SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

யூடியூபர் மதுமிதா மீது செயின் திருட்டு குற்றச்சாட்டு! 118 பவுன் திருடப்பட்ட வழக்கில் திருப்பம்..

யூடியூபர் மதுமிதா மீது 5 பவுன் செயின் திருட்டு வழக்கு: வீட்டில் 118 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 4 பேர் கைது தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வரும் மதுமிதா. என்ன நடந்தது? முழுமையாக பார்க்கலாம்.

Written By Yuvashree M
Published: Oct 05, 2026, 06:03 PM IST | Updated: Oct 05, 2026, 06:23 PM IST
Join

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தம்மத்துக்கோணம் பகுதியைச் சேர்ந்த சமூக வலைத்தளங்களில் பிரபலமான யூடியூபர் மதுமிதா மீது 5 பவுன் செயின் திருடியதாக ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை கே.டி.சி. நகரைச் சேர்ந்த கட்டிட ஒப்பந்ததாரர் பேச்சிமுத்து அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிசியோதெரபி சிகிச்சையின்போது மதுமிதாவுக்கும் பேச்சிமுத்துவுக்கும் அறிமுகம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

செயின் திருட்டு வழக்கு!

கடந்த 2022-ம் ஆண்டு திருநெல்வேலி நீதிமன்றம் அருகே பேச்சிமுத்துவின் வாகனத்தில் மதுமிதா ஏறியதாகவும், பின்னர் அவரை பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டு வீட்டுக்குச் சென்றபோது கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் செயின் காணாமல் போனதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் பேரில் ராஜாக்கமங்கலம் காவல் நிலைய போலீசார் மதுமிதா மீது திருட்டு வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சம்பவம் திருநெல்வேலி பகுதியில் நடைபெற்றதாக கூறப்படுவதால், வழக்கை திருநெல்வேலி யூடியூபர் மதுமிதா மீது 5 பவுன் செயின் திருட்டு வழக்கு வீட்டில் 118 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 4 பேர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தம்மத்துக்கோணம் பகுதியைச் சேர்ந்த சமூக வலைத்தளங்களில் பிரபலமான யூடியூபர் மதுமிதா மீது 5 பவுன் செயின் திருடியதாக ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருநெல்வேலி கே.டி.சி. நகரைச் சேர்ந்த கட்டிட ஒப்பந்ததாரர் பேச்சிமுத்து அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிசியோதெரபி சிகிச்சையின்போது மதுமிதாவுக்கும் பேச்சிமுத்துவுக்கும் அறிமுகம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த 2022-ம் ஆண்டு திருநெல்வேலி நீதிமன்றம் அருகே பேச்சிமுத்துவின் வாகனத்தில் மதுமிதா ஏறியதாகவும், பின்னர் அவரை பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டு வீட்டுக்குச் சென்றபோது கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் செயின் காணாமல் போனதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புகாரின் பேரில் ராஜாக்கமங்கலம் காவல் நிலைய போலீசார் மதுமிதா மீது திருட்டு வழக்குப்பதிவு செய்துள்ளனர். சம்பவம் திருநெல்வேலி பகுதியில் நடைபெற்றதாக கூறப்படுவதால், வழக்கை திருநெல்வேலி மாவட்டத்திற்கு மாற்றி விசாரணை மேற்கொள்ளும் நடவடிக்கையும் நடைபெற்று வருகிறது. மதுமிதா வீட்டில் 118 சவரன் நகைகள் கொள்ளை
இதற்கிடையே, நாகர்கோவில் அருகே தம்மத்துக்கோணத்தில் உள்ள மதுமிதாவின் வீட்டில் கடந்த செப்டம்பர் 24-ம் தேதி பெரும் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது.

118 சவரன் நகை திருட்டு..!

மதுமிதாவும் அவரது கணவர் வினோத் குமாரும் வீட்டை பூட்டிவிட்டு திருநெல்வேலிக்குச் சென்றிருந்த நிலையில், இரவு வீடு திரும்பியபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. வீட்டில் இருந்த பீரோவை உடைத்து சுமார் 118 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகள், ரூ.50 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. கொள்ளையர்களை பிடிக்க அந்தப் பகுதியில் இருந்த 160-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களின் பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டதுடன், செல்போன் அழைப்பு விவரங்களும் போலீசாரால் ஆய்வு செய்யப்பட்டன.

விசாரணையில் கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடையதாக ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த இசக்கிபாண்டி, முக்கடலைச் சேர்ந்த முருகன், ஆலங்குளத்தைச் சேர்ந்த முருகேசன், திம்மராஜபுரத்தைச் சேர்ந்த தங்கபாண்டி ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 98 சவரன் நகைகள் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சமூக வலைதள பதிவுகளை கண்காணித்த கொள்ளையர்கள் போலீஸ் விசாரணையில், மதுமிதா சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்த வீடியோக்களும் கொள்ளையர்களின் கவனத்தை ஈர்த்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மதுமிதா தனது சமூக வலைதளப் பதிவுகளில் பணம், நகைகள் உள்ளிட்டவற்றை வெளிப்படையாகக் காட்டியதாகவும், தொடர்ந்து தங்க நகைகள் வாங்குவது தொடர்பான வீடியோக்களை வெளியிட்டதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது.

