• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /தமிழ்நாடு அரசின் காசநோய் விழிப்புணர்வு பேரணி - பொதுமக்களுக்கான முக்கிய தகவல்

தமிழ்நாடு அரசின் காசநோய் விழிப்புணர்வு பேரணி - பொதுமக்களுக்கான முக்கிய தகவல்

2030-க்குள் காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்குவதற்கான விழிப்புணர்வு நடைபெற்று வரும் நிலையில், இது குறித்த பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய அப்டேட்.

Written ByKarthikeyan Sekar
Published: Oct 12, 2026, 06:42 AM IST|Updated: Oct 12, 2026, 06:48 AM IST
joinshare
தமிழ்நாடு அரசின் காசநோய் விழிப்புணர்வு பேரணி - பொதுமக்களுக்கான முக்கிய தகவல்
Image Credit: Tamil Nadu TB Awareness Campaign

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
திருச்சி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு! சீர்மரபினர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

திருச்சி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு! சீர்மரபினர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

2

தமிழ்நாடு அரசின் காசநோய் விழிப்புணர்வு பேரணி - பொதுமக்களுக்கான முக்கிய தகவல்

3

முருங்கை ஏற்றுமதி தொழில் ரகசியம் - தமிழ்நாடு அரசு கொடுத்த முக்கிய அப்டேட்

4

ஷாய் ஹோப்பை கொத்தித் தூக்க காத்திருக்கும் 4 அணிகள்... ஐபிஎல் ஏலம் கணக்கு - Explained

5

ராணுவ பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்க விருப்பமா? அரசின் முக்கிய அறிவிப்பு

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 'காசநோய் இல்லா இந்தியா' இயக்கத்தின் துவக்க விழா மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் காசநோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றுக்கொண்ட ஆட்சியர், 2025-ஆம் ஆண்டில் காசநோய் இல்லாத நிலையை எட்டிய 24 ஊராட்சிகளுக்கும், விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற தன்னார்வ மாணவர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.  

மேலும் படிக்க | முருங்கை ஏற்றுமதி தொழில் ரகசியம் - தமிழ்நாடு அரசு கொடுத்த முக்கிய அப்டேட்

இவ்விழாவில் பேசிய ஆட்சியர், காசநோய் ஒழிப்பில் இளைஞர்களின் பங்களிப்பை தீவிரப்படுத்தும் நோக்கில் 'ஜோஷ்' (JOSH - Joint Squad for Health) அணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இந்த அணிகள் மூலம் ‘மை பாரத்’ (My Bharat) தன்னார்வலர்கள் மற்றும் தேசிய மாணவர் படையினர் (NCC) கண்காணிப்பு அலுவலரின் மேற்பார்வையில் வீடு தோறும் கணக்கெடுப்பு மற்றும் மதிப்பீடு பணிகளை மேற்கொள்வார்கள். இதன்மூலம் காசநோய் அறிகுறிகள் உள்ளவர்களை முன்கூட்டியே கண்டறிந்து, தாமதமின்றி அரசு மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளைப் பெற வழிவகை

இந்தியாவில் மறைமுக காசநோய் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ள சூழலில், 2030-ஆம் ஆண்டுக்குள் காசநோயை முற்றிலும் ஒழிக்க அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் குறிப்பிட்ட ஆட்சியர், தற்போது விருதுநகர் மாவட்டத்தில் 1,450 பயனாளிகள் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவித்தார். மாவட்டத்தில் உள்ள 11 காசநோய் அலகுகளிலும், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 'சிபிநாட்' (CBNAAT) சளி பரிசோதனை முற்றிலும் இலவசமாக வழங்கப்படுவதோடு, நடமாடும் எக்ஸ்ரே வாகனம் மூலம் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று இலவசப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.  

இரண்டு வாரங்களுக்கு மேலாகத் தொடரும் இருமல், மாலை நேரக் காய்ச்சல், திடீர் உடல் எடை குறைதல், பசியின்மை, சளியில் இரத்தம் வருதல் மற்றும் இரவு நேரங்களில் அதிகப்படியான வியர்வை போன்றவை காசநோயின் முதன்மை அறிகுறிகளாகும். இவ்வகை அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனையை அணுகி பரிசோதனை செய்து கொள்வது அவசியமாகும். அரசு மருத்துவமனைகளில் காசநோய்க்கான நவீன சளி பரிசோதனைகள், எக்ஸ்ரே மற்றும் 'டாட்ஸ்' (DOTS) முறையிலான தரமான மருந்துகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றன; உரிய காலத்திற்குத் தவறாமல் மருந்து உட்கொண்டால் காசநோயை முழுமையாகக் குணப்படுத்த முடியும்.

2030-க்குள் காசநோய்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் இம்முயற்சியில் அரசுத் துறைகளுடன் இணைந்து தனியார் அமைப்புகள், இளைஞர்கள் மற்றும் சமூக நல நிறுவனங்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ஆட்சியர் வலியுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு. அமுதா ராணி, மாவட்ட சுகாதார அலுவலர் மரு. யசோதாமணி, துணை இயக்குநர் மரு. கே.பி. இராஜன், இளைஞர் நல அலுவலர் திருமதி காவியா முத்துலட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள், தன்னார்வ மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க | கடலில் ஒரு மிதக்கும் நகரம்! மும்பை வந்த ‘கார்டெலியா ஸ்கை’ சொகுசு கப்பல் – பிரமிக்க வைக்கும் அம்சங்கள்!

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu