SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

கரூர் சம்பவம்: அரசு வேலை ரத்து உத்தரவுக்கு இடைக்கால தடை - உச்சநீதிமன்றம் கேட்ட கேள்விகள்

Supreme Court : கரூர் கூட்டநெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட அரசு வேலையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

Written By Sudharsan G
Published: Aug 14, 2026, 12:23 PM IST | Updated: Aug 14, 2026, 01:55 PM IST
Join

Supreme Court : கரூர் கூட்டநெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அரசு வேலை வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அரசு வேலை வழங்க போடப்பட்ட அரசாணையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டது. கரூர் அரசுப்பணி அரசாணை ரத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இடைக்கால தடை

இந்நிலையில், கரூர் கூட்டநெரிசல் ஏற்பட்டு உயிரிழந்தோர் குடும்பத்திற்கு அரசுப் பணி அரசாணையை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.

உச்சநீதிமன்றம் எழுப்பிய கேள்விகள்

கரூர் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு பணி வழங்கியதில் மனுதாரருக்கு என்ன பிரச்னை? என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணமாகவோ, அரசுப் பணியாகவோ நிவாரணம் வழங்குவதில் என்ன தவறு? என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

கரூர் கூட்டநெரிசலில் உயிரிழந்தவர் தனது வீட்டின் ஒரு வருமானம் ஈட்டுபவர் என்றால் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கக் கூடாதா...? என்றும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

கரூர் கூட்டநெரிசல் என்பது துயர சம்பவம், இதில் அரசியல் செய்யக்கூடாது என மனுதாரரான நாம் தமிழர் கட்சி பிரமுகருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

உயர் நீதிமன்றம் உத்தரவு என்ன?

கரூர் கூட்டநெரிசலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சேர்ந்த 31 பேருக்கு முதலமைச்சர் விஜய் கடந்த ஜூலை 10ஆம் தேதி கரூரில் வைத்து அரசுப் பணிக்கான ஆணையை வழங்கினார். இதை ரத்து செய்யக்கோரி நாம் தமிழர் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி ஆகியவற்றின் நிர்வாகிகள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்தது.

அரசுப் பேருந்தில் சென்று விபத்தில் உயிரிழப்பவர்கள் குடும்பத்திற்கு அரசுப்பணி வழங்குவீர்களா...? என்றும்; சிவகாசி வெடிவிபத்தில் உயிரிழப்பவர்கள் குடும்பத்திற்கும் அரசுப்பணி வழங்கலாமா...? என மதுரை உயர்நீதிமன்றம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். கருணை அடிப்படையில் வேலை பெற பலர் காத்திருக்கும் நிலையில், கரூரில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு முன்னுரிமை ஏன்? என்றும் சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை கேள்வி எழுப்பி இருந்தது. 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

ZEENEWS TRENDING STORIES