SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

“அப்பாவை காணோம்” என கலாய்த்த தவெக-இப்போ டெல்லியே தேடி வருது! MKS மாஸ் கம்பேக்..

சில மாதங்களுக்கு முன்பு சட்டசபையில், முதல்வர் சி.ஜோசப் விஜய், “அப்பா எங்கப்பா காணோம்..?” என்று திமுக தலைவர் ஸ்டாலினை கலாய்த்தார். இதற்கு, தற்போது திமுக தரப்பில் இருந்து பலரும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Written By Yuvashree M
Published: Nov 29, 2026, 14:50 IST | Updated: Nov 29, 2026, 15:41 IST
Image Credit: MK Stalin | X Page
Join

தமிழ்நாட்டின் அரசியல், தவெக ஆட்சிக்கு வந்ததில் இருந்து பரபரப்பாகி இருக்கிறது. நாளொரு மேனி, பொழுதொரு வண்ணமுமாய், ஒவ்வொருவராக தவெகவை சேர்ந்த எம்.எல்.ஏக்களும் அமைச்சர்களும் சர்ச்சையில் சிக்கி வர, அதை சந்தர்ப்பமாக பயன்படுத்தி, திமுகவும் தங்களுக்கு சாதகமாக சில விஷயங்களை திருப்பி வருகிறது. மத்திய அரசு தொகுதி மறுவரையறை குறித்து அறிவித்த போது, அதற்கு முதல் ஆளாக எதிர்ப்பு தெரிவித்த திமுக, ஆட்சி மாற்றத்திற்கு பிறகு, அதற்கு ஆதரவினை தெரிவித்திருப்பது பலருக்கும் பெரும் ஆச்சரியத்தையும் கலக்கத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

“அப்பா எங்கே..?” என்று கலாய்த்த முதல்வர் விஜய்!

கடந்த ஜூன் மாதத்தின் போது சட்டசபை கூடியது. அதில், தன் பாணியில் குட்டிக்கதை சொன்ன முதல்வர் விஜய், “உங்க அப்பா இங்கதான் இருப்பாருன்னு சொன்னாங்க..எங்க கானோம்..?” என்று கலாயத்தார். கொளத்தூர் தொகுதியில், பல ஆண்டுகளாக போட்டியிட்டு வெற்றி பெற்று வந்த மு.க.ஸ்டாலின், 2026 தேர்தலில் தோற்றதையும், அதனால் அவரால் சட்டசபைக்கு வர முடியாததையும் கலாய்க்கும் வண்ணம் இருந்தது, இந்த கண்டெண்ட்.

இதற்கு அப்போதே திமுக தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன. தற்போது, அதற்கு தக்க சமயத்தில், சரியான பதிலடியை திமுக தரப்பில் இருந்து பலரும் கொடுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க | ”எட்டப்பன்கள் இல்லை-கட்டபொம்மன்கள்” ராகுலுக்கு ஸ்டாலின் கொடுத்த தக் ரிப்ளை! அர்த்தம் இதுதான்..?

தொகுதி மறுவரையறை-திமுக ஆதரவு..

நாடாளுமன்ற கூட்டத்தொடரில், நவம்பர் 30ஆம் தேதி, அதாவது நாளை தொகுதி மறுவரையரை மீண்டும் தொடங்க இருக்கிறது. இதற்கு திமுக ஆதரவு தெரிவித்தது பலருக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சமீபத்தில் சென்னையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பிக்கள் கூட்டம் நடைப்பெற்ற நிலையில், தங்களின் கோரிக்கைகள் ஏற்கப்படாததால், தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு ஆதரவளிப்பதாக திமுக அறிவித்திருந்தது.

சென்னையில் காங்கிரஸ் முக்கிய தலைவரகள்!

திமுகவின் இந்த நிலைபாட்டிற்கு தமிழ்நாட்டின் பல்வேறு தரப்புகளில் இருந்து கண்டன குரல்கள் எழுந்து வந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அனைவரும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் கலந்துரையாடுவதற்காக சென்னை வருகின்றனர். அந்த சந்திப்பில், அவர்கள், ஸ்டாலினிடம் தொகுதி மறுவரையரையை மறுபரிசீலனை செய்யுமாறு கோரிக்கை வைப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சந்திப்பில், காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கே, சோனியா காந்தி, இண்டியா கூட்டணியின் முக்கிய தலைவர்களான மம்தா பானர்ஜி, அபிஷேக் பானர்ஜி, சுதாகர் சிங், பிரனவ் ஜா உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனர். இந்த சந்திப்பு குறித்து தற்போது இந்தியாவே பரபரப்பாக பேசி வரும் நிலையில், திமுக தங்கள் முடிவில் இருந்து பின் வாங்கப்போகிறதா? அல்லது தொகுதி மறுவரையரைக்கு முழு ஆதரவு தெரிவிக்கப்போகிறதா? என்பது குறித்த தகவல்கள் சந்திப்பிற்கு பிறகு தெரிய வரும்.

“அப்பா எங்கே..?” என கேட்டவர்களுக்கு பதிலடி..

திமுகவின் முக்கிய பொருப்பாளராக இருக்கும் திவ்யா சத்யராஜ், சமீபத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்க, 2 தனி விமானஙக்ள் மூலம் 15க்கும் மேற்பட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் சென்னை வருவதாக வெளியாகியுள்ள செய்தி கார்டை பகிர்ந்துள்ள அவர், “அப்பாவை காணோம் என்ற அறிவிலிகளே, அப்பாவின் பவர் இப்போது புரிந்ததா..?” என்று கேட்டு ஃபயர் விட்டிருக்கிறார்.

இண்டியா கூட்டணியில், திமுகவின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதாலும், இந்த தொகுதி மறுவரையால் அக்கூட்டணி தலைவர்களுக்கும் பிரச்சனை வரும் என்பதால், அவர்கள் டெல்லி வருகின்றனர். இதனால், இது மு.க.ஸ்டாலினின் மாஸை யாராலும் கெடுக்க முடியாது என்று திமுக ஐடி விங்கை சேர்ந்த பலரும் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க | டிசம்பர் முதல் வெளுக்கப்போகும் கனமழை.. தென்மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.. வானிலை அப்டேட்

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

ZEENEWS TRENDING STORIES