• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /தமிழகத்தில் மீண்டும் 2015 போன்ற மழையா? எல் நினோ தரும் சமிக்ஞை என்ன? - Explainer

தமிழகத்தில் மீண்டும் 2015 போன்ற மழையா? எல் நினோ தரும் சமிக்ஞை என்ன? - Explainer

பசிபிக் பெருங்கடலில் வலுப்பெற்றுள்ள El Nino-வால் தமிழகத்தின் மழை பொழிவில் தாக்கம் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அது குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம்.

Written ByR Balaji
Published: Sep 24, 2026, 08:19 AM IST|Updated: Sep 24, 2026, 08:27 AM IST
joinshare
தமிழகத்தில் மீண்டும் 2015 போன்ற மழையா? எல் நினோ தரும் சமிக்ஞை என்ன? - Explainer

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
ரூஃப்-டாப் சோலார் டபுள் மானியம்: 3 ஆண்டுகளில் போட்ட பணம் ரிட்டர்ன் - தமிழக அரசின் சூப்பர் திட்டம்

ரூஃப்-டாப் சோலார் டபுள் மானியம்: 3 ஆண்டுகளில் போட்ட பணம் ரிட்டர்ன் - தமிழக அரசின் சூப்பர் திட்டம்

2

பிரதமர் மோடி சென்னை விசிட்... CM விஜய் வைத்த கோரிக்கைகள் என்னென்ன?

3

பட்டா மாற்றம் முதல் சான்றிதழ்கள் வரை: விஏஓ அலுவலகத்திலேயே கிடைக்கும் வசதிகள் முழு விவரம்!

4

கோவை டூ நெல்லை.. பிச்சு உதறப்போகும் கனமழை! வானிலை மையம் எச்சரிக்கை

5

RR அணியில் இருந்து வெளியேறும் ஜெய்ஸ்வால்? இந்த அணிக்குதான் செல்கிறாராம்.. முழு விவரம்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

தமிழகத்தில் அக்டோபர் முதல் டிசம்பர் வையிலான காலமே வடகிழக்கு பருமழைக்கான முக்கியமான கால்கட்டமாகும். ஒர் ஆண்டுக்கான மழைப்பொழிவில் பெருமளவு இந்த வடகிழக்கு பருவமழையே தருகிறது. இந்த நிலையில், பசிபிக் பெருங்கடல் பகுதியில் உருவாகி வரும் El Nino, இந்த ஆண்டு தமிழகத்தின் வடகிழக்கு பருவமழையில் எந்த மாத்ரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

El Nino என்றால் என்ன?

பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை வழக்கத்தைவிட அதிகரிக்கும் காலநிலை நிகழ்வுதான் El Nino. இதன் தாக்கம் ஒரு குறிப்பிட்ட கடல் பகுதியுடன் நின்றுவிடாமல், உலகின் பல்வேறு பகுதிகளில் மழை மற்றும் வெப்பநிலை முறைகளில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும்.

இந்த ஆண்டு El Nino தொடர்ந்து வலுப்பெற்று வருவதாக வானிலை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மத்திய-கிழக்கு பசிபிக் பகுதியில் கடல் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக உள்ளது. El Nino-வை கண்காணிக்கப் பயன்படுத்தப்படும் Nino 3.4 குறியீடும் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. சில சர்வதேச வானிலை மாதிரிகள் வரும் மாதங்களில் இது மேலும் அதிகரிக்கக்கூடும் எனக் கணித்துள்ளன.மேலும், இந்த El Nino 2027 ஆம் ஆண்டு மே அல்லது ஜூன் வரை நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு El Nino சாதகமா? பாதகமா?

பொதுவாக, வலுவான El nino இருப்பது தென்னிந்தியாவின் வடகிழக்கு பருவமழைக்கு சாதகமானதாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக தமிழகம் உள்ளிட்ட தென் தீபகற்ப பகுதிகளில் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மழைப்பொழிவு அதிகரிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

கடந்த காலங்களையும் இதற்கு உதாரணமாகக் கூறலாம். 1997, 2009, 2015 மற்றும் 2023 ஆகிய El Nino ஆண்டுகளில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை சிறப்பாக இருந்தது. குறிப்பாக 2015-ம் ஆண்டு சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏற்பட்ட மிகப்பெரிய வெள்ளத்தை அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாதது. இதனால், இந்த ஆண்டும் தமிழகத்திற்கு நல்ல வடகிழக்கு பருவமழை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதிக மழைபொழிவுக்கு El Nino மட்டுமே காரணம் கிடையாது

El Nino வலுவாக இருந்தாலும், தமிழகத்தில் நிச்சயம் நல்ல மழை பெய்யும் என்பதை உறுதியாக சொல்ல முடியாது. முன்னதாக 2002 ஆம் ஆண்டில் El Nino நிலவி இருந்தபோதிலும் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. அதேபோல்;, 1982 ஆம் ஆண்டிலும் இந்தியாவின் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை இரண்டுமே பாதிக்கப்பட்டன.

மறுபுறம், 2005, 2010, 2011 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் El Nino இல்லாத நிலையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருந்தது. இதன் மூலம் ஒரு விஷயம் தெளிவாகிறது. El Nino என்பது வடகிழக்கு பருவமழைக்கு சாதகமான ஒரு முக்கிய காரணியாக இருக்கலாம். ஆனால் அது மட்டுமே மழையை தீர்மானிக்கும் காரணியாக இல்லை.

இந்தியப் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல் உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் கடல் மற்றும் வளிமண்டல மாற்றங்களும் வடகிழக்கு பருவமழையை பாதிக்கின்றன. Indian Ocean Dipole உள்ளிட்ட காலநிலை காரணிகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

மேலும், El Nino ஆண்டுகளில் வங்கக்கடலில் உருவாகும் வானிலை அமைப்புகளின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதாகவும், உருவாகும் சில அமைப்புகள் தமிழகம் மற்றும் ஆந்திர கடற்கரையை நோக்கி மேற்கு திசையில் நகரக்கூடும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அதே நேரத்தில், நகரமயமாக்கல், நிலப்பயன்பாட்டில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் உலக வெப்பநிலை உயர்வு போன்றவை கனமழை மற்றும் நகர்ப்புற வெள்ளம் போன்ற நிகழ்வுகளின் தாக்கத்தை மேலும் அதிகரிக்கக்கூடும்.

தமிழகத்திற்கு ஏன் வட கிழக்கு பருவமழை முக்கியம்?

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை போதுமான மழைபொழிவை தரவில்லை. இதனால் தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், வடகிழக்கு பருவமழை மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அக்டோபர் முதல் டிசம்பர் வரை கிடைக்கும் மழை, தென்கிழக்கு பருவமழையால் ஏற்பட்ட பற்றாக்குழையை சரி செய்யும் என்றும் நீர்நிலைகள் மற்றும் நிலத்தடி நீர் வளங்களை மேம்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, தற்போது வலுப்பெற்ற El Nino தமிழகத்திற்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் மற்ற வானிலை காரணிகளையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டியுள்ளது. இந்த நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் பருவகால முன்னறிவிப்பு இம்மாதம் இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக அரசும் El Nino ஏற்படுத்தக்கூடிய தாக்கங்களை கண்காணிக்க நிபுணர் குழுவை அமைத்துள்ளது. மேலும், வடகிழக்கு பருவமழை தொடர்பான முன்னெச்சரிக்கை மற்றும் தயார்நிலை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மொத்தத்தில், வலுவான El Nino தமிழகத்தின் வடகிழக்கு பருவமழைக்கு சாதகமான ஒரு climate signal என்றாலும், இந்த ஆண்டு மழையின் அளவை El Nino மட்டும் தீர்மானிக்காது.
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Explainer