• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /அமைச்சருக்கு மட்டும் தனிச்சட்டமா? முதுமலையில் புலியை துரத்தி ரீல்ஸ்.. வன்னி அரசு செயலால் வெடித்த சர்ச்சை

அமைச்சருக்கு மட்டும் தனிச்சட்டமா? முதுமலையில் புலியை துரத்தி ரீல்ஸ்.. வன்னி அரசு செயலால் வெடித்த சர்ச்சை

Vanni Arasu Viral Video: முதுமலை புலிகள் காப்பகத்தில் அமைச்சர் வன்னி அரசு உயர் அதிகாரிகளின் முன்னிலையில் புலியை விரட்டியபடி ஓடும் வீடியோவால் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. முதுமலை வனப்பகுதிக்குள் புலியை விரட்டிய வன்னி அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

Written ByUmabarkavi K
Published: Nov 16, 2026, 10:37 IST|Updated: Nov 16, 2026, 11:05 IST
joinshare
அமைச்சருக்கு மட்டும் தனிச்சட்டமா? முதுமலையில் புலியை துரத்தி ரீல்ஸ்.. வன்னி அரசு செயலால் வெடித்த சர்ச்சை

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
எல்.கே. சுதீஷ் – பூர்ணஜோதி சுதீஷ் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் யார்?

எல்.கே. சுதீஷ் – பூர்ணஜோதி சுதீஷ் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் யார்?

2

Explained : குழந்தைகளிடம் வாசிப்பு ஆர்வம் குறைவு..எதிர்காலத்தை பாதிக்கும்! எச்சரிக்கை

3

இதுவும் பாலியல் துன்புறுத்தலே... கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம் - பொதுவெளியில் பெண் நீதிபதி பகீர்

4

Gold Price: அதிரடியாக குறையும் தங்கம் விலை.. மோடி மேஜிக் தான் காரணமா?

5

“குழந்தை பெத்துக்காேங்க..” இஸ்லாமியர்கள் அதிகரிப்பால் ட்ரம்ப் ஆதரவாளர் கொடுத்த ஐடியா..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Vanni Arasu Viral Video: சமூகநீதித்துறை அமைச்சராக இருப்பவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் (விசிக) வன்னி அரசு. இவர் குறித்து கடந்த இரு தினங்களாக சமூக வலைதளங்களில் விவாதங்கள் வெடித்துள்ளது. இவர் முதுமலை வனப்பகுதிக்குள் புலியை விரட்டியதோடு, வனத்துறை வாகனத்தின் மீது அமர்ந்து வீடியோ எடுத்தது தொடர்பாக பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.

முதுமலையில் புலியை விரட்டிய அமைச்சர் வன்னி அரசு

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் 688 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு வகையான விலங்குகளும், ஈட்டி, தேக்கு உள்ளிட்ட பல்வேறு விலை உயர்ந்த மரங்களும் உள்ன. பாதுகாக்கப்பட்ட வனங்கள் என்பதால், பொதுமக்கள் உள்ளே நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.  

இதனிடையே சமீபத்தில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னனி அரசு நீலகிரி மாவட்டத்திற்கு வந்து கூடலூர் பகுதியில் கடந்த 10,11  ஆகிய 2 நாட்கள் அங்கு முகாமிட்டு முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மசினக்குடி பகுதியில் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிலையில், அமைச்சர் வன்னி அரசுவின் சமூக வலைதள பக்கத்தில் முதுமலை புலிகள் காப்பகம் பகுதியில் டிரெக்கிங் செய்தது போன்று வீடியோ ஒன்றை வெளியிட்ள்ளார்.

மேலும் படிக்க: ஜெம் வீரமணி வழக்கு.. சிறுமிகளை அழைத்துச் சென்ற ஓட்டுநர் பெருமாள் கைது!

அந்த வீடியோவில், அமைச்சர் வன்னி அரசு மற்றும் அவரது குடும்பத்தினர் மசினகுடி வனத்திற்குள் சவாரி வாகனத்தில் சென்றது போன்றும், புல்வெளிகளில் நடப்பது ஓடுவது போன்று  பல வீடியோக்கள் உள்ளன. இவர்களுடன் மசினகுடி கோட்ட துணை இயக்குநர் வித்யாதர், வனச்சரகர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர்.  மேலும், அமைச்சர் வன்னி அரசு காட்டு யானைக்கு அருகே செல்வது போன்றும் இருக்கிறது. இது பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் நடந்ததாக தெரிகிறது.  

