பொதுமக்களுக்கு மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு கண்காட்சி: கங்கா மருத்துவமனை அறிவிப்பு!
மருத்துவமனையின் 'பி' பிளாக் தரைத்தளத்தில் நடைபெறும் இக்கண்காட்சியை மருத்துவமனை தலைவர் கனகவல்லி சண்முகநாதன் தொடங்கி வைத்தார். அக்டோபர் மாதம் முழுவதும் நடைபெறும் இக்கண்காட்சிக்கு அனுமதி முற்றிலும் இலவசம்.
கோவை: உலகம் முழுவதும் அக்டோபர் மாதம் ‘மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக’ கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, பொதுமக்கள் மற்றும் பெண்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த கோவை கங்கா மருத்துவமனை சார்பில் சிறப்பு விழிப்புணர்வு கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மருத்துவமனையின் 'பி' பிளாக் தரைத்தளத்தில் நடைபெறும் இக்கண்காட்சியை மருத்துவமனை தலைவர் கனகவல்லி சண்முகநாதன் தொடங்கி வைத்தார். அக்டோபர் மாதம் முழுவதும் நடைபெறும் இக்கண்காட்சிக்கு அனுமதி முற்றிலும் இலவசம்.
மார்பகப் புற்றுநோய் குறித்த தேவையற்ற பயத்தைப் போக்குவது, தொடக்க நிலையிலேயே பரிசோதனை செய்ய பெண்களை ஊக்குவிப்பது மற்றும் உரிய நேரத்தில் சிகிச்சை பெறுவதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதே இதன் முதன்மை நோக்கம் என டாக்டர் ராஜா சண்முக கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
“மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், தேவையற்ற பயத்தைப் போக்குதல், ஆரம்ப நிலையிலேயே பரிசோதனை செய்து கொள்ள பெண்களை ஊக்குவித்தல் மற்றும் உரிய நேரத்தில் சிகிச்சை பெறுவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தல் ஆகியவற்றை முக்கிய நோக்கமாகக் கொண்டு இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது”
கண்காட்சியின் சிறப்பம்சங்கள்:
அடிப்படைத் தகவல்கள்: நோயின் அறிகுறிகள், சுய மார்பக பரிசோதனை செய்யும் முறைகள் மற்றும் மேமோகிராபி பரிசோதனையின் முக்கியத்துவம் பற்றிய விளக்கங்கள்.
அச்சம் தணிக்கும் வழிகாட்டல்: கீமோதெரபி சிகிச்சை குறித்த சந்தேகங்கள் மற்றும் புற்றுநோய் பற்றிய தவறான கருத்துகளுக்குத் தெளிவான விளக்கங்கள்.
நவீன மருத்துவ முறைகள்: மார்பகப் புற்றுநோய் அறுவை சிகிச்சையில் ஏற்பட்டுள்ள நவீன முன்னேற்றங்கள், அறுவை சிகிச்சைக்குப் பின் செய்யப்படும் மார்பக மறுசீரமைப்பு (Breast Reconstruction) மற்றும் 'லிம்பிடீமா' (கைகளில் ஏற்படும் வீக்கம்) தடுப்பு முறைகள்.
பெண்களும் அவர்களின் குடும்பத்தினரும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இக்கண்காட்சி, புற்றுநோய்க்கு எதிரான விழிப்புணர்வை விதைக்கும் மிக முக்கிய முயற்சியாகும்.