• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை: முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டு அட்டை பெறுவது எப்படி?

ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை: முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டு அட்டை பெறுவது எப்படி?

தமிழ்நாடு மக்கள் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை பெற்றுக் கொள்ள வழிவகுக்கும் முதலமைச்சர் மருத்துவக் காப்பீடு அட்டை பெறுவது எப்படி? என்பதை இங்கே விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்

Written ByKarthikeyan Sekar
Published: Aug 08, 2026, 11:56 AM IST|Updated: Aug 08, 2026, 12:07 PM IST
joinshare
ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை: முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டு அட்டை பெறுவது எப்படி?
Image Credit: Chief Ministers Comprehensive Health Insurance Scheme Tamil Nadu

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
திருச்சி : ரூ.1 லட்சம் வரை உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்! முழு விவரம்

திருச்சி : ரூ.1 லட்சம் வரை உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்! முழு விவரம்

2

கார் புதுசா வாங்கப்போறீங்களா? என்னென்ன மாடல்கள், என்னென்ன விலை? விவரம் இங்கே

3

2014இல் பும்ராவை ஆர்சிபி அணி தவறவிட்ட கதை... பார்த்தீவ் பட்டேல் சொன்னது!

4

தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு! ஊதியம், நிலுவைத் தொகை, ஓய்வு வயது குறித்த முழு விவரம்!

5

மேற்கு வங்கம், அசாம் இடைத்தேர்தல்: பாஜகவின் சாதனை வெற்றி - முடிவுகள் இதோ

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

தமிழ்நாட்டில் உள்ள ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு நவீன மற்றும் உயர்தர மருத்துவச் சிகிச்சைகளை அரசு மற்றும் முன்னணி தனியார் மருத்துவமனைகள் மூலம் இலவசமாக வழங்கும் நோக்கில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசால் தொடங்கப்பட்டு, அரசுப் பொதுத்துறை நிறுவனமான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி மூலம் இத்திட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது. இக்காப்பீட்டு அட்டையைப் பெற விண்ணப்பிக்கும் முறை, தகுதிகள் மற்றும் ஆவணங்கள் குறித்த முழுமையான தகவல்கள் கீழே விரிவாக பார்க்கலாம்

திட்டத்தின் சிறப்பம்சங்கள்

இத்திட்டத்தின் கீழ் குடும்பம் ஒன்றுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை கட்டணமில்லா இலவச மருத்துவ சிகிச்சை வழங்கப்படுகிறது.

சிகிச்சை முறைகள்: பச்சிளங்குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை முறைகள் உட்பட 1,000-க்கும் மேற்பட்ட மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சைகள், தொடர் சிகிச்சை முறைகள் மற்றும் நோய் அறிதல் பரிசோதனைகளுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

முக்கிய சிகிச்சைகள்: புற்றுநோய் சிகிச்சை, சிறுநீரக டயாலிசிஸ், இதய மாரடைப்பு மற்றும் திறந்த இதய அறுவை சிகிச்சைகள், கர்ப்பப்பை கட்டிகள் அகற்றுதல், விபத்து மற்றும் எலும்பு முறிவு சிகிச்சைகள், அவசரகால தீவிர சிகிச்சைகள் எனப் பல சிகிச்சைகள் இதில் இலவசமாக அளிக்கப்படுகின்றன.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

1. குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.1,20,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

2. தமிழ்நாட்டில் செல்லுபடியாகும் ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பத்தினரின் பெயர்கள் அதில் இடம்பெற்றிருக்க வேண்டும்.

சிறப்புத் தகுதிகள்:

ஆதரவற்றோர்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள்.

இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வாழும் குடும்பங்கள்.

ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனங்களில் வசிப்பவர்கள் (வருமானச் சான்று இன்றி பயன்பெறலாம்).

தேவையான ஆவணங்கள்

ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வருமானச் சான்றிதழ், குடும்ப உறுப்பினர்கள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்,

மருத்துவக் காப்பீட்டு அட்டை பெறுவது எப்படி?

தமிழ்நாடு அரசின் சிறப்பு முகாம்கள், உங்கள் பகுதிக்குட்பட்ட வட்டார சுகாதார அலுவலகம் அல்லது மாவட்டச் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அலுவலகத்தை அணுகி விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுச் சமர்ப்பிக்கலாம். மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட மையத்திற்குச் சென்று, ஆவணங்களைச் சமர்ப்பித்து, பயோமெட்ரிக் அங்கீகாரம் மற்றும் புகைப்படம் எடுத்து உடனடியாக அட்டை பெற்றுக்கொள்ளலாம்.

அரசு முதன்மை மருத்துவமனைகள்: மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இயங்கும் காப்பீட்டுத் திட்ட உதவி மையங்கள் மூலமும் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைன் சேவை மற்றும் கட்டணமில்லா உதவி எண் - ஆன்லைன் விவரங்கள்: இத்திட்டம் குறித்த தகவல்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் பட்டியல் மற்றும் உங்களது அட்டையின் நிலையைத் தெரிந்துகொள்ள cmchistn.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடலாம்.

24x7 கட்டணமில்லா சேவை எண்: இத்திட்டம் தொடர்பான சந்தேகங்கள், அவசர உதவிகள் மற்றும் புகார்களுக்கு 24 மணி நேரமும் இயங்கும் 1800 425 3993 என்ற இலவசத் தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

Add Zee News as a Preferred Source
TAGS:
TN Govt Schemes