SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

இடைநிலை ஆசிரியர்களுக்கு ஜாக்பாட்: அடிப்படைச் சம்பளம் ரூ.88,000 வரை உயர்வு

Tamil Nadu Teachers Salary Hike : தமிழ்நாட்டில் உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக அடிப்படைச் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

Written By Karthikeyan Sekar
Published: Nov 26, 2026, 07:32 IST | Updated: Nov 26, 2026, 07:38 IST
Image Credit: Tamil Nadu Teachers Salary Hike
Join

Tamil Nadu Teachers Salary Hike : தமிழக அரசுப் பள்ளிகளில் பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்களின் நீண்டகால ஊதியக் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு முக்கிய அரசாணையை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் இடைநிலை ஆசிரியர்களின் அதிகபட்ச அடிப்படைச் சம்பளம் ரூ.88,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதுடன், அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய வருடாந்திர சம்பள உயர்வு இனி எவ்விதத் தடையுமின்றித் தொடர்ந்து கிடைக்கும்.  

மேலும் படிக்க | திருச்சி மக்களே! உங்களுக்கான பொன்னான வாய்ப்பு - மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு

இடைநிலை ஆசிரியர்களுக்கு என்ன சம்பளப் பிரச்சனை இருந்தது?

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் அவர்களின் பணி அனுபவத்திற்கு ஏற்ப 'வருடாந்திர ஊதிய உயர்வு' வழங்கப்படும். இதற்காக அரசின் ஊதிய அட்டவணையில் அடுத்தடுத்த 'ஊதிய உயர்வு படிகள்' நிர்ணயிக்கப்பட்டிருக்கும். ஆனால், பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றும் மூத்த இடைநிலை ஆசிரியர்கள் பலர், தங்களது ஊதிய நிலையான நிலை 10 -ன் உச்சபட்ச சம்பள வரம்பை ஏற்கனவே எட்டிவிட்டனர். ஊதிய அட்டவணையில் அதற்கு மேல் அடுத்தடுத்த சம்பள உயர்வு படிகள் இல்லாததால், அவர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வு கிடைக்காமல் சம்பளம் ஒரே இடத்தில் நின்றுவிட்டது. இதனைச் சரிசெய்யக் கோரி, இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் கடந்த 22.06.2026 அன்று தமிழக அரசுக்குக் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.  

தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய அரசாணை என்ன சொல்கிறது?

ஆசிரியர் சங்கங்களின் நியாயமான கோரிக்கையைக் கவனமாகப் பரிசீலித்த தமிழக அரசின் நிதித்துறை இந்த அரசாணையை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு திருத்தப்பட்ட ஊதிய விதிகள் 2017-ன் கீழ், இடைநிலை ஆசிரியர்களுக்காக மட்டும் 'நிலை-10' (Pay Level-10) ஊதிய அட்டவணையில் கூடுதல் சம்பள உயர்வு படிகள் உருவாக்கப்பட்டு, புதிய ஊதிய அட்டவணை அமல்படுத்தப்பட்டுள்ளது.  

புதிய ஊதிய அட்டவணையின்படி சம்பளம் எவ்வளவு உயர்ந்துள்ளது?

புதிய அரசாணையின்படி, இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய அட்டவணையில் மொத்தம் 50 ஊதிய உயர்வு படிகள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி அடிப்படைச் சம்பள விவரங்கள் பின்வருமாறு மாற்றப்பட்டுள்ளன:

ஆரம்ப நிலை அடிப்படைச் சம்பளம் (படி 1): ரூ.20,600

10-வது ஆண்டு / படி சம்பளம் (படி 10): ரூ.26,900

20-வது ஆண்டு / படி சம்பளம் (படி 20): ரூ.36,200

30-வது ஆண்டு / படி சம்பளம் (படி 30): ரூ.48,700

40-வது ஆண்டு / படி சம்பளம் (படி 40): ரூ.65,500

46-வது ஆண்டு / படி சம்பளம் (படி 46): ரூ.78,200

அதிகபட்ச அடிப்படைச் சம்பளம் (படி 50): ரூ.88,000  

இது அடிப்படைச் சம்பளம் மட்டுமே. இதனுடன் அகவிலைப்படி, வீட்டு வாடகைப் படி உள்ளிட்ட இதர படிகளும் சேர்த்து வழங்கப்படும்

இந்த அரசாணையால் யாருக்கெல்லாம் நேரடிப் பலன் கிடைக்கும்?

பள்ளிக்கல்வித் துறையில் நீண்ட காலம் பணியாற்றி, உச்சபட்ச ஊதிய வரம்பை எட்டியதால் வருடாந்திர இன்கிரிமெண்ட் இல்லாமல் காத்திருந்த அனைத்து மூத்த இடைநிலை ஆசிரியர்களுக்கும் இந்த அரசாணை நேரடிப் பலனைத் தரும். ஊதிய அட்டவணையில் கூடுதல் படிகள் சேர்க்கப்பட்டுள்ளதால், இனி ஒவ்வொரு ஆண்டும் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழக்கமான வருடாந்திர ஊதிய உயர்வு எவ்விதத் தடையுமின்றித் தொடர்ந்து கிடைக்கும். பல ஆண்டுகளாகச் சம்பள உயர்வு தேக்கத்தால் தவித்து வந்த ஆசிரியர்களுக்கு இந்த அறிவிப்பு பெரும் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளது.

 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

ZEENEWS TRENDING STORIES