SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

தமிழ்நாட்டில் வெளுக்கப்போகும் மழை! மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை..புயல் எப்போ வருது?

தமிழகத்தில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. இதையடுத்து, பல்வேறு சுற்றுலா தளங்கள் மூடப்பட்டிருக்கிறது. மீனவர்களும் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து முக்கிய அப்டேட்ஸ்களை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written By Yuvashree M
Published: Oct 24, 2026, 09:42 AM IST | Updated: Oct 24, 2026, 10:29 AM IST
Join

தமிழ்நாட்டில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுபெற்றுள்ளது. இது தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுபெறவும் வாய்ப்பிருக்கிறது. இதனால், கன்னியாகுமரி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில்  பரவலாக கனமழை பெய்து வருவதையொட்டி, அப்பகுதிகளில் உள்ள சுற்றுலா தளங்கள் மூடப்பட்டிருக்கிறது. மேலும் மீனவர்களும் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.

புயலாக உருமாற வாய்ப்பு!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியிருப்பதை அடுத்து, பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதையடுத்து, தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றிருக்கிறது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் கேரளம் கடலோர பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதியும் தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுபெற்றது என்று வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்திருக்கிறார்.

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற வாய்ப்பிருபதால், 5 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதே போல, தமிழ்நாட்டின் 33 மாவட்டங்களில் இன்ரு கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இது, நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, வரும் அக்டோபர் 26ஆம் தேதி ‘அர்னாப்’ புயலாக மாற வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | தமிழகத்தின் இந்த 3 பகுதிகளில் நிலச்சரிவு அபாயம்.. வெதர்மேன் எச்சரிக்கை!

முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், சுமார் 1.5 கி.மீ உயரம் வரை தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அடனை ஒட்டியிருக்கும் லட்சத்தீவு பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சியிலிருந்து, வடக்கு தமிழக கடலோர பகுதிகள் வரை, கேரளா வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது என்று குறிப்பிட்டிருந்தது.

இதன் காரணமாக, நாளை நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை, பெரம்பலூர், அரியலூர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!

அக்டோபர் 25ஆம் தேதியான ஞாயிற்றுக்கிழமையான நாளை முதல் மீன்பிடிக்க மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மீன்பிடிக்க சென்ற அனைத்து வகையான படகுகளும் இன்று இரவுக்குள் கரை திரும்ப அறிவுருத்தப்பட்டுள்ளது. நாளை முதல் அக்டோபர் 29ஆம் தேதி வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்லக்கூடாது என மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க | Tamil News LIVE : தமிழகத்தில் பரவலாக மழை! புயல் உருவாக வாய்ப்பு, சுற்றுலா தளங்கள் மூடல்-முக்கிய செய்திகள்

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.

ZEENEWS TRENDING STORIES