• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /TET தேர்வு எழுதும் ஆசிரியர்களுக்கு சூப்பர் செய்தி! பணிச்சான்று வழங்க சிறப்பு முகாம்

TET தேர்வு எழுதும் ஆசிரியர்களுக்கு சூப்பர் செய்தி! பணிச்சான்று வழங்க சிறப்பு முகாம்

TET teachers latest news : TET ஆசிரியர்களுக்கு உடனடி பணிச்சான்று வழங்கும் விதமாக மாவட்ட வாரியாக சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. இது குறித்த முழு விவரம் இங்கே

Written ByKarthikeyan Sekar
Published: Nov 06, 2026, 06:39 AM IST|Updated: Nov 06, 2026, 06:45 AM IST
joinshare
TET தேர்வு எழுதும் ஆசிரியர்களுக்கு சூப்பர் செய்தி! பணிச்சான்று வழங்க சிறப்பு முகாம்
Image Credit: TET teachers latest news

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
Explainer: டெல்லி நகரை வாட்டும் காற்று மாசுபாடு, திணறும் மக்கள்: 470-ஐத் தாண்டும் AQI

Explainer: டெல்லி நகரை வாட்டும் காற்று மாசுபாடு, திணறும் மக்கள்: 470-ஐத் தாண்டும் AQI

2

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. விடாமல் கொட்டப்போகுது மழை.. தீபாவளிக்கு எப்படி?

3

இசிஎல் பைனான்ஸ் நிறுவனத்திற்கு உச்ச நீதிமன்றம் வைத்த செக்: முழு விவரம்

4

‘சீன்’ ட்விட்டர் ரிவ்யூ! 3வது ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தாரா சூர்யா? ரசிகர்களின் விமர்சனம்..

5

8வது ஊதியக் குழு: அமலாக்கம், ஊதிய திருத்தம், அரியர்... அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

TET teachers latest news : தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளிகளில் 01.09.2025-க்கு முன்னர் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தாள் 1 மற்றும் தாள் 2-க்கு விண்ணப்பிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) 02/2026 என்ற அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. டிசம்பர் 2026-ல் நடைபெற உள்ள இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆசிரியர்கள் பணிச்சான்று (Annexure I) பெற்று, TRB இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  

மேலும் படிக்க | நன்செய் நிலத்தை மனையாக மாற்ற கிடுக்கிப்பிடி: தமிழக அரசின் அதிரடி உத்தரவு!

ஆசிரியர்களின் அலைச்சலைத் தவிர்க்க சிறப்பு முகாம்: பணிச்சான்று பெறுவதற்காக ஆசிரியர்கள் பள்ளிகள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கு நேரடியாகச் சென்று அலைந்து திரியாமல் இருக்கவும், தேவையற்ற தாமதங்களைத் தவிர்க்கவும் கல்வித்துறை சார்பில் மாவட்ட வாரியாகச் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஒரே நாளில் சரிபார்ப்புப் பணிகள் முடிக்கப்பட்டு, ஆசிரியர்களுக்கு விரைவாகப் பணிச்சான்று வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.  

திருச்சி மாவட்டக் கல்வி அலுவலகத்தின் முக்கிய நடவடிக்கை: இதன் ஒரு பகுதியாக, திருச்சிராப்பள்ளி மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) வெளியிட்டுள்ள செயல்முறைகளின்படி, 05.11.2026 அன்று மாவட்டக் கல்வி அலுவலகத்தில் இதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமில், தகுதிவாய்ந்த ஆசிரியர்களின் விண்ணப்பப் படிவங்களைச் சரிபார்த்து, அன்றைய தினமே பணிச்சான்றுகளை வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  

பள்ளிப் பணியாளர்கள் மூலமே சமர்ப்பிக்க உத்தரவு: ஆசிரியர்களின் பணி பாதிக்கப்படக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, ஆசிரியர்கள் எக்காரணம் கொண்டும் முகாமிற்கு நேரடியாக வரக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ஆசிரியர்களிடமிருந்து தேவையான ஆவணங்களைப் பெற்று, விவரங்களைச் சரிபார்த்து, தலைமை ஆசிரியர்கள் பள்ளி அலுவலகப் பணியாளர்கள் வழியாகவே மாவட்டக் கல்வி அலுவலகத்தில் சமர்ப்பித்து பணிச்சான்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

தேவையான முக்கிய ஆவணங்கள்: இச்சிறப்பு முகாமில் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களாகத் தலைமை ஆசிரியர் பரிந்துரைக் கடிதம், ஆசிரியர்களின் பெயர்ப் பட்டியல் (ஒரு பிரதி), இரண்டு பிரதிகளில் பூர்த்தி செய்யப்பட்ட Annexure-I படிவம், ஆசிரியர் பணிப்பதிவேடு நகல் (முதல் மற்றும் 2-ஆம் பக்கம்), நியமன ஆணை அல்லது பதிவு செய்யப்பட்ட பணிப்பதிவேடு பக்க நகல், D.T.Ed / B.Ed கல்விச் சான்றிதழ் மற்றும் EMIS Staff Details நகல் ஆகியவை பட்டியலிடப்பட்டுள்ளன.  

இதேபோன்ற சிறப்பு நடைமுறைகள் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருவதால், TET தேர்வுக்குத் தயாராகும் ஆசிரியர்கள் மிகுந்த நிம்மதியும் மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர்.

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu