எல்.கே. சுதீஷ் – பூர்ணஜோதி சுதீஷ் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் யார்?
தேமுதிக பொருளாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான எல்.கே. சுதீஷ் MP – பூர்ணஜோதி சுதீஷ் தம்பதியரின் மூத்த மகளுக்கு திருமணம் நடந்தது. இதில் கலந்து கொண்டவர்கள் யார்..?
தேமுதிக பொருளாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான எல்.கே. சுதீஷ் MP – பூர்ணஜோதி சுதீஷ் தம்பதியரின் மூத்த மகள் ஜானுஶ்ரீ சுதீஷ் மற்றும் அகில் குமார் ஆகியோரின் திருமண வரவேற்பு மற்றும் திருமண நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன.
திரையுலக பிரபலங்கள் பங்கேற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சி:
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் எனப் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்:
நடிகர்கள் ஐசரி கணேஷ், கண்ணன் ரவி, சுரேஷ் கோபி, சரவணன், விக்ரம், ராகவா லாரன்ஸ், கார்த்தி, சாந்தனு, சதீஷ், டி. ராஜேந்தர், பிரபு, நெப்போலியன், ஆர்.கே. சுரேஷ், நிழல்கள் ரவி, தலைவாசல் விஜய், ஆர்.ஜே. பாலாஜி, தம்பி ராமையா, ரமேஷ் திலக், நந்து ஜெகன், கூல் சுரேஷ், ஈரோடு மகேஷ் உள்ளிட்டோர்.
நடிகைகள் ஸ்ரீப்ரியா, தேவயானி, காயத்ரி ரகுராம் உள்ளிட்டோர். இயக்குநர்கள் கே.எஸ். ரவிக்குமார், விக்ரமன், மோகன் ராஜா, சீனு ராமசாமி, அரவிந்தராஜ், மகிழ் திருமேனி உள்ளிட்டோர்.
இசையமைப்பாளர் டி. இமான், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர். தயாரிப்பாளர்கள் ஏ.எல். அழகப்பன், அம்மா கிரியேஷன்ஸ் சிவா, கதிரேசன், சௌந்தர பாண்டியன், ராம் வாசு, 7த் சேனல் நாராயணன், கலைப்புலி எஸ். தாணு, லைகா சுபாஷ் உள்ளிட்டோர்.
மேலும், உதயநிதி, தமிழச்சி தங்கபாண்டியன், சுபாஷ் சந்திரபோஸ், காஜா மொய்தீன், ஜாகுவார் தங்கம், அடிதடி முருகன், சித்ரா லட்சுமணன், சுப்பு பஞ்சு, கலா மாஸ்டர், மணி சேயோன், தமிழ் குமரன், மாலிக் (மலேசியா), சுபீர் (மலேசியா) உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்:
முதல்வர் விஜய், நடிகைகள் அம்பிகா, கௌதமி, சிம்ரன், நடிகர் ராதாரவி மற்றும் நடிகர் விஜயகுமார் குடும்பத்தினர் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். திரையுலகப் பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களின் வருகையால் திருமண விழா கோலாகலமாக நடைபெற்றது.