SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

காவ்யா - அனிருத் Reception: CM விஜய் - ரஜினி சந்திப்பு... முதல்வரான பின் முதல்முறை - கலக்கல் போட்டோஸ்

காவ்யா மாறன் - அனிருத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய், திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இதன் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

Written By Sudharsan G
Published: Nov 21, 2026, 20:13 IST | Updated: Nov 21, 2026, 20:57 IST
Image Credit: Anirudh Kavya Maran Reception | Image Source : X
Join

Kavya Maran - Anirudh Reception: சன் குழுமத்தின் நிறுவனரும், தலைவருமான கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன். இவர் சன் டிவி நெட்வொர்க்கின் நிர்வாக இயக்குநராகவும், சன்ரைசர்ஸ் கிரிக்கெட் பிரான்சைஸின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் காவ்யா மாறன் செயல்படுகிறார்.

அந்த வகையில், காவ்யா மாறனுக்கும், பிரபல திரைப்பட இசையமைப்பாளரான அனிருத் ரவிசந்திரனுக்கும் இடையே கடந்த நவம்பர் 11ஆம் தேதி கிரீஸ் நாட்டில் பிரம்மாண்டமான முறையில் திருமணம் நடைபெற்றது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காவ்யா - அனிருத் ரிசப்ஷன்

இந்நிலையில், காவ்யா மாறன் - அனிருத் தம்பதியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர ஹோட்டலில் இன்று (நவ. 21) நடைபெற்றது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர நிகழ்வாக காவ்யா - அனிருத் திருமண வரவேற்பு பார்க்கப்பட்டது.

முக்கிய அரசியல் தலைவர்கள் பங்கேற்பு

காவ்யா - அனிருத் திருமண வரவேற்பில் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பங்கேற்றனர். தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, கேரள முதலமைச்சர் சதீஷன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

அனிருத்தின் உறவினரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கோட்-சூட்டில்  வருகை தந்திருந்தார். மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் வேட்டி சட்டையில் வருகை தந்திருந்தார்.

திராவிடர் கழகத்தின் தலைவர் கி. வீரமணி, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், திமுக துணைப் பொதுச்செயலாளரும் மக்களவை உறுப்பினரும் கனிமொழி ஆகியோரும் நிகழ்வில் பங்கேற்றுள்ளனர். இந்த திருமண வரவேற்பில் அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பட நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள், பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர்.

ஹிட் அடித்த புகைப்படங்கள்

காவ்யா மாறன் - அனிருத் ரவிசந்திரன் திருமண வரவேற்பில் ரஜினிகாந்த் - ஸ்டாலின் - இபிஎஸ் ஆகியோர் தனியாக அமர்ந்து பேசும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. அதேபோல், முதலமைச்சர் விஜய் தம்பதிகளுடனும், அவர்களின் குடும்பத்துடனும் எடுத்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

அதேநேரத்தில், திருமண வரவேற்பு நிகழ்வில் முதலமைச்சர் விஜய், ரஜினிகாந்த், கலாநிதி மாறன், மு.க.ஸ்டாலின் ஆகியோர் இணைந்து எடுத்த புகைப்படமும் வெளியாகி உள்ளது. விஜய் முதலமைச்சரான பின்னர் ரஜினியுடன் சந்திப்பது இதுதான் முதல்முறையாகும்.

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

ZEENEWS TRENDING STORIES