• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது.. கனமழை வெளுக்கும்.. வெதர்மேன் வானிலை அப்டேட்!

வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது.. கனமழை வெளுக்கும்.. வெதர்மேன் வானிலை அப்டேட்!

Northeast Monsoon: வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15ஆம் தேதி வாக்கில் தொடங்கக்கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். தமிழகத்தை நோக்கி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நகர்வது வடகிழக்கு பருவமழைக்கு சாதமாக அமையும் என குறிப்பிட்டு இருக்கிறார்.

Written ByUmabarkavi K
Published: Oct 12, 2026, 08:37 AM IST|Updated: Oct 12, 2026, 08:49 AM IST
joinshare
வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது.. கனமழை வெளுக்கும்.. வெதர்மேன் வானிலை அப்டேட்!

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
Cordelia Cruise : நடுக்கடலில் நகரும் தீவு! கார்டெலியா சொகுசு கப்பல் பிரம்மாண்ட சிறப்பம்சங்கள்

Cordelia Cruise : நடுக்கடலில் நகரும் தீவு! கார்டெலியா சொகுசு கப்பல் பிரம்மாண்ட சிறப்பம்சங்கள்

2

பிஎம் யஷஸ்வி கல்வி உதவித்தொகை - நவம்பர் 11 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்

3

வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது.. கனமழை வெளுக்கும்.. வெதர்மேன் வானிலை அப்டேட்!

4

திருச்சி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு! சீர்மரபினர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

5

தமிழ்நாடு அரசின் காசநோய் விழிப்புணர்வு பேரணி - பொதுமக்களுக்கான முக்கிய தகவல்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Northeast Monsoon: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது. செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் பரவலாக தமிழகத்தில் பெய்ய வேண்டிய காலம். ஆனால், எல் நினோ எதிரொலியால் தமிழகத்தில் கடந்த சில நாட்களே மழை பெய்யாமல், நீர்நிலைகள் வறண்டு காணப்படுகிறது. பல்வேறு அணைகளிலும் நீர்மட்டம் குறைவாகவே இருக்கிறது. இந்த நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்  வானிலை தொடர்பாக முக்கியமான கருத்தை பதிவிட்டு இருக்கிறார்.

வடகிழக்கு பருவமழை

இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியிருப்பதாவது, "வடகிழக்கு பருவமழை வரும் அக்டோபர் 15ஆம் தேதி ஓட்டி ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு முன்னதாக அல்லது தாமதமாக துவங்க வாய்ப்புள்ளது.  சென்னையில் செப்டம்பர் 21ஆம் தேதிக்கு பிறகு மழை எதுவும் பெய்யவில்லை. 

சென்னை மட்டுமின்றி, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு நல்ல மழை தேவைப்படுகிறது.  தமிழகத்தை நெருங்கி நரும் என எதிர்பார்க்கப்படும் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வளிமண்ட மேலடுக்கு சுழற்சியால் புயல் அபாயம் எதுமில்லை" என குறிப்பிட்டு இருக்கிறார்.

 

At last, some good news! - Just 4 more days to go --------------------- The Northeast Monsoon is likely to set in around October 15 (+/- 1 or 2 days). Chennai has been practically rainless since September 21, and Chennai, along with several other parts of Tamil Nadu, desperately needs some good rains. A circulation (UAC) is expected to move close to Tamil Nadu and help in the onset of the Northeast Monsoon. Let’s welcome our monsoon, the savior we have all been waiting for with open hearts. Note: There is no cyclone threat associated with this circulation.

— Tamil Nadu Weatherman (@praddy06) October 11, 2026

மேலும் படிக்க: தமிழ்நாடு அரசின் காசநோய் விழிப்புணர்வு பேரணி - பொதுமக்களுக்கான முக்கிய தகவல்

டெல்டா வெதர்மேன் சொன்ன தகவல்

டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, "அடுத்த 72 மணி நேரத்திற்குள் (அக்டோபர் 15, 2026), தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளா உள்ளிட்ட தென்னிந்திய தீபகற்பப் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் தெற்கு-மத்திய வங்கக் கடலில் ஒரு குறைந்த காற்றழுத்தப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. அதனைத் தொடர்ந்து வரும் 48 மணி நேரத்தில், இது இலங்கை கடற்கரையை நோக்கி நகர அதிக வாய்ப்புள்ளது.

டெல்டா மற்றும் தெற்கு கடலோரத் தமிழகப் பகுதிகளில் கிழக்கு திசைக் காற்று வீசத் தொடங்கியுள்ளது. அக்டோபர் 14-ஆம் தேதி முதல் டெல்டா பகுதிகளில் படிப்படியாக மழைப்பொழிவு தொடங்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் 14-ஆம் தேதியின் பிற்பகுதியில், வட கடலோரத் தமிழகம்  சென்னை உட்பட தெற்கு கடலோரத் தமிழகப் பகுதிகளுக்கும் மழை பரவ அதிக வாய்ப்புள்ளது.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15-ஆம் தேதி (வியாழக்கிழமை) வாக்கில் தொடங்க அதிக வாய்ப்புள்ளது. எனவே, நீடித்த வெப்பம், கோடைக்காலச் சூழல் மற்றும் இயல்புக்குக் குறைவான மழைப்பொழிவு நிலை ஆகியவை 2026-ஆம் ஆண்டு அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் தமிழ்நாட்டிலிருந்து படிப்படியாக விலகிவிடும்" என தெரிவித்துள்ளார்.

இன்று மழை பெய்யுமா?

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, அக்டோபர் 12ஆம் தேதியான இன்று நீலகிரி, கோவை, ஈரோடு, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, மதுரை, சிவகங்கை, சேலம், திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசமான மழை பெய்யக் கூடும் என தெரவிக்கப்பட்டுள்ளது.  

நாளை (அக்டோபர் 13) தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்  மிதமான மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 14ஆம் தேதி ராமநாதபுரம், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை ஓரிரு இடங்களில்  மிதமான மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: முருங்கை ஏற்றுமதி தொழில் ரகசியம் - தமிழ்நாடு அரசு கொடுத்த முக்கிய அப்டேட்
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Weather