothukudi – Bengaluru Cantt Express Special trains to clear the festive rush. Advance bookings are now open from the Southern Railway end. #SouthernRailway #Diwali #IndianRailways #Diwali2026

— Southern Railway (@GMSRailway) November 3, 2026

பெங்களூரு கண்டோன்மென்ட் - தூத்துக்குடி சிறப்பு ரயில் (06533) வரும் நவம்பர் 6-ம் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 21:45 மணிக்குப் பெங்களூரு கண்டோன்மென்டில் இருந்து புறப்பட்டு, மறுநாள் மதியம் 12:30 மணிக்குத் தூத்துக்குடியைச் சென்றடையும். மறுமார்க்கத்தில் தூத்துக்குடி - பெங்களூரு கண்டோன்மென்ட் சிறப்பு ரயில் (06534) நவம்பர் 7-ம் தேதி (சனிக்கிழமை) மதியம் 15:30 மணிக்குத் தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 05:30 மணிக்குப் பெங்களூரு கண்டோன்மென்டைச் சென்றடையும். ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி மற்றும் தூத்துக்குடி மேலூர்  ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: சென்ட்ரல் டூ அரக்கோணம், திருவள்ளூர்! மின்சார ரயில் சேவையில் மாற்றம்.. முழு விவரம்
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Southern Railway