• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /Explained: CM விஜய் கொடியேற்ற கலைஞரே காரணம்... 50 ஆண்டுகளுக்கு முன் அவர் போட்ட விதை!

Explained: CM விஜய் கொடியேற்ற கலைஞரே காரணம்... 50 ஆண்டுகளுக்கு முன் அவர் போட்ட விதை!

Explained: சுதந்திர தினத்தன்று மாநில முதலமைச்சர்களும் தேசியக் கொடியை ஏற்றலாம் என்ற உரிமையைப் பெற்றுத் தந்தவர் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி. இந்த வரலாற்று நிகழ்வு எப்படி நடந்தது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

Written ByUmabarkavi K
Published: Aug 15, 2026, 11:51 AM IST|Updated: Aug 21, 2026, 04:31 PM IST
joinshare
Explained: CM விஜய் கொடியேற்ற கலைஞரே காரணம்... 50 ஆண்டுகளுக்கு முன் அவர் போட்ட விதை!
Image Credit: Image Source: FB

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
Madurantakam By-Election: மரகதம் குமரவேல் முன்னிலை.. தவெக எழுச்சிக்கு பாமக, விசிக வாக்குகள் காரணமா?

Madurantakam By-Election: மரகதம் குமரவேல் முன்னிலை.. தவெக எழுச்சிக்கு பாமக, விசிக வாக்குகள் காரணமா?

2

ISRO வேலைவாய்ப்பு: மருத்துவ அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

3

ரேஷன் கார்டு இருக்கா? இந்த வசதி இருப்பதை மறக்காதீங்க.. ONORC மூலம் கிடைக்கும் முக்கிய நன்மை

4

அமெரிக்காவின் திடீர் தடை... இந்திய ஊழியர்களுக்கு இனி கிரீன் கார்டு கிடைக்காதா? Explained

5

NZ ஒருநாள் தொடர்: 2 இந்திய அணிகள்.. புவி, ஷமிக்கு வாய்ப்பு? முழு விவரம்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Independence Day Explained: இந்தியாவில் இன்று (ஆகஸ்ட் 15) 80வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 80வது சுதந்திர தினத்தன்று வரலாற்றை நினைவுப்படுத்துவது என்பது மிகவும் முக்கியம். ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் என்றாலே டெல்லி செங்கோட்டையில் பிரதமர் தேசியக் கொடியை ஏற்றுவதும், ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தில் குடியரசுத் தலைவர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரை நிகழ்த்துவது வழக்கமாக இருந்து வருகிறது.

1947ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தது முதலே இந்த நடைமுறை இருந்து வருகிறது. அதே வேளையில் மாநில தலைநகரங்களில் இந்த இரு நாட்களிலும் அந்தந்த மாநில ஆளுநர்களே கொடி ஏற்றுவது வழக்கமாக இருந்து வந்தது. சுதந்திர தினத்தன்று மாநில முதலமைச்சர்கள் கொடியேற்ற வேண்டும் என்ற உரிமையை பெற்றுக் கொடுத்த பெருமை கருணாநிதிக்கே சேரும்.   

மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி

மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்பதை முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறிக் கொண்டு இருப்பார். 1967ல் அறிஞர் அண்ணாவின் தலைமையில் தமிழகத்தில் திமுக ஆட்சி மலர்ந்ததை தொடர்ந்து, அவரைத் தொடர்ந்து முதல்வர் பொறுப்பேற்ற கலைஞர்கள் மு.கருணாநிதி மாநில உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். 

மத்திய அரசிடமே அனைத்து அதிகாரங்களும் குவிந்து விடக்கூடாது என்றும் மாநிலங்களுக்கு உரிமை பரவலாக்கப்பட வேண்டும் என்பதற்காக  முன்னாள் முதல்வர் கருணாநிதி, மாநில உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். இதனை மேடை பேச்சுக்களாக நின்று விடக்கூடாது என்பதற்காக, 1974ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் மாநில சுயாட்சி தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. 

மாநில சுயாட்சிக்காக 1969ஆம் ஆண்டிலேயே வல்லுநர் குழுவை தமிழக அரசு அமைத்தது. அதுதான் ராஜமன்னாள் குழு. முன்னாள் தலைமை நீதிபதி பி.வி.ராஜமன்னார் தலைமையில் அடங்கிய இந்த குழு மத்திய மாநில அரசுக்கான அதிகாரக்ஙள குறித்து ஆழமாக ஆய்வு செய்து அறிக்கை அளித்தது. இந்த குழு மத்திய அரசிடம் இருக்கும் அதிகாரங்களை, மாநில அரசுகளை அதிகமாக்கி, பரவலாக்க வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தது.

இந்தக்குழு 1971-ம் ஆண்டு மே 27-ம்தேதி 383 பக்க அறிக்கையை அளித்து. இந்த அறிக்கையின் அடிப்படையில் தான், 1974ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழக சட்டமன்றத்தில் கருணாநிதி மாநில சுயாட்சி தீர்மானத்தை கொண்டு வந்தார். மாநில சுயாட்சி பற்றி பேசும் போதெல்லாம் நாடு பிளவுபட்டுவிடும் என விமர்சனங்கள் எழுந்தன.  இதற்கு கருணாநிதி,

"மாநில சுயாட்சி என்பது நாட்டை பிரிப்பதற்கு அல்ல; நாட்டை வலுப்படுத்துவதற்கே. அதிகார பங்கீடு முறையாக இருந்தால் தான், ஜனநாயகம் மலரும்" 

 

என்று அன்றே உரக்க சொன்னவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. இந்த தீர்மானத்தை தொடர்ந்து, மாநில முதல்வர்கள் சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றும் உரிமையை கருணாநிதி பெற்று தந்தார்.

