SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

Explained: தமிழக இடைத்தேர்தல் களம்: தாராபுரம் vs மதுராந்தகம்.. திமுக வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

TN By-Election DMK Candidates: தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை திமுகு அறிவித்துள்ளது. அதன்படி, மதுராந்தகம் தொகுதிக்கு பரந்தாமன், தாராபுரம் தொகுதிக்கு எஸ்.சுகன்யா ஆகியோரை திமுக களமிறக்கி உள்ளது. அவர்கள் யார், இரண்டு தொகுதிகளில் யாருக்கு களம் சாதகமாக இருக்கிறது என்பது குறித்து பார்ப்போம்.

Written By Umabarkavi K
Published: Sep 09, 2026, 13:14 IST | Updated: Sep 09, 2026, 15:36 IST
Image Credit: Image Source: Chatgpt
Join

TN By-Election DMK Candidates: தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து, அனைத்து முக்கியக் கட்சிகளும் தீவிர வேட்டை பணியில் இறங்கியுள்ளன.

இடைத்தேர்தலில் திமுக, அதிமுக, தவெக, நாதக என 4 முனைப்போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை களமிறக்குவதில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், முதற்கட்டமாக திமுக மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

திமுக வேட்பாளர்கள் விவரம்

இடைத்தேர்தலில் திமுக பின்வாங்கும் என்ற வதந்திகளுக்கும், ஊகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் நேரடிப் போட்டி பற்றிய முடிவு எடுக்கப்பட்டது.  இதனை அடுத்து, திமுக தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

மதுராந்தகம் தொகுதி (தனி):

இத்தொகுதியில் திமுகவின் அனுபவமிக்க முகமான முன்னாள் எம்.எல்.ஏ பரந்தாமன் வேட்பாளராகக் களமிறங்குகிறார்.  

தாராபுரம் தொகுதி (தனி):

தாராபுரம் தொகுதியில் திமுக சார்பில் எஸ். சுகன்யா அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.  

 

இடைத்தேர்தல் தேர்தல் அட்டவணை மற்றும் தேதிகள்  

யார் இந்த பரந்தாமன்?

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஐ.பரந்தாமன். இவர் சென்னை அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்தார். சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றிய அனுபவம் அவருக்கு இருக்கிறது. திமுகவின் முக்கிய முகமாக பரந்தாமன் அறியப்படுகிறார். திமுகவின் மூத்த வழக்கறிஞர்களில் ஒருவராகவும் அறியப்படுகிறார். மேலும், திமுகவின் சட்டத்துறை இணைச் செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். இவர் ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமானவராம்.  

பரந்தாமன் போட்டியிட்ட தேர்தல்கள்

பரந்தாமன் கடந்த 2026 சட்டமன்ற தேர்தலில் எழும்பூர் தொகுதியில் போட்டியிட திமுக தலைமையிடம் சீட் கேட்டு இருந்தார். ஆனால், பரந்தாமனுக்கும், சேகர்பாபுவுக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் இருந்ததாக கட்சி வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. இதனால், அவருக்கும் எழும்பூர் தொகுதியில் போட்டியிட  வாய்ப்பு மறுக்கப்பட்டது. 

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் எழும்பூரில் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.  2021 தேர்தலில் 68,832 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுகவின் ஜான் பாண்டியனை 38,000க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். முன்னதாக, 2016 சட்டமன்ற தேர்தலில் பூந்தமல்லி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு, 92,000க்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்று தோல்வி அடைந்தார்.

அதிமுகவில் ஏழுமலை 1.03 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார். இந்த நிலையில், இடைத்தேர்தலில் அவரை களமிறக்க திமுக தலைமை திட்டமிட்டு, அவரை களமிறக்கியுள்ளது. இடைத்தேர்தலில் வெற்றி பெற்று தேர்வானால் சட்டமன்றத்தில் திமுக சார்பில் சிறப்பாக உரையாற்றுவார்  என்ற நம்பிக்கையிலும் அவருக்கு தற்போது திமுக தலைமை வாய்ப்பு வழங்கியுள்ளது.

யார் இந்த சுகன்யா?

தாராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுகன்யா. சுகன்யா வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் திமுக ஒன்றிய அணி செயலாளராக உள்ளார். சொந்த தொகுதியிலேயே சுகன்யா திமுக தலைமை களமிறக்கியுள்ளது. இது மிகவும் சாதகமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.  தாராபுரம் தொகுதியில் மக்கள் அடிப்படை பிரச்னைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து நடவடிக்கை எடுத்து வருவதாக சொல்லப்படுகிறது. 

மேலும், தொகுதி மக்கள் இவரை எளிதாக அணுகக்கூடிய வகையில் எப்போதுமே இருப்பார் என கூறப்படுகிறது. இதுவே இவரது பலமாகவும் கருதப்படுகிறது. பெண்களின் ஆதரவும் இத்தொகுதியில் சுகன்யாகவுக்கு இருப்பதாக கட்சி வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. 