அதோடு, சுமார் 100 அடி தூரத்தில் புதர் மறைவில் புலி ஒன்று ஓய்வெடுத்து கொண்டு இருந்தது. இதனை பார்த்த அமைச்சர் வன்னி அரசு மற்றும் அதிகாரிகள் அதனை பின்தொடர்ந்து ஓடுவது போன்ற காட்சிகளும் வெளியாகின. மனித நடமாட்டத்தை பார்த்து புலியும் ஓடியது. யானைக்கு அருகில் வன்னி அரசு சென்றது, புலியை துரத்திக் கொண்டு ஓடிய காட்சிகள் பெரும் சர்ச்சையை வெடித்துள்ளது.

 

 

 

 

View this post on Instagram

 

 

 

 

 

 

 

 

 

 

 

A post shared by வன்னி அரசு | VanniKural (@vannikural)

வன்னி அரசு மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

வனவிலங்குகளுக்கு இடையூறு விளைவித்ததற்காக, 1972-ஆம் ஆண்டு வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அமைச்சர் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு வனத்துறையை வனப் பாதுகாவலர்கள் வலியுறுத்தியுள்ளனர். வனப்பாதுகாப்புச் சட்டம் 1972-ன் படி  சுற்றுலாப் பயணிகள் வனவிலங்குகளை நெருங்கவோ அல்லது சஃபாரி வாகனங்களிலிருந்து இறங்கவோ கூடாது என்று தமிழக வனத்துறையில் விதிகள் தெளிவாக உள்ளன.

இந்த விதிகளை மீறும் சுற்றுலாப் பயணிகள் கடுமையான தண்டனைகளையும் எதிர்கொள்கின்றனர். எனவே, ஒரு அமைச்சர் விதிகளை மீற அனுமதிப்பது ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகிறது  என்றும் வனப் பாதுகாப்பு ஆர்வலர்கள் கூறுகின்றனர்.  இது தொடர்பாக வன்னி அரசு உடன் சென்றிருந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "அமைச்சர் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் நுழையவில்லை. அவர் தங்கியிருந்த அச்சக்கரை ரிசார்ட்டுக்குச் சொந்தமான இடத்தில் புலி காணப்பட்டது.

மேலும் படிக்க: உருவாகும் அக்வான் புயல்.. நாளை இரவு முதல் தீவிரமாகும் மழை.. வெதர்மேன் அலர்ட்

அமைச்சருக்கு மட்டும் தனிச்சட்டமா?

அமைச்சரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மட்டுமே வனத்துறை ஊழியர்கள் அவருடன் சென்றதாகவும், காணொளி படமாக்கப்பட்டபோது அமைச்சர் எந்த சஃபாரி வாகனத்திலிருந்தும் இறங்கவில்லை  என்றும் விளக்கம் அளித்தனர். ஆனால் இந்த விளக்கத்தை யாரும் ஏற்கவில்லை. வன்னி அரசு மற்றும்  வனவிலங்குகளை நெருங்குவதைத் தடுக்கத் தவறிய வனத்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

மேலும், சாலையில் செல்லும் ஒருவர் ஒரு யானையை துரத்தினால் அவர் மீது வழக்கு பதிவு செய்கிற வனத்துறை, யானைக்கு தொந்தரவு செய்தார் என்று உடனடியாக கைது செய்கிற வனத்துறை, யானைகளையும் புலிகளையும் அவர்களின் வாழ்விடத்திற்கே சென்று விரட்டும், அவர்களுக்கு அச்சுறுத்தல் செய்யும் அமைச்சர் வன்னியரசு மீது வழக்குபதிவு செய்யுமா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.  தமிழ்நாட்டின் வனத்துறை அமைச்சரே அங்கே செல்லாதபோது சமூக நீதித்துறை அமைச்சருக்கு அங்கே என்ன வேலை?  என்றும் அமைச்சருக்கு மட்டும் தமிழ்நாட்டில் தனிச்சட்டம் உள்ளதா எனவும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்புகின்றனர். 

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu