• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /கலைஞர் எப்போதும் மஞ்சள் சால்வை போட்டிருந்தது ஏன்? இதுதான் காரணம்..

கலைஞர் எப்போதும் மஞ்சள் சால்வை போட்டிருந்தது ஏன்? இதுதான் காரணம்..

கலைஞர் கருணாநிதியை நினைத்து பார்க்கும் பொழுது அவருடன் எப்போதும் ஒரு மஞ்சள் துண்டு இருப்பதும் நினைவுக்கு வரும். அந்த மஞ்சள் துண்டை அவர் எப்போதும் கூட வைத்திருந்தது ஏன்?

Written ByYuvashree M
Published: Aug 12, 2026, 08:10 PM IST|Updated: Aug 14, 2026, 03:02 PM IST
joinshare
கலைஞர் எப்போதும் மஞ்சள் சால்வை போட்டிருந்தது ஏன்? இதுதான் காரணம்..
Image Credit: Screen Grab

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
ரேஷன் கார்டு இருக்கா? இந்த வசதி இருப்பதை மறக்காதீங்க.. ONORC மூலம் கிடைக்கும் முக்கிய நன்மை

ரேஷன் கார்டு இருக்கா? இந்த வசதி இருப்பதை மறக்காதீங்க.. ONORC மூலம் கிடைக்கும் முக்கிய நன்மை

2

அமெரிக்காவின் திடீர் தடை... இந்திய ஊழியர்களுக்கு இனி கிரீன் கார்டு கிடைக்காதா? Explained

3

NZ ஒருநாள் தொடர்: 2 இந்திய அணிகள்.. புவி, ஷமிக்கு வாய்ப்பு? முழு விவரம்

4

புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: என்ஆர் காங்கிரஸ் அசோக் ஆனந்த் 8,501 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

5

அக்டோபர் 31ல் குரு - கேது சேர்க்கை.. இந்த 4 ராசிகளுக்கு பணம் கொட்டும்!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

கலைஞர் கருணாநிதியை பற்றி நினைத்தால் நம் அனைவருக்கும் அவரது கருப்பு கண்ணாடி, வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை, மஞ்சள் துண்டு போன்றவை நினைவுக்கு வரும். ஆனால் அது அவர் வயதான பின்பு மாறிக்கொண்ட தோற்றம்தான். அதற்கு முன்பு அவர் டிப்டாப்பாக கோட் சூட் போட்டுக்கொண்டு இருந்த ஒருவர். அவர் மஞ்சள் துண்டுக்கு மாறியது எப்படி?

கலைஞரின் முந்தைய காஸ்டியூம்..

கலைஞரின் பழைய போட்டோக்களை கொஞ்சம் புரட்டிப்பார்த்தால், அவர் முன்னர் எப்படி இருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். சுருள் முடி, கோட் சூட், சஃபாரி என இவரது அப்போதைய காஸ்டியூமே பலரையும் கவரையும் வகையில் தனித்துவமாக இருக்கும். ஆனால், அரசியல் மற்றும் தன்னுடைய தனிப்பட்ட விருப்பம் காரணமாக தன்னுடைய ஆடை விஷயங்களை மாற்றிக்கொண்டார்.

நாளடைவில் வேட்டி சட்டைக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்த கலைஞர், பின்னர் காலர் இல்லாத ஜிப்பா அணிய ஆரம்பித்தார். பின்னர் முழுமையாக தூய காட்டனுக்கு மாறிவிட்டார். பின்னர் எங்கு போனாலும் ஒயிட் அண்ட் ஒயிட் அணிய ஆரம்பித்தார்.

மஞ்சள் சால்வை…

கலைஞரைப் பொருத்தவரை அவரது தோள்களை எப்போதும் கருப்பு சிவப்பு கரை வைத்து துண்டுகளும் வண்ண வண்ண சால்வைகளும் அலங்கரித்து செல்லும். இதனால் நீண்ட காலமாக அவர் வண்ண சால்வை தான் அணிந்திருந்தார். ஆனால், அவர் வயதான காலத்தில் எப்போதும் மஞ்சள் துண்டை கூடவே வைத்திருந்தார்.

கலைஞர் ஒரு சுத்தமான நாத்திகவாதி என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் அவர் ஆன்மீகத்தை பறைசாற்றுவதற்காக இந்த மஞ்சள் துண்டை போட்டிருந்ததாக கடுமையான விமர்சனங்கள் அவர் மீது வர ஆரம்பித்தன. உண்மையில் கலைஞர் எப்போதும் தோன்றும் இருந்தார் என்பது நிதர்சனம். பொது அவர் அணிந்த எல்லாமே வெள்ளை நிறத்தால் ஆன கைத்தறி துண்டு என்பதால் அவற்றைப் பெரிதாக யாரும் கவனிக்கவில்லை.

1994-1995 சமயத்தில், கலைஞரின் கன்னத்தில் மாம்பிஞ்சு அளவிற்கு ஒரு வீக்கம் வந்து விட்டதாம். இதனை பரிசோதித்த டாக்டர்கள், அவருடைய உமிழ்நீர் சுரப்பிக்கு செல்லும் ஒரு மெல்லிய நரம்பில் வெடிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் அதனால் உமிழ்நீர் தேக்கம் வந்ததால்தான் வீக்கம் ஏற்பட்டிருக்கிறது என்று கூறினார்களாம். இதை சரிசெய்ய சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அப்போது அவர்கள் கொடுத்த ஆலோசனைதான், “எப்போதும் முகம், கழுத்து, தோளில் கதகதப்பான கம்பளி போன்ற சால்வை இருக்க வேண்டும். இப்போது நீங்கள் போடும் கைத்தறி சால்வைக்கு பதிலாக கம்பளி சால்வை சிறப்பாக இருக்கும்” என தெரிவித்துள்ளனர். அப்போது கலைஞர் ஒரு கம்பளி சால்வையை எடுத்து வர சொல்லியிருக்கிறார். அப்படி முதன்முதலாக அவரிடம் வந்த சால்வை, மஞ்சள் நிற கம்பளி சால்வைதான்.

புத்தருடன் இருக்கும் கனக்ஷன்..

புத்தர் ஒரு மஞ்சள் நிற சால்வையால்தான் தன்னுடைய உடலை ஆடை போல மூடியிருப்பார். இதன் காரணமாகவும் கலைஞர் மஞ்சள் சால்வையை அணிந்திருந்ததாக கூறப்படுகிறது. காரணம், ஓஷோ, அவருடைய புத்தகத்தில் “ஒளியும் தெளிவும் உள்ளவன் எவனோ, அவனே மஞ்சலாடை அணியலாம்” என்று தன் புத்தகத்தில் கூறியிருக்கிறார். இதை கலைஞரும் பல இடங்களில் சுட்டிக்காட்டியதால் இவ்வாறு பேசப்படுகிறது.

அன்புமணி ராமதாஸ் சொன்னது என்ன?

கலைஞரும், அன்புமணி ராமதாஸும் தங்களுக்குள் நிறைய வேற்றுமைகள் இருந்தாலும் நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள். 1996ல் பாமக சார்பில் சமூகநீதி மாநாடு விழுப்புரத்தில் நடத்தப்பட்டிருக்கிறது. இதில் கலைஞர் கலந்து கொண்ட போது அவருக்கு ஒரு மஞ்சள் சால்வையை போத்தியிருக்கின்றனர். இந்த சால்வையைத்தான் அவர் இறுதி வரை வைத்திருந்ததாக அவர், கலைஞர் இறந்ததையொட்டி ஒரு பிரபல நாளிதழுக்கு அளித்த பேட்டியில் இதனை தெரிவித்திருக்கிறார். 

தொடர்ந்து சால்வையை போட்டது ஏன்?

மஞ்சள் சால்வையை ஒருமுறை கலைஞர் உபயோகித்திருந்தாலும், அவரை சுற்றியிருக்கும் அனைவரும் இது அவருக்கு எடுப்பாக இருப்பதாக கூறியிருக்கின்றனர். இந்த பாராட்டுகள் பிடித்துப்போகவே, அவர் தொடர்ந்து மஞ்சள் நிற சால்வையை உபயோகிக்க ஆரம்பித்திருக்கிறார். இதற்கு பலரும் ஆன்மிக காரணங்கள் இருப்பதாக கூறினாலும், கலைஞர் அது எதையும் கண்டுகொள்ளவே இல்லை. தன் நண்பர் கொடுத்ததால்தான் கலைஞர் அந்த சால்வையை இறுதி வரை அணிந்திருந்தார் என்கிற ஒரு பேச்சும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பு: கலைஞர் தான் மஞ்சள் சால்வை அணிவத்கான காரணத்தை எப்போதும் கூறியதில்லை. அவருடைய பற்றாளர்கள் கூறியதை வைத்து, இணையத்தில் இருந்து திரட்டப்பட்ட கருத்துகளை வைத்தும்தான் இந்த செய்தி எழுதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Add Zee News as a Preferred Source
TAGS:
DMK