துடிப்பான உள்ளூர் பெண் என்பதால், இவரையே திமுக களமிறக்கியுள்ளது. வெளியூர் நபரை களமிறக்காமல், தாராபுரம் மக்களிடம் எளிமையாக பழக்கக்கூடியவரும், நன்பமதிப்பை பெற்ற சுகன்யாவை திமுக நிறுத்தியிருக்கிறது. தாராபுரம், மதுராந்தகம் இரண்டு தொகுதிகளிலும் திமுக தலைமை வழக்கறிஞர்களை களமிறக்கி இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

தாராபுரம் தொகுதி நிலவரம்

தாராபுரம் சட்டமன்ற தொகுதி 101வது தொகுதியாகும். தனித்தொகுதியாகவும் உள்ளது. தாராபுரம் தொகுதி 1967ஆம் ஆண்டுக்கு முதல் முறையாக இடைத்தேர்தலை சந்திக்கிறது. தாராபுரம் தொகுதியில் கவுண்டர் சமூகம் பெரும்பான்யைமாக உள்ளது. மேலும், பட்டியல், முதலியார், செட்டியார் ஆகியோர் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர்.  

கடந்த 1951ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தாராபுரம் தொகுதியில், 17 முறை தேர்தல் நடந்துள்ளது. இதில் 6 முறையும் திமுகவும், அதிமுக 6 முறையும் கைப்பற்றி இருக்கிறது. காங்கிரஸ் 4 முறையும், பாமக ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளது. தாராபுரம் தொகுதி எந்த ஒரு கட்சிக்கும் நிரந்தர கோட்டையாக இருந்தது கிடையாது. காலத்திற்கு ஏற்பட அரசியல் மாற்றங்களை இத்தொகுதி  பிரதிபலித்து வருகிறது.

வேட்பாளர்களின் தனிப்பட்ட செல்வாக்கு, கூட்டணி கணக்குள் உள்ளிட்டவை இங்கு வெற்றியை தீர்மானிக்கும் காரணிகளாக அமைந்துள்ளன. கொங்கு மண்டலம் முழுவதும் அதிமுகவின் கோட்டையாக இருக்கும் நிலையில், தாராபுரம் தொகுதியில் மற்ற கட்சிகளை விட, அதிமுக வலுவாக இருப்பதாக பார்க்கப்படுகிறது.  இதனால், இந்த இடைத்தேர்தலில் இங்கு கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2026 தேர்தல் விவரம்

கட்சிவேட்பாளர்கள்வாக்குகள்
தவெககௌரி சித்ரா46,438
திமுகஇந்திராணி64,373
அதிமுகசத்தியபாமா (வெற்றி)81,100

தாராபுரம் தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுகவின் சத்யபாமா, தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்தார். இவரது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஏற்றுக் கொண்டதை அடுத்து, இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கிறது.

தாராபுரம் வாக்காளர்கள் விவரம்

மொத்த வாக்காளர்கள் - 2,22,000 பேர்

ஆண் வாக்காளர்கள் - 1,06,000 பேர்

பெண் வாக்காளர்கள் - 1,14,000 பேர்

மூன்றாம் பாலினத்தவர்கள் - ஒன்றை இலக்கில் உள்ளனர்

மதுராந்தகம் தொகுதி நிலவரம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ளது மதுராந்தகம். இது தனித்தொகுதியாக உள்ளது. விவசாயமே மதுராந்தகத்தின் முக்கிய தொழிலாக உள்ளது. மதுராந்தகம் தொகுதி அதிமுகவின் கோட்டையாக உள்ளது. இத்தொகுதியில் இதுவரை அதிமுக 7 முறையும், திமுக 5 முறையும், காங்கிரஸ் ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளது.  

1971ஆம் ஆண்டு 13 முறை இத்தொகுதியில் சட்டமன்ற தேர்தல் நடந்துள்ளது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் கனிதா சம்பத் 79,256 தொகுதியில் வெற்றி பெற்றார். அப்போது, காங்கிரஸ் வேட்பாளர் கே.ஜெயக்குமாரை தோற்கடித்தார். 2016  சட்டமன்ற தேர்தலில் புகழேந்தி 73,693 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 

2021 தேர்தலில் அதிமுகவில் மரகதம் குமரவேல் திமுக கூட்டணியில் போட்டியிட்ட மதிமுக வேட்பாளர் மல்லை சத்யாவை 3,600 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.  2026 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் மரகதம் குமரவேல் போட்டியிட்டு வெற்றி பெற்று அதிமுகவின் கோட்டை என பதிவு செய்தார்.

மதுராந்தகம் வாக்காளர்கள் விவரம்

மொத்த வாக்காளர்கள் - 2,11,295

ஆண் வாக்காளர்கள் -  1,03,943

பெண் வாக்காளர்கள் - 1,07,388

மூன்றாம் பாலினத்தவர்கள் - 64

2026 தேர்தல் நிலவரம்

கட்சிவேட்பாளர்கள்வாக்குகள்
தவெகஎழில் கேதரின் எழில்மலை
 
62,090
திமுகஎஸ். அமுலு பொன்மலர்
 
59,838
அதிமுகமரகம் குமரவேல் (வெற்றி)69,284

2026 தேர்தல் நிலவரம்இரண்டாவது முறையாக மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேல் வெற்றி பெற்ற நிலையில், தனது எம்எல்ஏ பதவியை அவர் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தார். இந்த நிலையில், இடைத்தேர்தலில் தவெக சார்பில் மீண்டும் மரகம் குமரவேல் களமிறங்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

ZEENEWS TRENDING STORIES