• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /வீட்டில் இருந்தே போராட்டம் நடத்தலாம்.. ‘ஜந்தர் மந்தர் சலோ’ வீடியோ கேம் அறிமுகம்!

வீட்டில் இருந்தே போராட்டம் நடத்தலாம்.. ‘ஜந்தர் மந்தர் சலோ’ வீடியோ கேம் அறிமுகம்!

டெல்லி ஜந்தர் மந்தர் போராட்ட சூழலை மையமாக கொண்டு, போராட்டக்காரர் மற்றும் போலீஸ் அதிகாரியாக மாறி விளையாடும் ‘Jantar Mantar Chalo’ என்ற 3D வீடியோ கேமை ஐடி ஊழியர் சூரஜ் குஷ்வா உருவாக்கியுள்ளார்.

Written ByR Balaji
Published: Oct 16, 2026, 07:16 PM IST|Updated: Oct 16, 2026, 07:19 PM IST
joinshare
வீட்டில் இருந்தே போராட்டம் நடத்தலாம்.. ‘ஜந்தர் மந்தர் சலோ’ வீடியோ கேம் அறிமுகம்!

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
சென்னையில் மேக வெடிப்பு? மிக்ஜாம் புயலுக்கு பின் அதி கனமழை - உதவி எண் அறிவிப்பு

சென்னையில் மேக வெடிப்பு? மிக்ஜாம் புயலுக்கு பின் அதி கனமழை - உதவி எண் அறிவிப்பு

2

கொல்கத்தாவில் பயங்கரம்.. துர்கா பூஜை கூட்ட நெரிசலில் 17 பேர் பலி! என்ன நடந்தது?

3

Test Twenty: புதிதாக அறிமுகமாகும் கிரிக்கெட் ஃபார்மெட்.. டெஸ்ட் ட்வென்டி என்றால் என்ன? Explained

4

அஞ்சல் துறை ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு: எவ்வளவு கிடைக்கும்? கணக்கீடு இதோ

5

ADMK-வில் நடிகர் தனுஷ்? அதிமுகவின் ராஜேந்திர பாலாஜி சொன்ன மேட்டர்?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்துவதில் ஏற்படும் சவால்களை மையமாக கொண்டு வீட்டில் இருந்தபடியே விளையாடக்கூடிய புதிய வீடியோ கேம் உருவாக்கப்பட்டுள்ளது. போராட்டக்காராகவும், போலீஸ் அதிகாரியாகவும் மாறி விளையாடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கேம் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

இந்த கேம்மை உருவாக்கியது யார்?

உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியைச் சேர்ந்த 27 வயதான ஐடி ஊழியர் சூரஜ் குஷ்வா, ‘ஜந்தர் மந்தர் சலோ’ (Jantar Mantar Chalo) என்ற இந்த 3D வீடியோ கேமை உருவாக்கியுள்ளார். டெல்லியில் போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்படுவது தொடர்பான செய்திகளைப் பார்த்து இந்த யோசனை தோன்றியதாக அவர் தெரிவித்துள்ளார்.

‘Bugswriter’ என்ற பெயரில் சமூக வலைதளங்களில் செயல்படும் சூரஜ், கேமின் நிரலாக்கப் பணிகளில் சிலவற்றுக்கு Claude உள்ளிட்ட செயற்கை நுண்ணறிவுக் கருவிகளைப் பயன்படுத்தியுள்ளார். இருப்பினும், கேமின் அடிப்படை யோசனையும் விளையாட்டு வடிவமைப்பும் தன்னுடையது என குறிப்பிட்டுள்ளார்.

இந்த விளையாட்டில் போராட்டக்காரர் அல்லது டெல்லி போலீஸ் என இரண்டு கதாபாத்திரங்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்யலாம்.

போராட்டக்காரராக விளையாடுபவர்கள், மற்றவர்களை தங்கள் அணியில் சேர்த்துக்கொண்டு, போலீஸ் தடுப்புகளை தாண்டி ஜந்தர் மந்தரை அடைந்து தர்ணா போராட்டத்தை தொடர வேண்டும். மெட்ரோ நுழைவாயில்கள் மூடப்படுவது, தடியடி, இணையத் தடைகள், கைது நடவடிக்கைகள் போன்ற சவால்களையும் எதிர்கொள்ள வேண்டும்.

போலீஸ் அதிகாரியாக விளையாடுபவர்கள், போராட்டக்காரர்கள் குறிப்பிட்ட இடத்தை அடைவதை தடுக்க வேண்டும். இதற்காக தடுப்புகளை ஏற்படுத்துவது, தடியடி மற்றும் கண்ணீர்ப்புகையை பயன்படுத்துவது, போராட்டக்காரர்களை கைது செய்வது போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும், டெல்லியின் சாலைகளில் காணப்படும் பள்ளங்கள், குப்பைகள், சாலையை மறிக்கும் மாடுகள், தேநீர்க் கடைகள், கோல்கப்பா போன்ற அன்றாட காட்சிகளும் நகைச்சுவை கலந்த முறையில் சேர்க்கப்பட்டுள்ளன. அரசியல் நையாண்டியுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த கேம், போராட்ட சூழலை மெய்நிகர் அனுபவமாக மாற்றுகிறது.
 

Add Zee News as a Preferred Source
TAGS:
India