அதிமுகவில் இருந்து 15 எம்எல்ஏக்கள் வெளியில் வர தயாராக இருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதனால், அதிமுகவில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், இன்னும் 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்குமா என்ற கேள்வி எழுந்து இருக்கிறது.
Maduranthakam Dharapuram Byelection: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்வடைய உள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்காளர்களுக்கு சில வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மதுராந்தகம் இடைத்தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரப்புரையில் பேசுகையில், தவெக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட எதிர்ப்பு தெரிவிக்கின்றன. ஆனால் முதலமைச்சர் வாய் திறக்கவில்லை. விவசாய பெருமக்கள் கொதித்துப் போய் இருக்கிறார்கள். தவெக ஆட்சிக்கு வர ஆதரவு தந்த கம்யூனிஸ்ட் கட்சிகளே அவர்களை எதிர்த்துப் போட்டியிடுகின்றன; தவெக வேட்பாளர் ஜெயிக்கக் கூடாது என்று சொல்கிறார்கள். அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், அம்மா, நான் பணியாற்றிய அறை இவருக்குப் போதவில்லையாம். தலைமைச் செயலகத்தில் பத்து கோடி செலவில் அலுவலகத்தை மாற்றி அமைத்த காஸ்ட்லி முதலமைச்சர் இவர். விவசாயிகளுக்குத் தேர்தல் வாக்குறுதியில் ஐந்து ஏக்கருக்குள் இருந்தால் முழுக் கடன் தள்ளுபடி, அதற்கு மேல் பாதி தள்ளுபடி என பேசியிருந்தார்.
தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில் அதிமுகவில் வெற்றிபெற்று,பின்னர் விலகி இப்போது போட்டியிடும் தவெக வேட்பாளர்கள் இருவரும் 35 கோடி ரூபாய் பணம் பெற்றுக் கொண்டு அங்கு சென்றதாக, அதிமுக மூத்த தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் குற்றச்சாட்டு
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பில், பொதுப்படையாக 15 ஆயிரம் சொல்லிட்டு ஒரு சில கம்பெனி 1000, 100, 200 என்றால் எவ்வளவு பேருக்கு அது வந்து வேலைவாய்ப்பு கொடுக்கிறது...? புரிந்துணர்வு ஒப்பந்தம் எப்போது வந்து சைன் பண்ணுவோம்...? ரெண்டாவது கேள்வி... புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான பண்ண பிறகு எப்போது வந்து அது கமிஷன் பண்ணப்படும்?. கமிஷன் என்றால் செயலாக்கத்துக்கு வருவது. அந்த செயலாக்கத்துக்கு வருவது எப்போது...? அந்த செயலாக்கம் வரும்போது எவ்வளவு பேருக்கு வந்து வேலைவாய்ப்பு நேர்முகமாக மறைமுகமாக வேலைவாய்ப்பை தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு உருவாக்கும்? எனவே இந்த வகையில வந்து பொதுப்படையான ஒரு ஒரு வெள்ளை அறிக்கை அதாவது வந்து ஒரு வெளிப்படையான அறிக்கை வேண்டும். அது வெளியிடுவதன் மூலமாகதான் வந்து பொதுமக்களுக்கு தெரியும். இல்லையென்றால், அவருடைய அந்த வெளிநாடு பயணமே பல்வேறு சர்ச்சைகள் இருக்கிறது. அதெல்லாம் நான் வந்து இங்கு வந்து பேசினால் கேஸ் போட்டாலும் போடுவார்கள். எனவே அதைப்பற்றி பேச விரும்பவில்லை. அதனால் அங்கு சென்ற நோக்கம் என்ன... அது வந்து நிறைவேறியதா...? அதுவே தமிழ்நாட்டு மக்களுடைய எதிர்பார்ப்பு, இளைஞர்களுடைய எதிர்பார்ப்பு... என பேசியிருந்தார்.
Edappadi Palanisamy: முதலமைச்சர் விஜய்யின் லண்டன் பயணத்தில் அவர் முதலீட்டை ஈர்க்கும் புகைப்படங்கள் ஏதும் வெளியாகவில்லை என்றும் வேறு புகைப்படங்கள்தான் வெளியாகி உள்ளன என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
Apsara Reddy Resigned : அதிமுகவின் கொள்கைப் பரப்பு துணைச் செயலாளர் மற்றும் செய்தி தொடர்பாளரான அப்ஸரா ரெட்டி, அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அவர் கடிதமும் எழுதி உள்ளார்.