• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /வார்த்தையை விட்ட இபிஎஸ்.. கொதித்தெழுந்த எஸ்பி வேலுமணி.. பிளவை நோக்கி அதிமுக!

வார்த்தையை விட்ட இபிஎஸ்.. கொதித்தெழுந்த எஸ்பி வேலுமணி.. பிளவை நோக்கி அதிமுக!

அதிமுகவில் அடுத்தடுத்து பிளவுகள் ஏற்பட்டு தலைமை மீது அதிருப்தி உண்டாகி வரும் நிலையில், தன்னைப் பற்றி எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி பதிலடி கொடுத்துள்ளார். இவரது பதில் அதிமுகவில் பெரும் சலசலப்பை கிளப்பி இருக்கிறது.

Written ByUmabarkavi K
Published: Nov 22, 2026, 09:05 IST|Updated: Nov 22, 2026, 09:50 IST
joinshare
வார்த்தையை விட்ட இபிஎஸ்.. கொதித்தெழுந்த எஸ்பி வேலுமணி.. பிளவை நோக்கி அதிமுக!

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
எல்.கே. சுதீஷ் – பூர்ணஜோதி சுதீஷ் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் யார்?

எல்.கே. சுதீஷ் – பூர்ணஜோதி சுதீஷ் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் யார்?

2

Explained : குழந்தைகளிடம் வாசிப்பு ஆர்வம் குறைவு..எதிர்காலத்தை பாதிக்கும்! எச்சரிக்கை

3

இதுவும் பாலியல் துன்புறுத்தலே... கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம் - பொதுவெளியில் பெண் நீதிபதி பகீர்

4

Gold Price: அதிரடியாக குறையும் தங்கம் விலை.. மோடி மேஜிக் தான் காரணமா?

5

“குழந்தை பெத்துக்காேங்க..” இஸ்லாமியர்கள் அதிகரிப்பால் ட்ரம்ப் ஆதரவாளர் கொடுத்த ஐடியா..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக இருந்த அதிமுக 2026 சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அக்கட்சியின் எதிர்காலம் என்ன என்ற கேள்விகள் பல தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் மனதில் எழுவதை பார்க்க முடிகிறது. 2026 தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மீண்டும் அதிமுக ஆட்சியை பிடிப்பார்களா? திமுக, தவெக என இரு கட்சிகளுக்கு இடையில் அதிமுகவின் எதிர்காலம் என்ன என்பது குறித்த கேள்விகளும் அதிமுகவினர் மத்தியில் இருந்து வருகிறது. 2026 தேர்வு முடிவுகளுக்கு பிறகு அதிமுகவின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீதான அதிருப்தி அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. 

எடப்பாடி பழனிசாமிக்கு எஸ்பி வேலுமணி பதிலடி

அவர் மீது அதிருப்தியால் அதிமுகவில் இருந்து பலரும் தவெகவில் இணைந்த வண்ணம் இருக்கின்றனர். இப்படியாக அதிமுக இருக்கும் நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி குறித்த அவர் பேசிய கருத்து பெறும் சலசலப்பை கிளப்பி இருக்கிறது. கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமியிடம், முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி பிரிந்தவர்களை ஒன்று சேர்க்க வேண்டும் என வலியுறுத்துகிறாரே என்ற கேள்வி எழுப்பப்பட்டது. 

இதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, "அதிமுகவில் இரண்டு கோடி தொண்டர்களில் ஒருவர்தான் வேலுமணி. இது தனி எல்லாம் கிடையாது. இரண்டு கோடி உறுப்பினர்களில் ஒரு நபர் தான் வேலுமணி. அவர் பேச்சைக் கேட்டுக் கொண்டு ஊடகத்தில் இதைக் கேட்காதீர்கள்" என கூறினார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் எஸ் பி வேலுமணி அறிக்கை ஒன்று வெளியிட்டு இருக்கிறார்.

எஸ்.பி.வேலுமணி கூறுகையில், "2 கோடி தொண்டரின் ஒருவர் தான் வேலுமணி. என்னை உதாசீனப் படுத்துவதாக எண்ணி அவர் சொல்லி இருந்தாலும், இதை விட எனக்கு வேறென்ன பெருமை இருக்கப் போகிறது? அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டன் என்பது தான் என்னுடைய முதல் அடையாளம். இந்த இயக்கத்தின் கொடிபிடிக்கும் தொண்டன் என்பதை விட வேறு எந்தப் பதவியும் எனக்கு பெரிதல்ல.

மேலும் படிக்க: திருப்பரங்குன்றம் விவகாரம்: அடுத்த பிளான்... விரைவில் அறிவிப்போம் - அமைச்சர் சி.டி.ஆர்

2 கோடி தொண்டர்களால் தான் நீங்கள் பொதுச் செயலாளர்

என்னைத் தொண்டரில் ஒருவன் என்று சொன்ன கழகப் பொதுச் செயலாளர் அவர்களுக்கு நன்றி. இந்த 2 கோடித் தொண்டர்களால் கொண்டுவரப்பட்டு தான் தாங்கள் இன்றைக்கு பொதுச் செயலாளர் பொறுப்பில் உள்ளீர்கள். கொடிபிடிக்கும் அந்த தொண்டன் தான் இந்த இயக்கத்தின் ஆணிவேர். அவன் ஆடினால் இந்த இயக்கம் ஆடும். அந்த தொண்டன் ஒரு முடிவை எடுத்துவிட்டால், என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதை ஒரு நல்ல தலைமை உணர வேண்டும்.

ஒவ்வொரு தொண்டனின் குரலையும் கேட்பது தான் ஒரு தலைமைக்கு அழகு. கடைக்கோடி தொண்டன் பத்திரிகை வைத்தால், அந்த கல்யாணத்தில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் இருப்பார். கடைக்கோடி தொண்டனின் குரலுக்கு மாண்புமிகு அம்மா அவர்களின் கான்வாயே நிற்கும். பொறுப்பில் இருப்பவர்களை விட, இயக்கத்தை உயிராய் நேசித்த அந்த அடிப்படைத் தொண்டனைத் தான் நம் தலைவர்கள் அதிகம் நேசித்தார்கள்; மதித்தார்கள்.

அதிமுகவிற்குள் வர முடியாமல் தவித்தார்கள்

இந்த இயக்கத்தை நேசிக்கும் எல்லோரும் எந்த பிரிவினையும் இல்லாமல் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்று சொல்வது வேலுமணி என்கிற ஒரு தொண்டன் மட்டுமா? இல்லையே. 2 கோடி தொண்டரில் யாரைக் கேட்டாலும் இதைத் தான் சொல்வார்கள். வி.கே. சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் தனி இயக்கம் ஆரம்பிக்கும் முன் பலமுறை நம் கழகத்தில் இணைந்து பணியாற்ற முன்வந்தார்கள். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் ஆகியோர் திமுக-வுக்கு செல்லும் முடிவை எளிதாக எடுக்கவில்லை. அதற்கு முன் பலமுறை தங்களை ஆளாக்கிய இந்த இயக்கத்தில் பயணிக்க வேண்டும் என்று பல முயற்சிகளை எடுத்தார்கள்.

அதேபோல், இன்றைக்கு மாண்புமிகு அமைச்சராக இருக்கும் கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள், மாண்புமிகு பேரவைத் தலைவராக உள்ள ஜே.சி.டி.பிரபாகர் அவர்கள் உள்ளிட்ட பலர் கழகத்தில் இணைந்து பயணிக்க பலமுறை முயற்சி எடுத்தும், நீங்கள் ஒரே ஒருவர் ஒப்புக்கொள்ளாமல் விடாப்பிடியாக இருந்ததால் தான் அவர்கள் எல்லாம் தமிழக வெற்றிக் கழகத்துக்கு சென்றார்கள்.

மேலும் படிக்க: 6 மாவட்டங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்.. எங்கெல்லாம்? பெற்றோர்களுக்கு முக்கிய அறிவிப்பு

இப்படி, தங்களுக்கு அடையாளம் கொடுத்த இயக்கத்தை விட்டுக்கொடுக்காமல் வந்தவர்களை, எப்போதும் போல உதாசீனப் படுத்தி அனுப்பிவைத்து தான் இன்றைக்கு இந்த நிலைமையில் இருக்கிறோம் என்பதை ஒருகணம் உணர வேண்டும். பொதுச் செயலாளர் அவர்களிடம் எப்போதும் நான் கேட்பது என்று தான்- வேலுமணி உள்ளிட்ட அந்த 2 கோடி தொண்டர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்று ஒருமுறை காது கொடுத்துக் கேளுங்கள்” என்று கூறினார்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, சசிகலா, தினகரன், ஓ.பன்னீர்செல்வம், விஜயபாஸ்கர் என பலர் அதிமுகவில் இருந்து வெளியேறி, பலமுறை பிளவை கண்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது எஸ்பி வேலுமணியும் எடப்பாடி பழனிசாமி தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கி செயல்பட்டு வருகிறார். அதிமுக மூத்த தலைவர்களை சமாதானப்படுத்தி, கட்சியை மீண்டும் பலப்படுத்தி வெற்றி பாதையில் கொண்டு செல்ல முயல்கிறார். ஆனால், எடப்பாடி பழனிசாமி தனது முடிவில் உறுதியாக இருந்து வருகிறார். இதுவே தொடர்ந்தால், கட்சி மேலும் பிளவுபட வாய்ப்பாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.                                         

மேலும் படிக்க: 10 சவரன் நகைக்காக தாயை கொன்ற பெண்.. காதலனுடன் போட்ட பகீர் திட்டம்.. சிக்கியது எப்படி?
 

Add Zee News as a Preferred Source
TAGS:
AIADMK