மேலும், ஒரு சமூக வலைதள வீடியோவில் அவரது குழந்தையின் பள்ளிப் பையில் இடம்பெற்றிருந்த பெயர் உள்ளிட்ட தகவல்களை வைத்து, குடும்பத்தினர் வசிக்கும் பகுதி மற்றும் அவர்களது அன்றாட நடவடிக்கைகள் குறித்து கொள்ளையர்கள் தகவல்களை சேகரித்ததாகவும் கூறப்படுகிறது. மதுமிதா குடும்பத்தினர் வெளியூர் சென்றிருப்பதை சமூக வலைதளப் பதிவுகள் மூலம் அறிந்துகொண்ட பின்னர் கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றியதாகவும் விசாரணையில் தெரியவந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருபுறம், அவரது வீட்டில் 118 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மறுபுறம் 2022-ம் ஆண்டு நடைபெற்றதாக கூறப்படும் 5 பவுன் செயின் திருட்டு புகாரில் மதுமிதா மீதே வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாநகரப் பகுதியில் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரிக்கலாம் என கூறப்படுகிறது  மேலும் இந்த வழக்கு திருநெல்வேலி மாநகரப் பகுதியில் உள்ள குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொள்ளும் நடவடிக்கையும் நடைபெற்று வருகிறது.

மதுமிதா வீட்டில் 118 சவரன் நகைகள் கொள்ளை இதற்கிடையே, நாகர்கோவில் அருகே தம்மத்துக்கோணத்தில் உள்ள மதுமிதாவின் வீட்டில் கடந்த செப்டம்பர் 24-ம் தேதி பெரும் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது.
மதுமிதாவும் அவரது கணவர் வினோத் குமாரும் வீட்டை பூட்டிவிட்டு திருநெல்வேலிக்குச் சென்றிருந்த நிலையில், இரவு வீடு திரும்பியபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. வீட்டில் இருந்த பீரோவை உடைத்து சுமார் 118 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகள், ரூ.50 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

மேலும் படிக்க | புதுக்கோட்டை வேலைவாய்ப்பு : யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்

இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. கொள்ளையர்களை பிடிக்க அந்தப் பகுதியில் இருந்த 160-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களின் பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டதுடன், செல்போன் அழைப்பு விவரங்களும் போலீசாரால் ஆய்வு செய்யப்பட்டன.
விசாரணையில் கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடையதாக ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த இசக்கிபாண்டி, முக்கூடலைச் சேர்ந்த முருகன், ஆலங்குளத்தைச் சேர்ந்த முருகேசன், திம்மராஜபுரத்தைச் சேர்ந்த தங்கபாண்டி ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 98 சவரன் நகைகள் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சமூக வலைதள பதிவுகளை கண்காணித்த கொள்ளையர்கள் போலீஸ் விசாரணையில், மதுமிதா சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்த வீடியோக்களும் கொள்ளையர்களின் கவனத்தை ஈர்த்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மதுமிதா தனது சமூக வலைதளப் பதிவுகளில் பணம், நகைகள் உள்ளிட்டவற்றை வெளிப்படையாகக் காட்டியதாகவும், தொடர்ந்து தங்க நகைகள் வாங்குவது தொடர்பான வீடியோக்களை வெளியிட்டதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது.

சமூக வலைதளத்தை பார்த்து திருட வந்தவர்கள்..!

மேலும், ஒரு சமூக வலைதள வீடியோவில் அவரது குழந்தையின் பள்ளிப் பையில் இடம்பெற்றிருந்த பெயர் உள்ளிட்ட தகவல்களை வைத்து, குடும்பத்தினர் வசிக்கும் பகுதி மற்றும் அவர்களது அன்றாட நடவடிக்கைகள் குறித்து கொள்ளையர்கள் தகவல்களை சேகரித்ததாகவும் கூறப்படுகிறது. மதுமிதா குடும்பத்தினர் வெளியூர் சென்றிருப்பதை சமூக வலைதளப் பதிவுகள் மூலம் அறிந்துகொண்ட பின்னர் கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றியதாகவும் விசாரணையில் தெரியவந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருபுறம், அவரது வீட்டில் 118 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மறுபுறம் 2022-ம் ஆண்டு நடைபெற்றதாக கூறப்படும் 5 பவுன் செயின் திருட்டு புகாரில் மதுமிதா மீதே வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தொடர்ந்து பல்வேறு சர்ச்சையில் சிக்கி வரும் மதுமிதா தற்போது ஒருவரிடம் இருந்து ஐந்து பவுன் நகையை பறித்த சம்பவம் தற்போது காவல்துறை வட்டாரத்தில் ஒரு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது தனது வீட்டிலிருந்து நகை கொள்ளை போனதாக கடந்த வாரம் காவல் நிலையத்தில் புகார் செய்த மதுமிதா தற்போது 5 பவுன் தங்க நகை திருடிய வழக்கிலும் தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பேசும் பொருளாகியுள்ளது அரைகுறையாக ஆடைகள் அணிந்து youtube மூலமாக பணத்தை சம்பாதிக்கலாம் என மதுமிதா நினைத்தால் ஆனால் தற்போது ஐந்து பவுன் தங்க நகையை திருடிய வழக்கில் அவர் கைது செய்யப்படலாம் எனவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறது  அவர் மீது காவல்துறையினர் கைது நடவடிக்கை உள்ளதா அல்லது விசாரணை மேற்கொள்வார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

மேலும் படிக்க | மகளிர் உரிமைத்தொகை : வெளிமாநிலத்தவர்கள் மாதம் ரூ.1000 பெற முடியுமா?

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.

ZEENEWS TRENDING STORIES