• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /குறைவான விலையில் அரிசி, துவரம் பருப்பு - விலைப் பட்டியலை வெளியிட்ட தமிழ்நாடு அரசு

குறைவான விலையில் அரிசி, துவரம் பருப்பு - விலைப் பட்டியலை வெளியிட்ட தமிழ்நாடு அரசு

தமிழ்நாடு அரசு சந்தையை விலையை விட மிக குறைவான விலையில் அரிசி, துவரம் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்கிறது. இதற்கான விலைப் பட்டியலை அரசு வெளியிட்டுள்ளது.

Written ByKarthikeyan Sekar
Published: Oct 16, 2026, 11:22 AM IST|Updated: Oct 16, 2026, 11:43 AM IST
joinshare
குறைவான விலையில் அரிசி, துவரம் பருப்பு - விலைப் பட்டியலை வெளியிட்ட தமிழ்நாடு அரசு
Image Credit: Tamil Nadu Government Price List

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
சென்னையில் மேக வெடிப்பு? மிக்ஜாம் புயலுக்கு பின் அதி கனமழை - உதவி எண் அறிவிப்பு

சென்னையில் மேக வெடிப்பு? மிக்ஜாம் புயலுக்கு பின் அதி கனமழை - உதவி எண் அறிவிப்பு

2

கொல்கத்தாவில் பயங்கரம்.. துர்கா பூஜை கூட்ட நெரிசலில் 17 பேர் பலி! என்ன நடந்தது?

3

Test Twenty: புதிதாக அறிமுகமாகும் கிரிக்கெட் ஃபார்மெட்.. டெஸ்ட் ட்வென்டி என்றால் என்ன? Explained

4

அஞ்சல் துறை ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு: எவ்வளவு கிடைக்கும்? கணக்கீடு இதோ

5

ADMK-வில் நடிகர் தனுஷ்? அதிமுகவின் ராஜேந்திர பாலாஜி சொன்ன மேட்டர்?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

தமிழ்நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் தடையற்ற விநியோகத்தை உறுதி செய்யும் பொருட்டு சன்னரக அரிசி கிலோ ரூ.30/-க்கு அமுதம் மற்றும் கூட்டுறவு அங்காடிகள் மூலம் விற்பனை நாட்டிலேயே, அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தை (Universal PDS) செயல்படுத்தும் ஒரு சில மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும். இதன் மூலம், முன்னுரிமை (PHH), முன்னுரிமை அல்லாத (Non-PHH) மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா (AAY) அட்டைதாரர்கள் உட்பட, மாநிலத்தில் உள்ள சுமார் 2.29 கோடி குடும்ப அட்டைகளில் இணைக்கப்பட்டுள்ள 7.01 கோடி பயனாளிகளுக்கு தமிழ்நாடு அரசு அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கி வருகிறது.

தமிழ்நாடு அரசு அடுத்த ஓராண்டிற்கு நியாய விலைக் கடைகள் மூலம் பொதுமக்களுக்குத் தடையின்றி அரிசி வழங்கப்படுவதை உறுதி செய்யும். மேலும், நியாய விலைக் கடைகளில் அரிசியுடன் சேர்த்து வழங்கப்படும் சர்க்கரை, பாமாயில் மற்றும் பருப்பு ஆகியவை அடுத்த மூன்று மாதங்களுக்குத் தேவையான இருப்பு உள்ளதால் இப்பொருட்களின் தொடர் விநியோகத்தையும் தமிழ்நாடு அரசு உறுதி செய்யும்.

தமிழ்நாட்டில் உள்ள நெல் வணிகர்கள் ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களிலிருந்து பெருவாரியாக சன்ன ரக அரிசியை கொள்முதல் செய்கின்றனர். இந்த ஆண்டு எல்-நினோ விளைவினால் ஏற்பட்ட தாக்கத்தின் மூலம் நெல் சாகுபடி மற்றும் சன்ன ரக அரிசி வரத்து குறைந்ததால் வெளிச்சந்தையில், நெல் மற்றும் அரிசிக்கான தட்டுப்பாடு அதிகரித்து, அவற்றின் விலையும் கணிசமான அளவில் உயர்ந்துள்ளது.

உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறையின் கீழ் இயங்கும் விலை கண்காணிப்பு பிரிவானது (Price Monitoring Cell), அனைத்து மாவட்டங்களிலிருந்தும் 67 அத்தியாவசியப் பொருட்களின் விலையை கண்காணித்து வாராந்திர ஆய்வறிக்கையை அரசுக்கு அனுப்பி வருகிறது. மேலும், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் தலைமையில் 3 மாதங்களுக்கு ஒரு முறை அல்லது தேவைப்படும் நேர்வுகளில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில் விலை கண்காணிப்புக் குழுக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இக்கூட்டங்களில், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைப் பற்றி ஆய்வு செய்யும் பொழுது "தமிழ்நாட்டில் 2022ஆம் ஆண்டு ஒரு கிலோ அரிசி சராசரியாக ரூ.48 என்ற விலைக்கு விற்கப்பட்டது. இந்த விலை 2024ஆம் ஆண்டு சற்றே உயர்ந்து ரூ.57 என்ற அளவில் விற்கப்பட்டது. 2025ஆம் ஆண்டு விலை சிறிதளவு குறைந்து கிலோ ஒன்றிற்கு ரூ.55 என்றளவில் விற்கப்பட்டது. இந்நிலையில், எல்-நினோ தாக்கத்தினால் ஏற்பட்ட விளைச்சல் குறைவின் காரணமாக இவ்வாண்டு செப்டம்பர் மாதத்தில், ஒரு கிலோ அரிசி விலை சராசரியாக ரூ.61 என்ற அளவிற்கு கணிசமாக உயர்ந்துள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் 2022ஆம் ஆண்டு துவரம் பருப்பின் விலை சராசரியாக கிலோ ஒன்றிற்கு ரூ.120 என்று இருந்தது. 2023ஆம் ஆண்டில் விலை அதிக அளவில் உயர்ந்து சராசரியாக ரூ.173 என்ற அளவில் இருந்தது.

ஆனால், 2025ஆம் ஆண்டு துவரம் பருப்பின் விலை பெருமளவு குறைந்து கிலோ ஒன்றிற்கு சராசரியாக ரூ.114 என்றளவில் விற்கப்பட்டது. இந்நிலையில், இவ்வாண்டு எல்-நினோ தாக்கத்தினால் ஏற்பட்ட விளைச்சல் குறைவின் காரணமாக செப்டம்பர் மாதத்தில், ஒரு கிலோ துவரம் பருப்பின் விலை சராசரியாக ரூ.134 என்ற அளவிற்கு கணிசமாக உயர்ந்துள்ளது" என தெரிய வந்தது . மேற்காணும் தரவுகளின் அடிப்படையில், கடந்த 4 ஆண்டுகளாக அத்தியாவசியப் பொருட்களான அரிசி மற்றும் துவரம் பருப்பு ஆகியவற்றின் விலையானது அதிக விளைச்சல் மற்றும் எல்-நினோ போன்ற பல்வேறு காரணங்களால், ஏற்ற இறக்கத்துடன் இருப்பது தெளிவாகிறது.

இந்த ஆண்டு, இச்சூழ்நிலையைச் சீர்செய்யும் நோக்கில் தமிழ்நாடு அரசால் முதற்கட்டமாக, தமிழ்நாடு முழுவதும் 25,000 மெ.டன் சன்னரக அரிசி 201 கூட்டுறவுத்துறை கடைகள் மற்றும் 49 அமுதம் அங்காடிகளின் மூலம் குறைந்த விலையில் அரிசி கிலோ ஒன்று ரூ.30 வீதம் வழங்கப்படும். பொதுமக்களின் தேவைக்கேற்ப 5 கிலோ வரை இவ்வார இறுதியிலிருந்து வழங்கப்படும்.

மேலும், முதற்கட்டமாக 500 மெ.டன் துவரம் பருப்பை NAFED நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்து, பொதுமக்களுக்கு கிலோ ஒன்றுக்கு ரூ.130/- வீதம் தமிழ்நாடு முழுவதுமுள்ள 250 அமுதம் மற்றும் கூட்டுறவுத்துறை அங்காடிகள் மூலம் குறைந்த விலையில் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அரசு ஏற்கெனவே வெங்காயத்தின் சந்தை விலை கிலோ ரூ.65 ஆக இருந்தபோது, விலைக் கட்டுப்பாட்டு நடவடிக்கையின் கீழ், தமிழ்நாட்டில் 2,500 மெட்ரிக் டன்னிற்கு மேலாக வெங்காயம் பொதுமக்களுக்கு கிலோ ரூ.35/- என்ற விலைக்கு கூட்டுறவுத்துறை அங்காடிகள் மற்றும் நியாய விலைக் கடைகள் மூலமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அரசால் இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

மேலும், மாவட்ட அளவில் அத்தியாவசியப் பொருட்களின் விலையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் பதுக்கலைத் தடுக்க, மாவட்ட வழங்கல் அலுவலர் அவர்களின் தலைமையில் வட்ட வழங்கல் அலுவலர், கூட்டுறவு சங்கங்களின் சார்பதிவாளர், புள்ளியியல் துறை ஆய்வாளர் மற்றும் சிறப்பு வருவாய் ஆய்வாளர் ஆகியோரைக் கொண்டு மாவட்ட அளவிலான விலைக் கண்காணிப்புக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வுத் துறை காவல் அதிகாரிகளுக்கு, அத்தியாவசியப் பொருட்களின் பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தை விற்பனை ஆகியவற்றைக் கண்காணித்து, கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகப் பராமரிப்புச் சட்டத்தின்கீழ் தகுந்த குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதுமுள்ள அனைத்து அமுதம் மற்றும் கூட்டுறவுத்துறை அங்காடிகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், அரிசி, துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, மிளகாய், தனியா மற்றும் பூண்டு ஆகியவற்றின் விலையைக் கட்டுப்படுத்தும் விதமாக சந்தை விலையைவிட குறைவான விலையில் விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு.

ஒரு கிலோ புழுங்கல் பொன்னி அரிசி- ரூ.60
ஒரு கிலோ துவரம் பருப்பு - ரூ.130
ஒரு கிலோ உளுந்தம் பருப்பு - ரூ.140
ஒரு கிலோ பூண்டு - ரூ.240
ஒரு கிலோ மல்லி (தனியா) - ரூ.240
ஒரு கிலோ மிளகாய் - ரூ.330

மேற்காணும் நடவடிக்கைகளின் மூலம் தமிழ்நாடு அரசு பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் நியாயமான விலையில் கிடைப்பதை உறுதி செய்யும்.
தமிழ்நாடு அரசானது, உலகளாவிய காரணிகள் மற்றும் எல்-நினோ தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள பணவீக்கத்தின் தாக்கத்தைக் குறைக்கவும், அத்தியாவசியப் பொருட்களின் சீரான விநியோகத்தை உறுதி செய்யவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu