• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்! சொத்துக் கணக்கு தாக்கல் செய்ய காலவகாசம் நீட்டிப்பு

அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்! சொத்துக் கணக்கு தாக்கல் செய்ய காலவகாசம் நீட்டிப்பு

Tamil Nadu Government Employees : தமிழக அரசு ஊழியர்கள் IFHRMSல் சொத்துக் கணக்கு தாக்கல் செய்ய டிசம்பர் 31 வரை அவகாசம் நீட்டிப்பு வழங்கியுள்ளது தமிழ்நாடு அரசு

Written ByKarthikeyan Sekar
Published: Oct 31, 2026, 02:58 PM IST|Updated: Oct 31, 2026, 03:07 PM IST
joinshare
அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்! சொத்துக் கணக்கு தாக்கல் செய்ய காலவகாசம் நீட்டிப்பு
Image Credit: Tamil Nadu government employees

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
'தூஸ்ரா' படத்திற்கு எதிராக சவுரவ் கங்குலி வழக்கு.. பின்னணி என்ன? Explained

'தூஸ்ரா' படத்திற்கு எதிராக சவுரவ் கங்குலி வழக்கு.. பின்னணி என்ன? Explained

2

ரூ.200க்கு 10 மளிகைப் பொருட்கள்.. ரேஷன் அட்டை இல்லாமல் வாங்க முடியுமா? முக்கிய அறிவிப்பு

3

கே.என். நேரு ஊழல் வழக்கில்... சீரியல் நடிகைக்கு தொடர்பா...? அவரே கொடுத்த விளக்கம்

4

மீண்டும் அதிகரிக்கும் அகவிலைப்படி: ஜனவரி டிஏ உயர்வு எவ்வளவு? AICPI-IW கொடுத்த ஹிண்ட்

5

மரம் அறுக்கும் இயந்திரத்தால் தாக்குதல்... 2 மாணவிகள் படுகாயம் - 21 வயது இளைஞரின் கொடூர செயல்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Tamil Nadu Government Employees : தமிழக அரசு ஊழியர்கள் தங்களின் சொத்து மற்றும் கடன் விவரங்களை இணையவழியில் தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை மேலும் 2 மாதங்களுக்கு நீட்டித்து தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளது. இது குறித்த கூடுதல் தகவல்களை இங்கே விரிவாக பார்க்கலாம்.

மேலும் படிக்க | TNPSC Job : தமிழக இளைஞர்களுக்கு மெகா தீபாவளி பரிசு! விரைவில் மின்வாரியத்தில் 8,000 வேலைவாய்ப்பு

அரசாணை மற்றும் விதிமுறைகள்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் நடத்தை விதிகளின் படி, அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள், கடன் பொறுப்புகள் குறித்த விவரங்களை ஆண்டுதோறும் IFHRMS இணையதளம் மூலம் ஆன்லைனில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.  

இதன்படி, 2025 டிசம்பர் 31 ஆம் தேதியுடன் முடிந்த நாட்காட்டி ஆண்டிற்கான விவரங்களை 2026 அக்டோபர் 31-க்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அடுத்தடுத்த ஆண்டுகளில் மார்ச் 31-க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.  

நீட்டிப்புக்கான பின்னணி: அக்டோபர் 31 ஆம் தேதி இன்றுடன் இந்த அவகாசம் நிறைவடைய இருந்த சூழலில், சர்வர் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பக் காரணங்களாலும், பணிச்சுமையினாலும் பல ஊழியர்களால் விவரங்களைப் பதிவேற்ற முடியவில்லை. இதனால் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு அரசு ஊழியர் சங்கங்கள் மற்றும் அமைப்புகள் அரசிடம் தொடர்ச்சியாகக் கோரிக்கைகளை முன்வைத்தன.  

அரசு பிறப்பித்த புதிய உத்தரவு: ஊழியர் சங்கங்களின் கோரிக்கைகளை ஏற்று பரிசீலித்த தமிழக அரசு, சொத்து விவரங்களை IFHRMS தளத்தில் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டித்துள்ளது.  

இது தொடர்பாக மனிதவள மேலாண்மைத் துறையின் முதன்மைச் செயலாளர் அனுப்பியுள்ள அதிகாரப்பூர்வ கடிதத்தில், அரசு ஊழியர்கள் தங்களின் சொத்து விவரங்களை வரும் 2026 டிசம்பர் 31 ஆம் தேதி வரை தாக்கல் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்த உத்தரவு அனைத்து கூடுதல் தலைமைச் செயலாளர்கள், முதன்மைச் செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட நீதிபதிகள், TNPSC மற்றும் உயர்நீதிமன்றப் பதிவாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், துறைத் தலைவர்கள் தங்கள் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு அறிவுறுத்தி, நீட்டிக்கப்பட்ட இந்த கால அவகாசத்திற்குள் தவறாமல் சொத்து விவரங்களைத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.  

 

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu