• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /இனி ஆவண எழுத்தர் தேவையில்லை! 4 எளிய படிகளில் பத்திரத்தை நீங்களே தயார் செய்யலாம்

இனி ஆவண எழுத்தர் தேவையில்லை! 4 எளிய படிகளில் பத்திரத்தை நீங்களே தயார் செய்யலாம்

ஆவண எழுத்தர் இல்லாமல், பொதுமக்களே பத்திரத்தை பத்திரத்தை தயார் செய்வது எப்படி என்ற வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Written ByKarthikeyan Sekar
Published: Nov 11, 2026, 06:00 PM IST|Updated: Nov 11, 2026, 06:06 PM IST
joinshare
இனி ஆவண எழுத்தர் தேவையில்லை! 4 எளிய படிகளில் பத்திரத்தை நீங்களே தயார் செய்யலாம்
Image Credit: Tamil Nadu property registration

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
ரூ.600 கோடி மதிப்பிலான பங்குகள்... திரும்பப் பெற Zee Entertainment நிறுவனம் முடிவு

ரூ.600 கோடி மதிப்பிலான பங்குகள்... திரும்பப் பெற Zee Entertainment நிறுவனம் முடிவு

2

Explained : தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் வரப்போகுதா? மழை பொய்த்தால் இதுதான் நிலை..

3

CM விஜய்யின் சிறப்பு வட்டி தள்ளுபடி... வீடு, மனை ஒதுக்கீடுதாரர்களுக்கு ஜாக்பாட்

4

செஞ்சியில் மீண்டும் அதிர்ச்சி! 7 வயது சிறுமியை கடத்த முயற்சி.. தப்பித்தது எப்படி? இருவர் கைது

5

என்விடியா CEO விவகாரத்தில் கிளம்பும் பூதம்: இரண்டாவது கள்ள உறவு, மகன்-மகளின் சம்பளம்... பறிபோகும் பதவி?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

தமிழகத்தில் சொத்து வாங்குவது மற்றும் விற்பனை செய்வதற்கான பத்திரப்பதிவு நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தவும், பொதுமக்களின் அலைச்சலையும் பண விரயத்தையும் குறைக்கவும் வணிகவரி மற்றும் பதிவுத்துறை மிக முக்கியமான டிஜிட்டல் புரட்சியை முன்னெடுத்துள்ளது. இடைத்தரகர்கள் மற்றும் ஆவண எழுத்தர்களை நம்பியிருக்காமல், பொதுமக்கள் தங்கள் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலம் பத்திரங்களை உருவாக்கக்கூடிய ‘காகிதமில்லா பதிவு முறை’ STAR 3.0 மென்பொருள் வழியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  

மேலும் படிக்க | தமிழ்நாடு ஜிஎஸ்டி சட்டத் திருத்தம்: நவம்பர் 1 முதல் அமலுக்கு வந்த புதிய விதிகள் - யாருக்கு என்ன பலன்?

இடைத்தரகர்கள் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி

நிலம், வீடு அல்லது வணிகச் சொத்துகளைப் பதிவு செய்யும்போது வரைவு பத்திரம் தயாரிப்பதற்காக ஆவண எழுத்தர்களிடமும் தரகர்களிடமும் பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் கட்டணம் செலுத்தும் நிலை இருந்து வந்தது. இதனை முழுமையாக மாற்றி அமைக்கும் வகையில், பதிவுத்துறையின் அதிகாரப்பூர்வ தளமான TNREGINET வழியாகப் பொதுமக்களே எளிய நான்கு படிநிலைகளில் தானியங்கி முறையில் ஆவணங்களைத் தயாரிக்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.  

பத்திரத்தை நீங்களே ஆன்லைனில் உருவாக்கும் 7 எளிய படிநிலைகள்
தமிழக பதிவுத்துறை வெளியிட்டுள்ள கையேட்டின்படி பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:

1. இணையதள நுழைவு மற்றும் ஆவண வகை தேர்வு

முதலில் TNREGINET அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குள் (tnreginet.gov.in) சென்று உங்கள் பயனாளர் கணக்கு மூலம் உள்நுழைய (Login) வேண்டும். முகப்புப் பக்கத்தில் உள்ள ‘ஆவணப்பதிவு’ என்ற பிரிவில் நுழைந்து, “இங்கே சொடுக்கவும்” என்பதைத் தேர்வு செய்ய வேண்டும். தொடர்ந்து நீங்கள் உருவாக்க விரும்பும் ஆவணத்தின் வகையைத் (விற்பனை பத்திரம், செட்டில்மெண்ட், பாகப்பிரிவினை உள்ளிட்டவை) தேர்ந்தெடுக்க வேண்டும்.  

2. சொத்து மற்றும் நபர்களின் விவரங்கள் உள்ளீடு

சொத்து வாங்குபவர், விற்பனையாளர், சாட்சிகள் ஆகியோரின் அடிப்படை விவரங்கள் மற்றும் சொத்து தொடர்பான அனைத்து தகவல்களையும் உரிய கட்டங்களில் உள்ளீடு செய்து சமர்ப்பிக்க வேண்டும். இந்த விவரங்கள் சமர்ப்பிக்கப்பட்டவுடன் கணினியிலேயே ஒரு தற்காலிக ஆவண எண் அல்லது டி.பி. எண் (TPIN) உருவாக்கப்பட்டு வழங்கப்படும்.  

3. வரைவு ஆவண சரிபார்ப்பு மற்றும் பதிவிறக்கம்

நீங்கள் உள்ளிட்ட தகவல்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட வரைவு பத்திரத்தை ‘எனது ஆவணங்கள்’ பகுதிக்குச் சென்று PDF வடிவத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம். தேவைப்பட்டால் அதனை கணினியில் பதிவிறக்கம் செய்து வாசித்துத் திருத்தங்கள் ஏதேனும் இருப்பின் சரிசெய்ய இயலும்.  

4. பாதுகாப்பான ஆன்லைன் கட்டணம் செலுத்துதல்

ஆவண விவரங்கள் அனைத்தும் சரியாக இருக்கும்பட்சத்தில், இணையதளத்தில் உள்ள ‘செலுத்துக’ என்ற தெரிவை அழுத்தி, முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணங்களை நெட் பேங்கிங், யுபிஐ அல்லது டெபிட் கார்டு வழியாக நேரடியாக அரசுக்குச் செலுத்த வேண்டும்.  

5. காகிதமில்லா ஆவணப் பதிவு முறை தேர்வு

கட்டணம் செலுத்திய பின்னர், பதிவுசெய்தல் -> ஆவணப்பதிவு -> காகிதமில்லா ஆவணப் பதிவிற்கான வரைவு ஆவணச்சுருக்கம் என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அங்கு உங்களுக்குக் கிடைத்த டி.பி. எண்ணை (TPIN) உள்ளிட்டவுடன் தகவல்கள் திரையில் தோன்றும்.  

6. e-Sign மற்றும் டோக்கன் முன்பதிவு

பதிவு செய்யப்பட்ட ஆவணத்திற்கான ஒப்புதலை ஆவணதாரர்கள் ஆன்லைன் வழி ஓடிபி (OTP) மூலம் மின்னணு கையொப்பம் (e-Sign) இட்டு உறுதி செய்ய வேண்டும். தொடர்ந்து தங்களுக்கு வசதியான நாள் மற்றும் நேரத்தைத் தேர்வு செய்து முன்பதிவு வில்லைக்கான (Token) சீட்டை எடுத்துக்கொள்ளலாம்.

7. சார்பதிவாளர் அலுவலக சரிபார்ப்பு மற்றும் இறுதிப் பதிவு

முன்பதிவு செய்த நாளில் சார்பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்று பயோமெட்ரிக் அங்கீகாரம் (கைரேகை அல்லது கருவிழி சோதனை) மூலம் அடையாளத்தைச் சரிபார்க்க வேண்டும். இந்திய முத்திரைச் சட்டம் மற்றும் பதிவுச் சட்ட விதிமுறைகளின்படி சார்பதிவாளர் சரிபார்த்துத் தனது இ-சைன் மூலம் பதிவை நிறைவு செய்வார். பதிவு முடிந்ததும் அசல் பத்திரம் உங்கள் பயனர் கணக்கிற்கே (Login) PDF வடிவில் நேரடியாக அனுப்பி வைக்கப்படும்.

பொதுமக்களுக்கு பதிவுத்துறை விடுக்கும் வேண்டுகோள்

பொதுமக்கள் வீண் செலவுகளையும் அலைச்சல்களையும் தவிர்க்கும் வகையில் இச்சேவை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, எவ்வித இடைத்தரகர்களையும் நாடாமல் இணையவழியில் சுயமாக ஆவணங்களை உருவாக்கி, பதிவுத் துறையின் காகிதமில்லா சேவைகளைப் பயன்படுத்திப் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu