SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

பிஎம் கிசான் திட்டம் : விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு! அடுத்த தவணைத்தொகை பெற இதை செய்யவும்

PM KISAN 2026: விவசாயிகள் பாரத பிரதமரின் பி.எம்.கிசான் நிதி உதவித் தொகையினை தொடர்ந்து பெற விவசாய அடையாள அட்டை எண் கட்டாயம் என தமிழ்நாட அரசு தெரிவித்துள்ளது.

Written By Karthikeyan Sekar
Published: Aug 13, 2026, 03:09 PM IST | Updated: Aug 13, 2026, 03:12 PM IST
Join

PM KISAN 2026: பாரத பிரதமரின் பி.எம்.கிசான் நிதி உதவி திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் அனைத்து விவசாயிகளும் வரும் காலங்களில் தொடர்ந்து ஒன்றிய அரசு வழங்கிடும் தவணைகளைப் பெற்றிட தங்களது நில உடைமை ஆவணங்களை பதிவு செய்து விவசாய அடையாள எண் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுவரை தங்களது நில உடைமை விபரங்களை வேளாண் அடுக்ககம் வலைதளத்தில் பதிவு செய்யாத விவசாயிகள் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அலுவலர்களை தொடர்பு கொண்டு தங்களது நில உடைமை ஆவணங்களை வேளாண் அடுக்ககம் வலைதளத்தில் பதிவேற்றம் செய்து விவசாயிகளுக்கான அடையாள எண் பெற்றிட அறிவுறுத்தப்படுகிறது.

எதிர்வரும் காலங்களில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை மற்றும் வேளாண் விற்பனைத்துறை மூலமாக செயல்படுத்தப்படும் பல்வேறு மானியத் திட்டப் பயன்களுக்கும் அடிப்படையாக இந்த அடையாள எண் இருக்கும் என ஒன்றிய மற்றும் மாநில அரசுகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே வேளாண் அடுக்கக வலைதளத்தில் இதுநாள் வரை நில உடமை விவரங்களை பதிவு செய்யாத விவசாயிகள் அருகிலுள்ள இ-சேவை மையம் அல்லது வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை ஆதார் எண், கைபேசி எண், நில ஆவணங்கள், வங்கி கணக்கு புத்தகம் போன்ற ஆவணங்களுடன் தொடர்புகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் வேளாண் அடுக்கக வலைதளத்தில் இதற்கு முன்னர் பதிவு செய்த விவசாயிகள் அதே விவசாய அடையாள எண்ணில் வேறு பகுதிகளில் தங்களுக்கு இருக்கும் பிற நிலங்களை உரிய ஆவணங்களை சமர்ப்பித்து அதே அடையாள எண்ணில் இணைத்திட
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஒற்றை சாளர முறையில் அனைத்து துறை பயன்களை பெறவும், கூட்டுறவு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் எளிய முறையில் பயிர்க்கடன் பெறவும், பி.எம்.கிசான் மற்றும் பயிர் காப்பீடு போன்ற இதர ஒன்றிய மற்றும் மாநில திட்டங்களால் பயனடையவும் தமிழ்நாட்டில் விவசாயம் சார்ந்த திட்ட பலன்கள் வழங்கும் அனைத்து அரசு துறைகளுக்கும் இத்தரவுகள் வழங்கப்பட்டு, இதன் அடிப்படையிலேயே திட்ட பயன்கள் வழங்கப்படும்.
பி.எம்.கிசான் நிதி உதவி பெறும் விவசாய பெருமக்கள் தங்கள் ஆதார் எண் வங்கி கணக்கு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதை சரிபார்த்திடவும் இ-சேவை மையத்தினை அணுகி ekyc விவரங்ளை பதிவேற்றம் செய்திடவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதற்கான சிறப்பு முகாம்கள் அந்தந்த வருவாய் கிராமங்களில் நடைபெறும். விவசாயிகள் அனைவரும் பங்கேற்று பயன்பெறு தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

திருநெல்வேலி கடைசி தேதி

உழவர் அடையாள எண் பெறுவதற்கு விவசாயிகள் தங்களது ஆதார் எண், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசி எண், நில உடைமை விவரங்கள் ஆகியவற்றுடன் தங்கள் பகுதி வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலர்களை அணுகி 25.08.2026-க்குள் பதிவு செய்து பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விவசாயிகள் மேற்கண்ட ஆவணங்களுடன் தங்கள் பகுதியில் உள்ள பொது சேவை மையங்களை அணுகி எவ்வித கட்டணமுமின்றி பதிவு செய்து உழவர் அடையாள எண் பெற்றுக் கொள்ளலாம்.

ஏற்கனவே உழவர் அடையாள எண் பெறப்பட்ட விவசாயிகளும், தங்களது விடுபட்ட புல எண்களையும் இணைத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது. எனவே அனைத்து விவசாயிகளும் தங்கள் நில உடைமை ஆவணங்களை பதிவு செய்து வேளாண்மைத் துறையின் மத்திய, மாநில அரசு நலத்திட்டங்களை தொடர்ந்து பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.

ZEENEWS TRENDING STORIES