• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /சிறு வியாபாரிகளுக்கு குட் நியூஸ்: தமிழ்நாடு அரசின் Self-Declaration புதிய விதி!

சிறு வியாபாரிகளுக்கு குட் நியூஸ்: தமிழ்நாடு அரசின் Self-Declaration புதிய விதி!

Tamil Nadu government new rules : எடை மற்றும் அளவீட்டுச் சட்டத்தில் அதிரடி மாற்றம் செய்துள்ள தமிழ்நாடு அரசு, சிறுவியாபாரிகள் ஆன்லைனிலேயே சுயசான்றிதழ் பெறலாம் என அறிவித்துள்ளது.

Written ByKarthikeyan Sekar
Published: Nov 09, 2026, 06:37 PM IST|Updated: Nov 09, 2026, 06:39 PM IST
joinshare
சிறு வியாபாரிகளுக்கு குட் நியூஸ்: தமிழ்நாடு அரசின் Self-Declaration புதிய விதி!
Image Credit: Tamil Nadu government new rules

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
ரூ.600 கோடி மதிப்பிலான பங்குகள்... திரும்பப் பெற Zee Entertainment நிறுவனம் முடிவு

ரூ.600 கோடி மதிப்பிலான பங்குகள்... திரும்பப் பெற Zee Entertainment நிறுவனம் முடிவு

2

Explained : தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் வரப்போகுதா? மழை பொய்த்தால் இதுதான் நிலை..

3

CM விஜய்யின் சிறப்பு வட்டி தள்ளுபடி... வீடு, மனை ஒதுக்கீடுதாரர்களுக்கு ஜாக்பாட்

4

செஞ்சியில் மீண்டும் அதிர்ச்சி! 7 வயது சிறுமியை கடத்த முயற்சி.. தப்பித்தது எப்படி? இருவர் கைது

5

என்விடியா CEO விவகாரத்தில் கிளம்பும் பூதம்: இரண்டாவது கள்ள உறவு, மகன்-மகளின் சம்பளம்... பறிபோகும் பதவி?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Tamil Nadu government new rules : தமிழ்நாட்டில் மளிகைக் கடைகள், பெட்டிக் கடைகள், தேநீரகங்கள் மற்றும் சிறு வணிக நிறுவனங்களை நடத்தும் லட்சக்கணக்கான சிறு வியாபாரிகளுக்குப் பயனளிக்கும் வகையில் எடை மற்றும் அளவீட்டுத் துறை விதிகளில் தமிழ்நாடு அரசு மிக முக்கியமான நிர்வாகச் சீர்திருத்தத்தைக் கொண்டுவந்துள்ளது. தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை செயலாளர் கி. வீர ராகவ ராவ் அவர்களால் வெளியிடப்பட்டுள்ள அரசாணை மூலம், தமிழ்நாடு சட்ட அளவியல் அமலாக்க விதிகளில் வரைவுத் திருத்தங்கள் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன.  

பொதுவாக வணிகர்கள் தாங்கள் பயன்படுத்தும் தராசுகள், எடைக்கற்கள் மற்றும் அளவீட்டு உபகரணங்களை ஆண்டுதோறும் அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியில் தொழிலாளர் நலத் துறையின் சட்ட அளவியல் பிரிவு அதிகாரிகளிடம் நேரில் கொண்டு சென்று சரிபார்த்து முத்திரையிட வேண்டும். அல்லது ஆய்வாளர்கள் நேரடியாகக் கடைகளுக்கு வந்து ஆய்வு மேற்கொண்டு சான்றளிக்க வேண்டும். இதனால் ஏற்படும் காலதாமதம், ஆய்வு நடைமுறைகளில் உள்ள நடைமுறைச் சிரமங்கள் மற்றும் தொடர் அலைச்சல்களைக் களையும் நோக்கில், குறைந்த ஆபத்துள்ள அளவீடுகளுக்கு "சுய உறுதிமொழி" மூலம் சான்றிதழ் பெறும் எளிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  

புதிய விதிகளின்படி, குறிப்பிட்ட வகை எடை மற்றும் அளவீட்டுச் சாதனங்களைப் பயன்படுத்தும் வணிகர்கள் நியமிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ இணையதள முகப்பில் மின்னணு முறையில் விவரங்களைப் பதிவு செய்து கட்டணம் செலுத்தி சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம். இந்த சலுகை 'Schedule IX-A'-ன் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள குறைந்த ஆபத்துள்ள அளவீட்டுக் கருவிகளுக்கு மட்டுமே பொருந்தும். இதில் 2 லிட்டர் வரையிலான கொள்ளளவு அளவைகள், துணி மற்றும் ஸ்டீல் அளவீட்டு டேப்புகள், மடிப்பு அளவுகோல்கள், சர்வே செயின்கள், கிளாஸ் சி மற்றும் டி வகை தராசுகள், 10 கிலோ வரையிலான வீட்டு உபயோக கிச்சன் தராசுகள், நபர்களின் எடையை அளக்கும் மெக்கானிக்கல் தராசுகள், 10 கிலோ திறன் கொண்ட கவுண்டர் தராசுகள், இரும்பு அறுகோண எடைக்கற்கள், நீர் மீட்டர்கள் மற்றும் பெக் அளவைகள் ஆகியவை அடங்கும்.  

இப்புதிய விதியினால் வணிகர்கள் அலுவலகங்களுக்கு நேரடியாக ஏறி இறங்க வேண்டிய அவசியமில்லை என்பதுடன், சான்றிதழ் செல்லுபடியாகும் காலம் முடிவடைவதற்கு 30 நாட்களுக்கு முன்னதாகவே இணையவழியில் விண்ணப்பித்துப் புதுப்பித்துக் கொள்ளலாம். இணையதளத்திலிருந்து பெறப்படும் சான்றிதழை நுகர்வோர் மற்றும் ஆய்வாளர்கள் எளிதில் பார்க்கும் வகையில் கடைகளில் காட்சிப்படுத்தினால் போதுமானது. இதன் மூலம் வணிக நடைமுறைகள் எளிமையாக்கப்படுவதுடன், நேரடி ஆய்வுகளின் போது ஏற்படும் தேவையற்ற புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது.

அதேசமயம் இந்த எளிமைப்படுத்தப்பட்ட நடைமுறையைத் தவறாகப் பயன்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்யக் கடுமையான நிபந்தனைகளும் வரையறுக்கப்பட்டுள்ளன. வணிகர்கள் சமர்ப்பிக்கும் சுய உறுதிமொழியில், தாங்கள் பயன்படுத்தும் உபகரணங்கள் சரியான தரக்கட்டுப்பாட்டில் உள்ளன என்றும், எவ்வித மாற்றங்களும் செய்யப்படவில்லை என்றும் உத்தரவாதம் அளிக்க வேண்டும். தவறான அல்லது போலியான தகவல்களை வழங்கிச் சான்றிதழ் பெற்றது கண்டறியப்பட்டால், சட்ட அளவியல் சட்டம் 2009-ன் கீழ் குற்றவியல் நடவடிக்கை மற்றும் கடும் அபராதம் விதிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu