PM Modi Chennai Visit, Traffic Diversions: பிரதமர் மோடி நாளை (அக். 11 - ஞாயிறு) சென்னைக்கு வருகை தர உள்ளார். மெட்ரோ ரயில் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களை திறந்துவைக்க சென்னைக்கு வருகை தர உள்ளார்.
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் பிரதமர் மோடி முதல்முறையாக சென்னை வர இருக்கிறார். அதுவும் இன்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று சென்னைக்கு வருகை தந்து மாணவர்களிடையே உரையாட இருக்கிறார். இதற்கு அடுத்த நாளே அரசியல் களத்தில் பெரும் கவனத்தை ஏற்படுத்தி உள்ளது.
14.6 கி.மீ, தூரம் கொண்ட பூந்தமல்லி பைபாஸ் - வடபழனி வழித்தடம் நாளை மக்களின் பயன்பாட்டுக்கு வர உள்ளது. தொடர்ந்து, பழனி, பரமக்குடி, நாமக்கல், அம்பாசமுத்திரம், வேலூர் கண்டோன்மென்ட் உள்ளிட்ட அம்ரித் பாரத் ரயில் நிலையங்களை பிரதமர் மோடி காணொளி வாயிலாக திறந்துவைக்க உள்ளார்.
அதேநேரத்தில், கோவை மாவட்டத்தில் 700 கோடி ரூபாய் மதிப்பிலான ரயில்வே திட்டங்களை தொடங்கிவைக்க உள்ளார். பூந்தமல்லியில் மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்கிவைத்த பின்னர், முதலமைச்சர் விஜய்யுடன் போரூர் வரை மெட்ரோ ரயிலில் பயணிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல், சென்னையில் அவர் ரோடு ஷோ மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், மாநிலங்களவை உறுப்பினரும், பிரபல இசையமைப்பாளருமான இசைஞானி இளையராஜாவின் இசை ஆராய்ச்சி மையத்தையும் பிரதமர் மோடி திறந்துவைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பிரதமர் மோடியின் சென்னை வருகையை முன்னிட்டு, சீரான போக்குவரத்து மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் நகரின் பல்வேறு இடங்களில் வணிக மற்றும் கனரக வாகனங்களுக்கான போக்குவரத்தில் மாற்றம் கொண்டுள்ளனர்.
நாளை (அக். 11) காலை 8 மணி முதல் மாலை 4.30 மணிவரை இந்த போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
1. ஜிஎஸ்டி சாலையில் தாம்பரத்திலிருந்து வரும் வாகனங்கள்:
2. ஜே என் 100 அடி சாலையிலிருந்து கத்திப்பாரா மேம்பாலம் நோக்கி வரும் வாகனங்கள்:
3. மவுண்ட் பூந்தமல்லி சாலையில் இருந்து கத்திப்பாரா மேம்பாலம் நோக்கி வரும் வாகனங்கள்:
4. சர்தார் படேல் சாலையிலிருந்து லோக் பவன் நோக்கி வரும் வாகனங்கள்:
5. வேளச்சேரி பிரதான சாலையில் இருந்து சர்தார் படேல் சாலை நோக்கி வரும் வாகனங்கள்
வேளச்சேரி பிரதான சாலையில் இருந்து சர்தார் படேல் சாலை நோக்கிச் செல்லும் வாகனங்கள், குரு நானக் சந்திப்பில் வேளச்சேரி நோக்கி திருப்பி விடப்படும்.
6. அண்ணா சாலையில் இருந்து லோக் பவன் நோக்கி வரும் வாகனங்கள்:
அண்ணா சாலையில் இருந்து வரும் வாகனங்கள் MC ராஜா யூ-டர்ன்-(U-turn) பகுதியில் அண்ணா சாலை திசையிலேயே திருப்பி விடப்பட்டு, தங்கள் இலக்குகளை நோக்கிச் செல்ல அனுமதிக்கப்படும்.