கருணாநிதி பெற்று தந்த உரிமை

கடந்த 1973-ம் ஆண்டு வரை ஆகஸ்ட் 15-ம் தேதியும், குடியரசு தினமான ஜனவரி 26-ம் தேதியும் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் தான் கோட்டையில் கொடிஏற்றி வந்தனர். மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் அமைதியாக நின்றிருக்க, மத்திய அரசால் நியமிக்கப்பட்டவர்கள் தேசியக்கொடியை ஏற்றுவது ஜனநாயகமாக எனக் கேள்வி எழுப்பி போராட்டம் நடத்தி உரிமையை மீட்டவர் கருணாநிதி. 

கடந்த 1973-ம் ஆண்டு வரை ஆகஸ்ட் 15-ம் தேதியும், குடியரசு தினமான ஜனவரி 26-ம் தேதியும் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் தான் கோட்டையில் கொடிஏற்றி வந்தனர். மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் அமைதியாக நின்றிருக்க, மத்திய அரசால் நியமிக்கப்பட்டவர்கள் தேசியக்கொடியை ஏற்றுவது ஜனநாயகமாக எனக் கேள்வி எழுப்பி போராட்டம் நடத்தி உரிமையை மீட்டவர் கருணாநிதி. 

"மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர், தேசியக்கொடியை ஏற்றும் உரிமை பெற்றிருக்கும்போது, அதே மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்களுக்கு தேசியக் கொடியை ஏற்ற உரிமை இல்லையா? - கருணாநிதி முழங்கினார்.

 

1969ஆம் ஆண்டு சென்னையில் கோட்டையில் நடந்த சுதந்திர தினவிழாவில் முதலமைச்சர்களுக்கு தேசியக் கொடி ஏற்றும் உரிமை வேண்டும் என்று மத்திய அரசை கருணாநிதி வலியுறுத்தினார். இந்த உரிமையை முன்வைத்து மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் எழுதியும், நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். இதற்கென தனித்தீர்மானத்தை தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றினார்.  1971ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த கருணாநிதி, மாநில சுயாட்சிக்காக போராடினார்.

இந்திரா காந்திக்கு எழுதிய கடிதம்

முதல்வர்களுக்கு கொடியேற்றும் உரிமை வழங்குவது தொடர்பாக 1974ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்திக்கு கடிதம் எழுதினார்.  இதனை 'நெஞ்சுக்கு நீதி' என்ற தனது சுயசரிதையில் கருணாநிதி நினைவு கூர்ந்தார் . பலமுறை இந்திரா காந்திக்கு கடிதம் எழுதியிருந்தார். 

இந்த நீண்ட கால கோரிக்கையை 1974ஆம் ஆண்டு ஜூலையில் நிறைவேறியது. கருணாநிதியின் உரிமைக் கூரலை ஏறற அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, தேசியக் கொடியை ஏற்றும் உரிமையை மாநில முதல்வர்களுக்கு வழங்கினார். ஜனவரி 266ஆம் தேதி குடியரசு தின விழாவில் ஆளுநரும், ஆகஸ்ட் 15ஆம் தேதி மாநில முதலமைச்சரும் தேசியக் கொடியை ஏற்றுவார்கள் என உத்தரவு பிறப்பித்தார். 

அன்று முதல், சுதந்திர தினத்தன்று முதலமைச்சர்களும், குடியரசு தினத்தன்று ஆளுநர்களும் கொடியேற்றி வருகின்றனர்.  தமிழகம் மட்டுமின்றி, அனைத்து மாநிலத்திலும் இந்த நடைமுறை தான் இருந்து வருகிறது. ஆகவே, சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றுவதற்கான இந்திய முதலமைச்சர்களின் உரிமை என்பது, பெரும் போராட்டத்திற்குப் பிறகு பெறப்பட்ட ஒரு சிறப்புரிமையாகும். அதை கருணாநிதி போராடி வென்றெடுத்தார்.

ஆண்டுமுதலமைச்சர்கள் பட்டியல்
1974-1975கருணாநிதி (முதல் முறையாக)
 
1977-1987 எம்ஜிஆர்
1989-1990கருணாநிதி
1991 - 1995ஜெயலலிதா
1996-2000கருணாநிதி
2001 -2005ஜெயலலிதா
2006-2010 கருணாநிதி
2011-2016ஜெயலலிதா
 
2017 - 2020எடப்பாடி பழனிசாமி
2021 - 2025 மு.க.ஸ்டாலின்
2026 ஜோசப் விஜய்
 

முதல்முறையாக கொடியேற்றி கருணாநிதி

1974ஆம் ஆண்டு முதல்முறையாக தமிழகத்தில் மாநில முதல்வர் சுதந்திர தினத்தன்று கொடியேற்றினார். முதல்முறையாக கோட்டை கொத்தளத்தில் கருணாநிதி தேசியக் கொடி ஏற்றினார். முதலமைச்சருக்கான உரிமைய பெற்றுக் கொடுத்து, தமிழகத்தில் சுதந்திர தின கொண்டாட்டத்தில் தேசியக் கொடியை ஏற்றிய முதல் முதலமைச்சர் என்ற பெருமையை பெற்றார் கருணாநிதி என்பது குறிப்பிடத்தக்கது.

Add Zee News as a Preferred Source
TAGS:
Independence Day
Explainer