SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

கள்ளக்குறிச்சி மக்களே ! கல்விக்கடன் மற்றும் தொழில் கடன் முகாம் தேதிகள் அறிவிப்பு!

கள்ளக்குறிச்சியில் நவம்பர் 12, 13 தேதிகளில் அடுத்தடுத்து நடக்க உள்ள சிறப்பு முகாம்கள் குறித்த முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

Written By Karthikeyan Sekar
Published: Nov 11, 2026, 03:47 PM IST | Updated: Nov 11, 2026, 03:59 PM IST
Image Credit: Kallakurichi loan camp
Join

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொழில் தொடங்க விரும்புவோருக்கு உதவிடும் வகையில் கடன் விழிப்புணர்வு முகாமும், பள்ளிப் படிப்பை முடித்து உயர்கல்வி பயில விரும்பும் மாணவ-மாணவிகளுக்குக் கல்விக் கடன் வழங்கும் மாபெரும் முகாமும் அடுத்தடுத்த நாட்களில் நடைபெற உள்ளன. இத்தகவலை மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.  

1. திருக்கோவிலூரில் தொழில் கடன் விழிப்புணர்வு முகாம் (நவம்பர் 12)

கள்ளக்குறிச்சி மாவட்டத் தொழில் மையம் சார்பில், தொழில் தொடங்க ஆர்வமுள்ள தொழில்முனைவோருக்கான கடன் விழிப்புணர்வு முகாம் திருக்கோவிலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வரும் 12.11.2026 வியாழக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் நடைபெறுகிறது.  

இம்முகாமில் கலந்துகொண்டு வியாபாரம், சேவைத் தொழில் மற்றும் உற்பத்தித் தொழில் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு தொழிலைத் தொடங்க வங்கிக் கடன் பெற விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் தங்களது புகைப்படம், பான் கார்டு, ஆதார் அட்டை, குடும்ப அட்டை (ரேஷன் கார்டு), பள்ளி கல்விச் சான்றிதழ் மற்றும் விலைப்புள்ளி போன்ற தேவையான ஆவணங்களுடன் நேரில் வருகை தந்து பயன்பெறலாம்.  

கூடுதல் விவரங்களுக்கு, கள்ளக்குறிச்சி வீரசோழபுரத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக நான்காவது தளத்தில் இயங்கும் மாவட்டத் தொழில் மையத்தின் பொது மேலாளரை நேரில் தொடர்புகொள்ளலாம். அல்லது 04151 - 294057 என்ற தொலைபேசி எண்ணை அழைத்து விவரங்களைப் பெறலாம்.  

2. ஆட்சியர் அலுவலகத்தில் மாபெரும் கல்விக் கடன் முகாம் (நவம்பர் 13)

பள்ளிப் படிப்பை முடித்து உயர்கல்விக்குச் செல்ல விரும்பும் மாணவர்கள் வங்கிகளில் கல்விக் கடன் எளிதாகப் பெறும் வகையில், அனைத்து வங்கிகளையும் ஒருங்கிணைத்து "மாபெரும் கல்விக் கடன் முகாம்" வரும் 13.11.2026 வெள்ளிக்கிழமை அன்று காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக GDP கூட்டரங்கில் நடைபெற உள்ளது.  

இம்முகாமில் மாணவர்கள் கல்விக் கடன் பெறுவதற்கு ஏதுவாக, மத்திய அரசின் PM வித்யா லட்சுமி போர்டல் (https://pmvidyalaxmi.co.in/) மூலம் வழிகாட்டப்படும். மாணவர்கள் இத்தளத்தில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, வங்கிகளில் சமர்ப்பித்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து வகையான மேற்படிப்புகளுக்கும் கடன் பெறலாம். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள், கிராம வங்கிகள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்கள் மூலம் இந்தக் கல்விக் கடன்கள் வழங்கப்படுகின்றன. மாணவர்கள் தங்கள் இருப்பிடத்திற்கு அருகிலுள்ள வங்கிக் கிளைகளுக்கு ஆன்லைன் வழியே விண்ணப்பிக்கலாம்.  

விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்கள்:

மாணவர் மற்றும் பெற்றோரின் ஆதார் அட்டை மற்றும் பான் கார்டு நகல்கள்.  

மாணவரின் 10, 11, 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள்.  

12-ஆம் வகுப்பு மாற்றுச் சான்றிதழ் (TC).  

சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் மற்றும் இருப்பிடச் சான்றிதழ்.  

மாணவர் குடும்பத்தின் முதல் தலைமுறைப் பட்டதாரி எனில் அதற்கான சான்றிதழ்.  

தகுதி அடிப்படையிலான சேர்க்கைக்கான சான்று.  

கல்லூரியில் பயில்வதற்கான போனஃபைட் சான்றிதழ்.  

அனைத்து ஆண்டுகளுக்கான முழுக் கல்விக் கட்டண விவரங்கள்.  

மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, போர்டல் மூலம் விரைவில் விண்ணப்பித்துக் கல்விக் கடனைப் பெற்று உயர்கல்வியைத் தொடர வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

ZEENEWS TRENDING STORIES