SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு: 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

Perambalur jobs : பெரம்பலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியத்தில் வேலைவாய்ப்பு. 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

Written By Karthikeyan Sekar
Published: Sep 02, 2026, 20:05 IST | Updated: Sep 02, 2026, 20:08 IST
Image Credit: Perambalur District Job
Join

Perambalur jobs : பெரம்பலூர் மாவட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் இயங்கும் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்தில் பதிவறை எழுத்தர் (Record Clerk) பணியிடத்தை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒன்றிய பொதுநிதி தலைப்பின்கீழ் ஊதியம் பெறும் இப்பணியிடத்தில் SC பிரிவினருக்கான ஒரு பின்னடைவுப் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  

ஊதியம் மற்றும் வயது வரம்பு விவரங்கள்

இப்பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் நபருக்கு மாத ஊதியமாக ரூ.15,900 முதல் ரூ.58,500 வரை (ஊதிய நிலை-2) வழங்கப்படும். 01.07.2026 அன்றைய தேதியின்படி, விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், அதிகபட்சமாக 37 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகபட்ச வயது வரம்பில் இருந்து மேலும் 10 ஆண்டுகள் வரை தளர்வு அளிக்கப்படும். முன்னாள் இராணுவத்தினராக இருப்பின் 18 முதல் 55 வயது வரை விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் ஆவர்.  

கல்வித் தகுதி மற்றும் விண்ணப்பக் கட்டணம்

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.50/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் இக்கட்டணத்தை வேப்பந்தட்டை வட்டார வளர்ச்சி அலுவலரின் அலுவலக Non-Salary வங்கிக் கணக்கிற்கு (இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, வேப்பந்தட்டை) நேரடியாகச் செலுத்தி, அதற்கான அசல் ரசீதை விண்ணப்பப் படிவத்துடன் இணைக்க வேண்டும்.

இணைக்க வேண்டிய முக்கிய ஆவணங்கள்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கீழ்க்காணும் சான்றிதழ்களின் சுய சான்றொப்பமிட்ட (Self-Attested) நகல்களை இணைக்க வேண்டும்:  

10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்,  
பள்ளி மாற்றுச் சான்றிதழ் (TC),
சாதிச் சான்றிதழ்,
வட்டாட்சியரிடம் (Tahsildar) பெறப்பட்ட இருப்பிடச் சான்றிதழ்,
அடையாள அட்டை (வாக்காளர் அட்டை / குடும்ப அட்டை / அங்கீகரிக்கப்பட்ட அரசு அடையாள அட்டை நகல்),
தகுந்த பிரிவினருக்கான மாற்றுத்திறனாளி அல்லது முன்னாள் இராணுவத்தினர் சான்றிதழ்,

விண்ணப்பிக்கும் முறை மற்றும் கடைசி நாள்

இப்பணிக்கான விண்ணப்பப் படிவத்தை பெரம்பலூர் மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான perambalur.nic.in என்ற முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் "ஆணையர் / வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி), ஊராட்சி ஒன்றியம், வேப்பந்தட்டை - 621 116, பெரம்பலூர் மாவட்டம்" என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் வழியாகவோ அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள் 30.09.2026 மாலை 5.45 மணி ஆகும். தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே நேர்காணல் அழைப்புக் கடிதம் அனுப்பி வைக்கப்படும்
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

ZEENEWS TRENDING STORIES