)
பருவமழை தீவிரிமடைவதையொட்டி, வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதை தெரிவித்திருக்கிறார்.
கொடைக்கானல், குற்றாலம், உதகை, மேகமலை, தேக்கடி என மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளுக்கு செல்வதை அடுத்த 4 நட்களுக்கு தவிர்ப்பது நல்லது என கூறியுள்ளார்.
அருவிகள் நீர்வீழ்ச்சிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும், கடல் சீற்றத்தை கருத்தில் கொண்டு மக்கள் அங்கு குளிப்பதை தவிர்க்க் தவிர்க்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கான தலைமை பயிற்சியாளராக கைரன் பொல்லார்ட் நியமனம். (மேலும் படிக்க)
கனமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது; உதகையில், தீட்டுக்கள் பகுதியில் கனமழை காரணமாக தடுப்புச்சுவர் இடிந்து விழுந்ததில், கார்கள் அப்பளம் போல நொறுங்கியது. காருக்குள் இருந்தவர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், இந்த காருடன் சேர்த்து 6 பைக்குகளும் இடிபாடுகளில் சிக்கியுள்ளன. அதே போல கொடைக்கானலில், தொடர் மழையால் மண் சரிவு ஏற்பட்டு துண்டிக்கப்பட்ட சாலைகளால் பெரியகுளம் மற்றும் கொடைக்கானல் ஆகிய இரு நகரங்களுக்கும் செல்ல முடியமல் கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. இதையடுத்து, பல்வேறு சுற்றுலா தளங்கள் மூடப்பட்டிருக்கிறது. மீனவர்களும் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து முக்கிய அப்டேட்ஸ்களை இங்கு தெரிந்து கொள்வோம். (மேலும் படிக்க)
தமிழகத்தில் உள்ள சில மலைப்பகுதிகளில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், இதனால் நிலச்சரிவு மற்றும் மலைச்சரிவுகள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார். (மேலும் படிக்க)
வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றது. இதையடுத்து மத்திய கிழக்கு, அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது, இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக மாறும் என கணிக்கபப்ட்டிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
கனமழையால் மக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் நிலை நிலவுவதால், பொதுமக்கள் யாரும் கொடைக்கானலுக்கு தேவையின்றி பயணிப்பதை தவிர்க்குமாறு, காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார் கேட்டுக்கொண்டுள்ளார். (மேலும் படிக்க)
Tamil News LIVE Updates : தமிழ்நாட்டில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுபெற்றுள்ளது. இது தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுபெறவும் வாய்ப்பிருக்கிறது. இதனால், கன்னியாகுமரி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருவதையொட்டி, அப்பகுதிகளில் உள்ள சுற்றுலா தளங்கள் மூடல். இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.