• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /அடுத்ததாக சிக்கிய திமுக முன்னாள் அமைச்சர்.. ரூ. 3.35 கோடி மோசடி புகார்! பரபரப்பு

அடுத்ததாக சிக்கிய திமுக முன்னாள் அமைச்சர்.. ரூ. 3.35 கோடி மோசடி புகார்! பரபரப்பு

திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர் உள்ளிட்டோர் ரூ.3.35 கோடி மோசடி செய்ததாக சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் புகார் அளித்துள்ளார். ஏற்கெனவே முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மீது மோசடி புகார் எழுந்து அவர் கைதான நிலையில், தற்போது சிவசங்கர் மீதும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Written ByR Balaji
Published: Nov 12, 2026, 07:02 AM IST|Updated: Nov 12, 2026, 07:07 AM IST
joinshare
அடுத்ததாக சிக்கிய திமுக முன்னாள் அமைச்சர்.. ரூ. 3.35 கோடி மோசடி புகார்! பரபரப்பு

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
ரூ.600 கோடி மதிப்பிலான பங்குகள்... திரும்பப் பெற Zee Entertainment நிறுவனம் முடிவு

ரூ.600 கோடி மதிப்பிலான பங்குகள்... திரும்பப் பெற Zee Entertainment நிறுவனம் முடிவு

2

Explained : தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் வரப்போகுதா? மழை பொய்த்தால் இதுதான் நிலை..

3

CM விஜய்யின் சிறப்பு வட்டி தள்ளுபடி... வீடு, மனை ஒதுக்கீடுதாரர்களுக்கு ஜாக்பாட்

4

செஞ்சியில் மீண்டும் அதிர்ச்சி! 7 வயது சிறுமியை கடத்த முயற்சி.. தப்பித்தது எப்படி? இருவர் கைது

5

என்விடியா CEO விவகாரத்தில் கிளம்பும் பூதம்: இரண்டாவது கள்ள உறவு, மகன்-மகளின் சம்பளம்... பறிபோகும் பதவி?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர் உள்ளிட்டோர் ரூ. 3.35 கோடி மோசடி செய்ததாக சென்னையை சேர்ந்த தொழிலதிபர் அருண்ராஜ் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், பலமுறை பணத்தை திரும்ப கேட்டும் கிடைக்கவில்லை என்றும், இதனால் தனது குடும்பம் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை கேகே நகரை சேர்ந்தவர் தொழிலதிபர் அருண்ராஜ். இவருக்கு தனது மனைவியின் தம்பி மூலம் சிவநேசன் மற்றும் திமுக முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சிவநேசனின் ஒப்பந்தப் பணிகளுக்கு அருண்ராஜின் லாரிகள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், 2021 சட்டமன்றத் தேர்தலின்போது சிவசங்கருக்கு ரூ.25 லட்சம் வரை வழங்கியதாக அருண்ராஜ் தெரிவித்துள்ளார். தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சரான பிறகு, இருவரும் இணைந்து சில தொழில் ஒப்பந்தங்களை மேற்கொள்ளலாம் என சிவசங்கர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்காகப் பல்வேறு தவணைகளில் பணம் கொடுத்ததாகவும், குறிப்பாக சென்னை கிரீன்வேஸ் சாலையில் வைத்து ரூ.1 கோடி வரை வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால், பணம் கொடுத்து சுமார் 4 ஆண்டுகள் கடந்தும் திருப்பிக் கிடைக்கவில்லை என அருண்ராஜ் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் சிவசங்கரை நேரில் சந்தித்து ஆவணங்களுடன் முறையிட்டபோது, ஒப்பந்தப் பணிகளுக்கான தொகை வந்ததும் பணத்தைத் திருப்பித் தருவதாக உறுதியளித்ததாகக் கூறியுள்ளார். இருப்பினும், 15 முறை நேரில் சந்தித்துக் கேட்டும் பணம் கிடைக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், சிவசங்கரின் நேர்முக உதவியாளர் லூயி கதிரவன் மற்றும் சிவநேசன் ஆகியோர் தனது அலுவலகத்தை பயன்படுத்தியதுடன், பல்வேறு உதவிகளையும் பெற்றதாக அருண்ராஜ் தெரிவித்துள்ளார். இவர்களை நம்பி அளித்த பணம் மட்டும் ரூ.1.25 கோடி என்றும், சொத்து இழப்புகள் உள்ளிட்ட அனைத்தையும் கணக்கிட்டால் மொத்த இழப்பு ரூ.3.35 கோடியை எட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, அருண்ராஜின் மனைவியும் இந்த விவகாரம் தொடர்பாக பேசியுள்ளார். தங்களது பிரச்சினையை துர்கா ஸ்டாலினிடம் நேரில் எடுத்துரைத்ததாகவும், சிவசங்கரின் உதவியாளர் மூலம் பணத்தை திருப்பி தர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால், 5 ஆண்டுகளாக காத்திருந்தும் எந்தப் பணமும் திரும்ப கிடைக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளார்.

தொழில் செய்வதற்காக வீட்டை அடமானம் வைத்த நிலையில், அதை மீட்க முடியாமல் இழந்துவிட்டதாகவும், தங்களது இரண்டு பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக சேமித்து வைத்திருந்த நகைகளையும் இழந்துவிட்டதாகவும் அவர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். கடந்த ஆட்சிக் காலத்தில் புகார் அளிக்க அச்சப்பட்டதாக குறிப்பிட்ட அவர், தற்போது தங்களுக்கு வாழ்வாதாரம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அருண்ராஜ் அளித்துள்ள புகார் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu