SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

விவசாயிகளுக்கு ரூ.3.60 லட்சம் வரை மானியம்! தட்கல் மின் இணைப்பு பெற தமிழ்நாடு அரசு அழைப்பு!

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் ரூ.3.60 லட்சம் வரை மானியம் கிடைக்கும் தட்கல் மின் இணைப்பு பெற விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

Written By Karthikeyan Sekar
Published: Oct 28, 2026, 02:44 PM IST | Updated: Oct 28, 2026, 02:54 PM IST
Join

"வளமிகு வேளாண்மை உதவித்திட்டம்" கீழ் ஆதிதிராவிடர் விவசாயிகள் மானியத்தில் தட்கல் மின் இணைப்பு பெற விண்ணப்பிக்கலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் துர்காமூர்த்தி அறிவித்துள்ளார்.  சமூக நீதித்துறையின் சார்பில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் ஆதிதிராவிடர் விவசாயிகளின் பாசன வசதி, வேளாண் உற்பத்தித் திறன் மற்றும் வருமானத்தை மேம்படுத்தும் நோக்கில் "வளமிகு வேளாண்மை உதவித்திட்டம்" 2026-2027-ஆம் நிதியாண்டில் செயல்படுத்தப்பட உள்ளது.

பட்ஜெட்டில் அறிவிப்பு

சமூக நீதித்துறை அமைச்சர் சட்டமன்றப் பேரவையில், 2026-2027 பட்ஜெட்டில் அறிவித்திருந்தபடி, வளமிகு வேளாண்மை உதவித்திட்டத்தின்கீழ் ஆதிதிராவிட விவசாயிகள் 1,000 பேருக்கு தட்கல் மின்இணைப்பு வழங்க தமிழக அரசு ரூ.26.09 கோடியை ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஆதிதிராவிட விவசாயிகள் பாசன வசதிகளை மேம்படுத்தி, வேளாண் உற்பத்தியைப் பெருக்கவும், விவசாய வருமானத்தை உயர்த்தவும் வழிவகை செய்யப்படுகிறது. விவசாய உற்பத்திக்குத் தேவையான மின் மோட்டார் குதிரைத்திறனுக்கேற்ப மின் இணைப்பு பெறுவதற்கான செலவில் 90 சதவீதம் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்திடம் தாட்கோ மானியமாக வழங்கும்.

மானியம் எவ்வளவு கிடைக்கும்?

அதன்படி, 5 HP மின் மோட்டாருக்கான மின் இணைப்பு கட்டணம் ரூ.2.50 இலட்சம் எனில், பயனாளி ரூ.25,000/- மட்டும் பங்குத்தொகையாக செலுத்த வேண்டும். மீதமுள்ள ரூ.2.25 லட்சம் தாட்கோ மூலம் மானியமாக வழங்கப்படும். 7.5 HP மின் மோட்டாருக்கான மின் இணைப்பு கட்டணம் ரூ.2.75 லட்சம் எனில், பயனாளி ரூ.27,500/- செலுத்த வேண்டும். மீதமுள்ள ரூ.2.48 லட்சம் தாட்கோ மூலம் மானியமாக வழங்கப்படும். அதேபோன்று, 10 HP மின் மோட்டாருக்கான மின் இணைப்பு கட்டணம் ரூ.3 லட்சம் எனில், பயனாளி ரூ.30,000/- மட்டுமே செலுத்த வேண்டும். மீதமுள்ள ரூ.2.70 லட்சம் தாட்கோ மூலம் மானியமாக வழங்கப்படும்.

15 HP மின் மோட்டாருக்கான மின் இணைப்பு கட்டணம் ரூ.4 லட்சம் எனில், பயனாளி ரூ.40,000/- பங்குத்தொகையாக செலுத்த வேண்டும். மீதமுள்ள ரூ.3.60 லட்சம் தாட்கோ மூலம் மானியமாக வழங்கப்படும். இத்தொகைகள் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்திற்கு செலுத்தப்பட்டு, விரைவு மின் இணைப்பு வழங்க பரிந்துரைக்கப்படும். இத்திட்டத்தில் பயன் பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஆதிதிராவிட இனத்தைச் சார்ந்தவராகவும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி?

மேலும், விவசாய நிலம் விண்ணப்பதாரரின் பெயரில் சொந்தமாக இருப்பதுடன் அதற்கான பட்டாவும் இருக்க வேண்டும். அந்நிலத்தில் கிணறு அல்லது ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டிருக்க வேண்டும். தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் மின் இணைப்பு கோரி பதிவு செய்திருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர் ஏற்கனவே தாட்கோ திட்டங்களின் கீழ் பயன் அடைந்தவராக இருக்கக்கூடாது. மேற்கண்ட தகுதிகளுடைய ஆதிதிராவிட விவசாயிகள் https://tahdco.com/ என்ற தாட்கோ இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்து இத்திட்டத்தில் பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.

ZEENEWS TRENDING STORIES