• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி! துறைத் தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால் பணி நீக்கம்

அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி! துறைத் தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால் பணி நீக்கம்

Tamil Nadu Government Employees Alert: அரசு ஊழியர்கள் 5 ஆண்டுக்குள் துறைத் தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால் பணி நீக்கம் என பள்ளிக்கல்வித் துறை அதிரடி உத்தரவிட்டுள்ளது.

Written ByKarthikeyan Sekar
Published: Nov 17, 2026, 13:57 IST|Updated: Nov 17, 2026, 14:10 IST
joinshare
அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி! துறைத் தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால் பணி நீக்கம்
Image Credit: Tamil Nadu Government Employees Alert

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
புதுச்சேரியில் அச்சுறுத்தும் டெங்கு: சிறப்பு வாா்டு அமைக்கப்படுவதாக முதல்வா் என்.ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரியில் அச்சுறுத்தும் டெங்கு: சிறப்பு வாா்டு அமைக்கப்படுவதாக முதல்வா் என்.ரங்கசாமி அறிவிப்பு

2

TNPSC குரூப் 4 தேர்வர்களுக்கு மகிழ்ச்சி செய்தி! கணினி பட்டதாரிகளுக்கு இந்த சான்றிதழ் தேவையில்லை

3

2026ல் அதிக வசூல் செய்த டாப் 6 இந்திய திரைப்படங்கள்! லிஸ்ட்ல ஒரே ஒரு தமிழ் படம்..

4

இலவச மென்பொருள் மற்றும் நிதி மேலாண்மை பயிற்சி - விண்ணப்பிப்பது எப்படி?

5

சென்னை: இந்த பகுதிகளில் நாளை (நவம்பர் 25) குடிநீர் விநியோகம் நிறுத்தம்... உங்க ஏரியாவில் தண்ணீர் வருமா?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Tamil Nadu Government Employees Alert: தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களின் தகுதிகாண் பருவம் (Probation Period) மற்றும் துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவது தொடர்பாக, பள்ளிக்கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் (CEOs) மிக முக்கியமான மற்றும் கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். நவம்பர் 16, 2026 நாளிட்ட இந்தச் செயல்முறைகள், துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெறாமல் காலதாமதம் செய்து வரும் அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

மேலும் படிக்க | 10 ஆம் வகுப்பு கல்வித் தகுதி - மாதம் 9000 உதவித்தொகை : விண்ணப்பிப்பது கொள்வது எப்படி?

யாருக்கெல்லாம் இந்த உத்தரவு பொருந்தும்?

பள்ளிக்கல்வித் துறையின் கீழ் கருணை அடிப்படை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், கீழ்நிலைப் பதவியிலிருந்து பணி மாறுதல், பதவி உயர்வு மற்றும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணியிலிருந்து பள்ளிக்கல்வித் துறைக்கு ஈர்க்கப்பட்டவர்கள் எனப் பல்வேறு முறைகளில் நியமனம் செய்யப்பட்ட உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள் மற்றும் தட்டச்சர்கள் ஆகியோருக்கு இந்த உத்தரவு நேரடியாகப் பொருந்தும். இவர்கள் தங்களது பணிக்காலத்தில் நிர்ணயிக்கப்பட்ட தகுதிகாண் பருவத்தை முறையாக முடிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  

சட்ட விதி 31(4) சொல்வது என்ன?

தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டம், 2016-ன் பிரிவு 31(4)-ன்படி, ஒரு அரசு ஊழியர் தனக்கு நிர்ணயிக்கப்பட்ட துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்காக, அவரது தகுதிகாண் பருவத்தை அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் வரை மட்டுமே நீட்டிப்பு செய்ய முடியும். இந்த அதிகபட்ச ஐந்து ஆண்டு காலக்கெடுவிற்குள்ளும் சம்பந்தப்பட்ட ஊழியர் துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெறத் தவறினால், சட்டப்படி கீழ்க்கண்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது:  

பதவி உயர்வு / பணி மாறுதல் மூலம் வந்தவர்கள்: ஐந்து ஆண்டுகளுக்குள் தேர்ச்சி பெறாவிட்டால், அவர்கள் மீண்டும் தங்களது பழைய கீழ்நிலைப் பதவிக்கே திருப்பி அனுப்பப்படுவார்கள். மேலும், அந்தப் பணியிடத்திற்குத் தகுதியும் திறமையும் வாய்ந்த அடுத்த நிலையில் உள்ள இளநிலை ஊழியருக்கு பதவி உயர்வு வழங்கப்படும்.  

நேரடி நியமனம் மூலம் வந்தவர்கள்: நேரடி நியமனம் அல்லது கருணை அடிப்படையில் பணியில் சேர்ந்தவர்கள் ஐந்து ஆண்டுகளுக்குள் துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெறத் தவறினால், அவர்களது தகுதிகாண் பருவம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு, நிரந்தரமாகப் பணியிலிருந்தே நீக்கம் (Probation Terminated) செய்யப்படுவார்கள்.  

நியமன அலுவலர்களுக்கு அதிகாரம் இல்லை எனத் திட்டவட்டம்

பள்ளிக்கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ள இந்தச் சுற்றறிக்கையில், அரசுக் கடிதத்தை மேற்கோள்காட்டி மிக முக்கியமான எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. அதாவது, 5 ஆண்டுகள் கடந்தும் துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெறாத ஊழியர்களின் தகுதிகாண் பருவத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, அவர்களைப் பணியிலிருந்து விடுவிப்பு செய்ய வேண்டுமே தவிர, விதிகளை மீறி அவர்களைத் தொடர்ந்து பணியில் நீடிக்க அனுமதிக்க எந்தவொரு நியமன அலுவலருக்கும் அதிகாரம் இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தல்

எனவே, இனிவரும் காலங்களில் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டம், 2016-ன் பிரிவு 31(4)-ஐக் கறாராகப் பின்பற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அனைத்து அலுவலகங்களிலும் பணிபுரியும் உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள் மற்றும் தட்டச்சர்களின் பணிப் பதிவேடுகளை ஆய்வு செய்து, உரிய காலத்திற்குள் தகுதிகாண் பருவம் முடித்தல் தொடர்பாக விதிகளின்படி உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.  
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu