SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

தோனியின் கபேவில் விஜய் - ராகுல் மீட்டிங்... வீட்டிலும் தனியாக ஆலோசனை!

Rahul Gandhi - CM Vijay Meet: சென்னைக்கு வருகை தந்துள்ள ராகுல் காந்தி, முதலமைச்சர் விஜய்யுடன் பாலவாக்கத்தில் உள்ள கபே ஒன்றில் காபி குடித்து உரையாடினார். முன்னதாக, விஜய் வீட்டில் ராகுல் காந்திக்கு மதிய விருந்து அளிக்கப்பட்டது.

Written By Sudharsan G
Published: Oct 10, 2026, 04:57 PM IST | Updated: Oct 10, 2026, 05:04 PM IST
Join

Rahul Gandhi - CM Vijay Meet: சென்னையில் காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்திருக்கும் 'மாணவர்களின் குரல்' என்ற நிகழ்வில் பங்கேற்க மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் சென்னை வந்துள்ளார்.

மாணவர் சந்திப்பிற்கு முன்னர், முதலமைச்சரும், தவெக தலைவருமான விஜய்யை ராகுல் காந்தி சந்தித்தார். தவெக தலைமையிலான மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி அமைந்த பிறகு இருவரும் முதல்முறையாக சந்தித்துக்கொண்டனர்.

மேலும் படிக்க | டெல்லியின் அடிமை முதல்வர் விஜய் - உதயநிதி ஸ்டாலின் கடும் சாடல் - என்ன மேட்டர்?

CM விஜய் வீட்டில் மதிய விருந்து

டெல்லியில் இருந்து விமானம் மூலம் வந்த ராகுல் காந்தி, சென்னை நீலாங்கரையில் உள்ள முதலமைச்சர் விஜய்யின் இல்லத்திற்கு நேரடியாக கார் மூலம் சென்றார். அங்கு முதல்வர் விஜய்யின் இல்லத்தில் ராகுல் காந்திக்கு மதிய விருந்து அளிக்கப்பட்டது.

குறிப்பாக, கட்சியின் நிர்வாகிகள் யாருமின்றி மதிய உணவு அருந்தியபடியே இருவரும் தனித்து ஆலோசனை மேற்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தோனியின் கபேவில் ராகுல் - விஜய் சந்திப்பு

தொடர்ந்து இருவரும் ஒரே காரில் ஏறி, சென்னை பாலவாக்கத்தில் உள்ள கபேவிற்கு வருகை தந்தனர். அந்த கபேவில் இருவரும் காபி குடித்து சற்று நேரம் பேசினர். அவர்கள் காபி அருந்திய கபே, முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் எம்.எஸ். தோனி பங்குதாரராக உள்ள கபே என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னையில் பலத்த பாதுகாப்பு

விஜய்யுடன் ஆலோசனை நடத்திய பிறகு அங்கிருந்து இருவரும் வெவ்வேறு காரில் ஏறிச்சென்றனர். ராகுல் காந்தி தீவுத்திடலில் நடைபெறும் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சிக்கு புறப்பட்டார்.

மேலும் படிக்க | பிரதமர் மோடி வருகை... சென்னை முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் - முழு விவரம்

இன்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நாளை பிரதமர் மோடி என அடுத்தடுத்து சென்னைக்கு தேசிய தலைவர்கள் வருகை தருவதால் நகர் முழுவதும் பல்வேறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன, போலீசார் பாதுகாப்பையும் பலப்படுத்தி உள்ளனர்.

2,000க்கும் மேற்பட்டோர் கைது

எஸ்ஐஆர் நடவடிக்கைகளில் குளறுபடிகள் நடைபெற்றிருப்பதாக குற்றஞ்சாட்டி தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி மாணவர்களும் எதிர்கட்சிகளும் டெல்லியில் தொடர் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இன்று சிஜேபி கட்சியினர் ஜந்தர் மந்தரில் போராட்டத்தை அறிவித்திருந்த நிலையில், சுமார் 2000க்கும் மேற்பட்டோர் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சிஜேபி தலைவர்களும், நிர்வாகிகளும் கைதாகினர்.

அரசியல் தலைவர்கள் கைது

டெல்லியில் நடந்த போராட்டத்தில் கேரள முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயன், மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜி, சிபிஎம் பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி, சிபிஎம் தமிழ்நாடு மாநில செயலாளர் பெ. சண்முகம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மாணவத் தலைவர் நேஹா போரா உள்ளிட்ட பலரும் கைதாகினர். பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் டெல்லி ஜந்தர் மந்தர் நோக்கி இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நாடு முழுவதும் பரபரப்பான சூழல்

ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலும், சேலத்திலும் போராட்டம் நடத்தியவர்களும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்லி மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பான சூழல் நிலவும் இந்த நேரத்தில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சென்னைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மாணவர்கள் இடையே உரையாட இருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.

மேலும் படிக்க | விமானத்திலேயே அபிஜீத் திப்கே கைது... இன்ஸ்டா லைவ்வால் பரபரப்பு - நடந்தது என்ன?

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

ZEENEWS TRENDING STORIES