PM Internship Scheme: இளைஞர்களின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்தும் நோக்கில், ஒன்றிய நிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின் சார்பில் 'பிரதமரின் தொழிற்பயிற்சித் திட்டம்' செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் நாட்டின் முன்னணி நிறுவனங்களில் இளைஞர்களுக்குத் தொழிற்பயிற்சி வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் தகுதியான இளைஞர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
இப்பயிற்சித் திட்டத்தில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் பின்வரும் கல்வித்தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்:
கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி, ITI, பாலிடெக்னிக், டிப்ளமோ, இளநிலைப் பட்டப்படிப்பு அல்லது முதுநிலைப் பட்டப்படிப்பு.
வயது வரம்பு: 18 வயது முதல் 25 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.
தேர்வு செய்யப்படும் பயிற்சியாளர்களுக்கு 6 மாதம் முதல் 9 மாதம் வரை நேரடிப் பயிற்சி வழங்கப்படும்.
மாதாந்திர உதவித்தொகை: பயிற்சி காலத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.9,000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.
கூடுதல் ஊக்கத்தொகை: பயிற்சிப் பணியில் சேரும்போது, ஒருமுறைப் பயனாக ரூ.6,000 கூடுதல் ஊக்கத்தொகையாக இரண்டு தவணைகளில் வழங்கப்படும்.
சான்றிதழ்: பயிற்சி வெற்றிகரமாக நிறைவடைந்தவுடன் அரசு அங்கீகாரம் பெற்ற தொழிற்பயிற்சிச் சான்றிதழ் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்: பொதுவான முழுநேரக் கல்வியில் பயின்று கொண்டிருப்பவர்கள் விண்ணப்பிக்க இயலாது என்றாலும், இணையவழி கல்வி அல்லது தொலைதூரக் கல்வி திட்டங்களில் பயில்பவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், முழுநேரப் பட்டப்படிப்பு அல்லது முதுகலைப் படிப்பின் இறுதி ஆண்டில் பயின்று வரும் மாணவர்களும் விண்ணப்பிக்கத் தகுதி உண்டு. விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.12 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
முழுநேரப் பணியில் இருப்பவர்கள், ஐஐடி, ஐஐஎம், தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள், ஐஐஎஸ்இஆர், என்ஐடி, ஐஐஐடி, ஐஐஎஸ்சி ஆகிய உயர் கல்வி நிறுவனங்களில் படித்தவர்கள். CA, சிஎம்ஏ, சிஎஸ், எம்பிபிஎஸ், பிடிஎஸ், எம்டி, எம்எஸ், எம்பிஏ அல்லது அதற்கு இணையான பட்டங்கள் மற்றும் எம்.பில் பிஎச்.டி முடித்தவர்கள். ஏற்கனவே மத்திய/மாநில அரசு திட்டங்களின் கீழ் தொழில் பழகுநர் பயிற்சி முடித்தவர்கள் அல்லது தற்போது பயிற்சி பெறுபவர்கள். குடும்ப உறுப்பினர்கள் எவரும் அரசு ஊழியராக இருத்தல் கூடாது.
இத்திட்டத்தில் பங்கேற்க விரும்பும் தகுதியான வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் https://pminternship.mca.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக தங்களது விவரங்களைப் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். பதிவு செய்வது தொடர்பான சந்தேகங்கள் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு 87541 98976 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது thiranagamsalem@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம். மேலும், சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் உள்ள மாவட்ட திறன் அலுவலரை நேரில் அணுகியும் வழிகாட்டுதலைப் பெறலாம்