• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /ஒரே இடத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு செக்! தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு

ஒரே இடத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு செக்! தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு

Tamil Nadu government employees : ஒரே இடத்தில் 5, 10 ஆண்டுகள் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு அரசு அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இது குறித்து இங்கே விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்

Written ByKarthikeyan Sekar
Published: Sep 19, 2026, 02:29 PM IST|Updated: Sep 19, 2026, 02:34 PM IST
joinshare
ஒரே இடத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு செக்! தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு
Image Credit: Tamil Nadu government employees

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

2

ஷேர் மார்க்கெட்டில் லாபம் பார்க்க கைகொடுக்கும் AI... நிறுவனங்களின் ஜாதகத்தையே அலசும் Kwala Intel!

3

வீட்டில் இருந்தே போராட்டம் நடத்தலாம்.. ‘ஜந்தர் மந்தர் சலோ’ வீடியோ கேம் அறிமுகம்!

4

முதல்வர் விஜயின் கோவை விசிட்: ரூ.438.86 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைப்பு!

5

16 வயது சிறுமி எழுதிய சாதனை புத்தகம்! PCI தலைவர் தேவேந்திர ஜஜாரியா பாராட்டு…

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Tamil Nadu government employees : தமிழக அரசுத் துறைகளின் கீழ் செயல்படும் பல்வேறு இயக்குநரகங்கள் மற்றும் தலைமை அலுவலகங்களில், ஒரே பணி இடத்தில் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து பணியாற்றி வரும் ஊழியர்களின் விவரங்களைச் சேகரிக்க அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. நிர்வாகச் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும், முறைகேடுகளைத் தடுக்கவும் இத்தகைய நடவடிக்கையை அரசு கையில் எடுத்துள்ளது.

விவரங்கள் கோரப்பட்டுள்ள முக்கியப் பதவிகள்

அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையின்படி, தமிழ்நாடு அமைச்சுப் பணியின் கீழ் வரும் நிர்வாக அலுவலர், இளநிலை நிர்வாக அலுவலர், அலுவலகக் கண்காணிப்பாளர், உதவியாளர் ஆகிய பணியிடங்களில் உள்ளவர்களின் பட்டியல் கேட்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களில் ஒரே இடத்தில் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு மேலாகவோ அல்லது 10 ஆண்டுகளுக்கு மேலாகவோ பணியாற்றி வருபவர்களின் முழுமையான பணிக்கால விவரங்களை உடனடியாகச் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பதவி உயர்வு பெற்று மீண்டும் பழைய இடத்திற்கே திரும்பியவர்கள் மீது கவனம்

பொதுவாக அரசு விதிகளின்படி, ஊழியர்களுக்குப் பதவி உயர்வு வழங்கப்படும்போது அவர்கள் வேறு இடங்களுக்குப் பணி மாறுதல் செய்யப்படுவது வழக்கம். ஆனால், சிலர் பதவி உயர்வு பெற்று புதிய இடத்திற்குச் சென்ற சில நாட்களிலேயே, பல்வேறு நிர்வாகக் காரணங்களைக் காட்டியோ அல்லது மாற்றுப்பணி மூலமாகவோ மீண்டும் தங்களது பழைய இடத்திற்கே பணிக்குத் திரும்பிவிடுகின்றனர்.  இத்தகைய உத்திகளைக் கையாண்டு ஒரே அலுவலகத்தில் தொடர்ந்து முகாமிட்டுள்ள ஊழியர்கள் யார், அவர்கள் எப்போது மீண்டும் பழைய இடத்திற்குத் திரும்பினார்கள், அதற்கான காரணம் என்ன உள்ளிட்ட விவரங்களையும் கட்டாயம் அறிக்கையில் இணைத்து அனுப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.  

அரசின் இந்த நடவடிக்கைக்குக் காரணம் என்ன?

குறிப்பாகக் கணக்கு, நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் தொடர்புப் பிரிவுகளில் ஊழியர்கள் ஒரே அலுவலகத்தில் பல ஆண்டுகள் தொடர்ந்து நீடிக்கும்போது பல்வேறு நிர்வாகச் சிக்கல்கள் ஏற்படுவதாகக் கருதப்படுகிறது. நீண்ட காலம் ஒரே இடத்தில் இருப்பதால் நிர்வாகத்தில் புதிய மாற்றங்களோ உத்வேகமோ ஏற்படுவதில்லை. மேலும், ஒப்பந்ததாரர்கள் மற்றும் இடைத்தரகர்களுடன் தேவையற்ற நெருங்கிய தொடர்புகள் ஏற்பட்டு, அதன்மூலம் ஊழல் மற்றும் நிதி முறைகேடுகள் நிகழ்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக அரசு கருதுகிறது. இத்தகைய சூழலை மாற்றி நிர்வாகத்தை ஒழுங்குபடுத்தவே இந்தப் பட்டியல் கோரப்பட்டுள்ளது.

கெடு விதிப்பு

இந்த விவரங்களை அனைத்து இயக்குநரகங்களும் தங்களின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அலுவலகங்களில் இருந்து ஒருங்கிணைத்து அறிக்கையாகத் தயார் செய்ய வேண்டும். உரிய படிவத்தில் பூர்த்தி செய்யப்பட்ட முழுமையான விவரங்களை வரும் 23.09.2026-க்குள் அரசுக்குக் கட்டாயம் அனுப்பி வைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இந்தச் சுற்றறிக்கை அதி அவசரமானது (MOST URGENT) எனக் குறிப்பிடப்பட்டுள்ளதால், அரசுத் துறை வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu